புதுச்சேரி :  ஊசி போடலையோ ஊசி என்ற ரீதியில் தெருத்தெருவாக  தடுப்பு ஊசி செலுத்துவதற்காக கூவிச் செல்லும் சுகாதாரப் பணியாளர்கள் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆண்டு COVID-19 என்ற கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி தற்போது பல லட்சம் மக்களின் வாழ்க்கையை தினசரி பாதித்து வருகிறது.  உலகெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று, உலகின் பல நாடுகளிலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.


தினமும் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே போக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் ஆயிரக்கணக்கில்ஏராளமான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு மற்றும் பிற தடைகள் அமலில் உள்ளன.  அதேவேளையில் இந்த வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை சில நாடுகள் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகின்றன.கொரோனா பரவலை தடுக்க பல நாடுகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


நோய் தடுப்பதில் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன, தொற்று நோய் பரவுவதைக் குறைக்கவும் மற்றும் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றவும் உதவுகின்றன.   தடுப்பூசியானது முதல் டோஸ் மற்றும் இரண்டாம் டோஸ் என 2 டோஸ்களாக கால இடைவெளி விட்டு 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.  அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி கொரோனாவிலிருந்து தற்காத்து கொள்ள அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


 



அதன்படி புதுச்சேரியின் ஏனாம் என்ற பகுதியில் சுகாதார பணியாளர்கள் தெருத்தெருவாக சென்று காய்கறி,பழங்களை கூவி விற்பது போல் தடுப்பூசிகளை போட மக்களை கூவி கூவி அழைக்கின்றனர்.  இதேபோல தெலுங்கானாவின் கிராமங்களில் தண்டோரா மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்படுகிறது.  இந்த வீடியோகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.


 



 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR