Health Tips: உங்களை ‘FIT’ ஆக வைத்திருக்கும் DIET ப்ளான்கள்..!!
உங்களை ஆரோக்கியமாகவும் பிட் ஆகவும் வைத்திருப்பதில் நமது உணவு 70 சதவீதம் பங்கு வகிக்கிறது. தவறான உணவு தேர்வுகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களால் நாம் அடிக்கடி திணறுகிறோம்.
உங்களை ஆரோக்கியமாகவும் பிட் ஆகவும் வைத்திருப்பதில் நமது உணவு 70 சதவீதம் பங்கு வகிக்கிறது. தவறான உணவு தேர்வுகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களால் நாம் அடிக்கடி திணறுகிறோம். நீங்கள் சரியான உணவுகளை உட்கொள்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த, கீழ்கண்ட விபரங்களின் அடிப்படையில் உங்கள் உணவை தேர்வு செய்ய வேண்டும்.
டயட் அடிப்படைகள்
புரதம், கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள், கொழுப்புகள் மற்றும் தாதுக்கள் ஆரோக்கியமான உணவின் முக்கிய கூறுகள். உங்கள் அன்றாட உணவில் நீங்கள் எந்த வகையான பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் பால் சேர்க்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள இந்த அடிப்படை தகவல்கள் உதவும்.
பயணத்தின் போது ஆரோக்கியமான உணவு
நீங்கள் பயணம் செய்யும் போது, வெளியே போகும் போது ஆரோக்கியமாக சாப்பிடுவது உண்மையிலேயே சவாலான காரியம் தான். பயணத்தில் இருக்கும் போது. உணவக மெனுவில் காணப்படும் பல பொருட்கள் பொரித்த உணவுகளாக இருக்கும் இவை அனைத்தும் ஆரோக்கியமற்றவை. வெளியில் ஒரு சுவையான உணவை தேர்தெடுக்கும் அதே நேரத்தில் அது உங்கள் ஆரோக்கியத்தையும் பாதிக்காமல் இருக்க உணவில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும். சாலட்கள், ஆவியில் வேக வைத்த உணவுகளை தேர்ந்தெடுக்கலாம்.
ALSO READ | மாம்பழம் சாப்பிட்ட பின் எடுத்துக் கொள்ளக் கூடாத 5 உணவுகள்
ஆரோக்கியமான உணவுக்கு மாறுதல்
ஆரோக்கியமற்ற உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பது நடைமுறையில் சாத்தியமற்றது என்றாலும், குறைந்தபட்சம், இந்த உணவுகளை ஆரோக்கியமான மாற்று உணவுக்கு மாற்றுவதன் மூலம் உங்களளை திருப்தி படுத்திக் கொள்ளலாம்.
உங்கள் உணவைத் திட்டமிடவும்
ஆரோக்கியமான உணவுப் பழக்கம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்ற நோய்களின் அபாயத்தையும் குறைக்கும். நீங்கள் வகுக்கும் டயட் ப்ளான்கள் உங்கள் கலோரி அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும்.
ஊட்டச்சத்து
பெரும்பாலான பழங்கள் மற்றும் காய்கறிகள் உங்கள் உடலுக்கும் மனதுக்கும் உகந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன. இருப்பினும், ஆரோக்கியமான உடலை பெற அவற்றை சரியான விகிதத்தில் உட்கொள்வதும் முக்கியம்.
எடை இழப்புக்கான உணவு
துரித உணவு நிறைந்த இந்த உலகில் ஆரோக்கியமாக சாப்பிடுவது மற்றும் எடையை பராமரிப்பது ஒரு சவால். எடை இழப்புக்கு முயற்சி செய்யும் போது கொழுப்பு நிறைந்த உணவுகளில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யும்போது பெரிய சவால் காத்திருக்கும். இருப்பினும், இந்த சில டயட் உணவுகளை சாப்பிடுவது உங்களை வடிவத்தில் இருக்க உதவும்.
ALSO READ | ஆன்டிபாடி என்றால் என்ன; கொரோனா தொற்றுடன் போராட அது எவ்வாறு உதவுகிறது?
ஆரோக்கியமான சமையல்
நீங்கள் ஆரோக்கியமாக சாப்பிடுகிறீர்கள் என்பதை உறுதி செய்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, நீங்கள் சரியான சமையல் முறையைப் பயன்படுத்துவது, ஆரோக்கியமான பொருட்களை கொண்ட உங்கள் உணவைத் தயாரிப்பது ஆகியவை ஆகும். ஆரோக்கியமான சமையல் என்பது வெவ்வேறு வகை உணவுகளை உள்ளடக்கியது. முழு தானியங்கள், பால், உலர் பழங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள், பழங்கள் மற்றும் காய்கறி ஆகியவை அனைத்தும் உங்கள் உணவில் இருக்க வேண்டும்
கலோரி எண்ணிக்கை அதிகம் உள்ள உணவுகள்
ஐஸ்கிரீம்கள், பொரித்த உணவுகள் மற்றும் இனிப்புகள், சிக்கின் ஆகியவற்றை அதிகம் விரும்புகிறோம். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு உண்மையில் அவர்களுக்கு கலோரிகள் தெரியும். அதன் கலோரிகளை தெரிந்து கொண்டு அதிக கலோரி உணவுகளை தவிர்க்கவும்.
ALSO READ | உணவே மருந்து: பல உடல் பிரச்சனைகளுக்கு தீர்வாகும் தயிர்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR