Weight Loss Tips:  நீங்கள் வேகமாக எடை இழக்க விரும்பினால் இந்த செய்தி உங்களுக்கு பெரிதும் உதவும்.  பெரும்பாலான மக்கள் தொப்பை காரணமாகவும் மற்றும் வேகமாக அதிகரிக்கும் எடை காரணமாகவும் பாதிக்கப்படுகின்றனர். துரித உணவு, கொழுப்பு நிறைந்த உணவு மற்றும் தவறான வாழ்க்கை முறை ஆகியவை எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணங்கள். உடல் பருமன் பல நோய்களுக்கான ஆதாரமாக இருக்கிறது. அதிக கலோரி கொண்ட உணவை உட்கொள்வது விரைவான எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. அதிகரிக்கும் எடையை கட்டுப்படுத்த நீங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த செய்தியில் கூறப்பட்டிருக்கும் விஷயங்களை கடைபிடித்தால், அது எடை இழப்புக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் உங்களை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். உணவு நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் இது குறித்து கூறுகையில், எடை இழப்புக்கு, உடற்பயிற்சியுடன் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறுகிறார். எடை இழப்புக்கான உங்கள் உணவுத் திட்டமும் வழக்கமான முறையும் என்னவாக இருக்க வேண்டும் என்பதை பற்றி அவர் என்ன கூறுகிறார் என்பதை பார்க்கலாம்.


ALSO READ | Weight Loss in Ayurveda: உடல் எடை குறைப்புக்கு ஆயுர்வேதம் சொல்வது என்ன?


தொப்பை கொழுப்பை குறைக்க பிளாங்க் உடற்பயிற்சி (plank exercise)


தொப்பையை குறைக்க பிளாங்க் சிறந்த பயிற்சியாக கருதப்படுகிறது. இதைச் செய்ய, நீங்கள் கால்விரல்கள் மற்றும் கைகளை ஊன்றிக் கொண்டு  உடலை உயர்த்தவும். உடலை இறுக்கமாக வைத்திருங்கள். இந்த நிலையை 10 விநாடிகள் நீடித்து இருக்க வேண்டும் . 4-5 முறை செய்யவும். ஒரு மாதத்திற்கு இதைச் செய்வதன் மூலம், நீங்கள் பெரும் வித்தியாசத்தைக் காண்பீர்கள்.


உடல் எடையை குறைக்க  சாப்பிட வேண்டிய உணவுகள் 


ஓட்ஸ் - ஓட்மீலில் புரதம் நிறைந்துள்ளது. நார் சத்து நிறைந்த இந்த உணவு எளிதில், ஜீரணமாகிறது. இது உங்கள் எடையையும் குறைக்கிறது.


பூண்டு - காலையில் வெறும் வயிற்றில் எழுந்ததும், இரண்டு பூண்டு பற்களை மென்று, அதன் பிறகு ஒரு கிளாஸ் எலுமிச்சம்பழத்தை குடித்தால், எடை குறையத் தொடங்கும்.
இட்லி- காலையில் காலை உணவாக இட்லி சாப்பிடலாம். இதில் புரதச்சத்து நிறைந்துள்ளது. எடை இழப்புக்கு இதை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.


ஆப்பிள்- ஆப்பிள்களில் பல வகையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது உங்கள் எடையை குறைப்பதோடு ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவுகிறது.


ALSO READ | Migraine: ஒற்றை தலைவலியை உடனே விரட்டும் ‘5’ சூப்பர் உணவுகள்..!!


உடல் எடையை குறைக்க தவிர்க்க வேண்டிய விஷயங்கள்


எடை இழப்புக்கு, ஆரோக்கியமான உணவோடு சில விஷயங்களை நீங்கள் கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம் என்று உணவியல் நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் கூறுகிறார். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 1-2 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். இது வளர்சிதை மாற்றத்தை அதாவது மெட்பாலிஸத்தை அதிகரிக்கும். உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் தண்ணீர் குடிக்கவும். இது அதிக உணவை உண்ணும் ஆர்வத்தை குறைக்கும். அதே நேரத்தில், அதிக எண்ணெய் நிறைந்த உணவுகள், பர்கர்கள், பீஸ்ஸா, சீஸ் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இது தவிர, சர்க்கரை நிறைந்த இனிப்பான உணவு பொருட்களை சாப்பிடுவதை குறைக்கவும், ஏனெனில் இதனால் எடை வேகமாக அதிகரிக்கிறது.


உடல் பருமனைக் குறைக்க முக்கியமான குறிப்புகள்


- காலையில் எழுந்து வாக்கிங், உடற்பயிற்சி செய்யுங்கள்.


- தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும்.


- இரவு உணவு எளிதில் ஜீரணமாக கூடியதாக இருக்க வேண்டும்.


- சீரான மற்றும் குறைந்த கொழுப்புள்ள உணவை உண்ணுங்கள்.


- எடை இழப்புக்கான ஊட்டச்சத்துக்கள் உங்கள் உணவில் அதிக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்


ALSO READ | விந்தணு குறையாமல் இருக்க இந்த ‘5’ உணவுகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும்..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR