Medical Test For Heart Disease In Women: இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கைமுறை என்பது கடுமையான மாற்றத்திற்கு உள்ளாகி உள்ளது. ஆண், பெண் என்றில்லாமல் அனைவருமே சற்றே ஆரோக்கியமற்ற சூழலில் பணியாற்றிக்கொண்டும், படித்துக்கொண்டும் இருக்கிறோம். முன்பெல்லாம் 45 - 50 வயதான பின்னரே மாரடைப்பு குறித்த அச்சம் ஏற்பட்டிருந்த நிலையில், இன்றைய சூழலில் 30 - 35 வயதானவர்களுக்கு மாரடைப்பு வருவதை நம்மால் அடிக்கடி பார்க்க முடிகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் உணவு பழக்கவழக்கம், பணி சார்ந்த அழுத்தம், முறையற்ற தூக்கம் உள்ளிட்டவற்றை அடிப்படையாக சொல்லலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கு உதாரணமாக சமீபத்தில் சமூக வலைதள பிரபலம் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது, அதுகுறித்த அச்சத்தையும், 30 வயதை தாண்டியவர்கள் நிச்சயம் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகள் குறித்த விழிப்புணர்வையும் ஒருங்கே தெரிவிக்கிறது எனலாம். துனிசியா நாட்டைச் சேர்ந்த பிரபல மாடலும், சமூக வலைதள பிரபலமுமான ஃபர்ரா எல் காடி என்பவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என கூறப்படுகிறது. அவருக்கு வயது 36 ஆகும். இவரின் உயிரிழப்பு அவரின் ரசிகர்களையும், நெட்டிசன்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


மாரடைப்பால் உயிரிழப்பு...?


ஃபர்ரா அழகு பொருள்கள் மற்றும் வாழ்வியல் சார்ந்த தகவல்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடதன் மூலம் நன்கு அறியப்பட்டவர். மேலும் தனியார் கட்டுமான நிறுவனத்தில் கட்டட வடிவமைப்பாளராக பணியாற்றி வந்தார். இவர் தற்போது தனது விடுமுறை தினத்தை ஒரு கப்பலில் கொண்டாடிக்கொண்டிருந்தபோது திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | மாரடைப்பு அபாயத்தை தவிர்க்கலாம்.. இந்த யோகா ஆசனங்கள் செய்தால் போதும்


அவரின் உயிரிழப்பு குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் அறிவிக்கப்படவில்லை என்பதால் அவர் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்தாரா என்பது உறுதி செய்ய இயலவில்லை. இருப்பினும் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார் என கூறப்படுகிறது. 36 வயதில் ஒரு பெண்ணுக்கு மாரடைப்பு வருவதன் இயல்பானது அல்ல என்றாலும் அது சாத்தியமானதுதான் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள். பரபரப்பான வாழ்க்கைமுறை மற்றும் அழுத்தம் நிறைந்த வாழ்க்கை சூழல் ஆகியவை மாரடைப்புக்கு இட்டுச் செல்கிறது. 


இந்த சூழலில், தற்போதைய இளைஞர்கள் 30 வயதை தாண்டியதும் சில மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியமாகிறது. அதிலும் குறிப்பாக இதயம் சார்ந்த பரிசோதனைகளை நிச்சயம் மேற்கொள்ள வேண்டும். பெண்களுக்கான இதயம் சார்ந்த பரிசோதனைகள் குறித்தும், அதை ஏன் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் இதில் காணலாம்.


பெண்கள் செய்ய வேண்டிய பரிசோதனைகள்


Stress Test: சில உடற்பயிற்சிகள் மற்றும் மருந்துகளை கொடுப்பதன் மூலம் இதயத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படும். அதன்படி உங்களின் இதயம் அதனை எப்படி தாங்குகிறது என்பதை இதில் கண்டறிய முடியும்.


Echocardiogram: இதில் ஒலி அலைகள் பயன்படுத்தப்படும். குறிப்பாக இதயத்தின் அமைப்பு மற்றும் இயக்கத்தை இதன்மூலம் மதிப்பிடலாம்.


Lipid Profile Test: இதன்மூலம், ரத்தத்தில் Triglycerides மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை அறியலாம். அதிக கொலஸ்ட்ரால் இருப்பின் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.


ECG: இந்த பரிசோதனையில் இதயத்தின் மின் செயல்பாடு பதிவு செய்யப்படும். இதன்மூலம், இதயத்தின் அசாதாரணமான நிலையை கண்டறியலாம்.


அச்சத்தை தவிருங்கள்


இந்த பரிசோதனைகள் ஒருபக்கம் இருந்தாலும், பெண்கள் என்றாலும் சரி ஆண்கள் என்றாலும் சரி மன அழுத்தத்தை தவிருங்கள். மனநல மருத்துவரை அணுகுங்கள். நல்ல ஆரோக்கிய உணவுகளை உண்டு, அழுத்ததத்தை குறைத்து, சரியான அளவில் தூங்குவது உங்களுக்கு நன்மையை அளிக்கும், நீண்ட கால பலனையும் தரும். இதய நோய் குறித்த அச்சத்தையும் நீங்கள் தவிர்க்கலாம்.


(பொறுப்பு துறப்பு: பெண்களுக்கான இதய பரிசோதனை குறித்த இந்த தகவல்கள் மிகவும் பொதுவானவை ஆகும். இந்த பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். இந்த தகவல்களை Zee News உறுதிப்படுத்தவில்லை)


மேலும் படிக்க | என்றென்றும் இளமையுடன் இருக்கலாம்.. இந்த யோகா ஆசனங்கள் தினமும் செய்யுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ