வெறும் வயித்தில எலுமிச்சை ஜூஸ் தொடர்ந்து குடிச்சா என்னவாகும்? டாக்டர் செலவு மிச்சம்!
Reasons To Start Your Day With Lemon Water: ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க எலுமிச்சை என்ற ஒற்றைப் பழமே போதும்... அதிலும் காலையில் வேறு எதுவும் சாப்பிடுவதற்குக் முன்னதாக வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியமே இருக்காது
Health Benefits Of Lemonade In Morning: காலையில் வேறு எதுவும் சாப்பிடுவதற்குக் முன்னதாக வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியமே இருக்காது. எலுமிச்சை, வைட்டமின் சி அதிகமாக உள்ள பழமாகும். உடலின் நோயெதிர்ப்பு அமைப்பபை வலுப்படுத்தி உடலைப் பாதுகாக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்து வைட்டமின் சி ஆகும். அதோடு எலுமிச்சையில் உள்ள பெக்டின் ஃபைபர், பெருங்குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதுடன் சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு சக்தியாகவும் செயல்படுகிறது.
இப்படி எலுமிச்சையின் மகத்துவத்தை சொன்னால், அது மிகவும் நீளமானது. உடலில் உள்ள pH அளவை சமநிலைப்படுத்தும் என்பது மிகவும் முக்கியமானது. அதிகாலையில் எலுமிச்சை சாறுடன் வெந்நீர் கலந்து குடிப்பது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது
செரிமானத்திற்கு உதவும் எலுமிச்சை ஜூஸ், பித்த உற்பத்தியை ஊக்குவிக்கிறது. ஏனென்றால், இது சிட்ரிக் அமிலம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும்.
வெறும் வயிற்றில் எலுமிச்சை நீர்
காலையில் எழுந்தது, தேநீர் காபி போன்றவற்றுக்கு பதிலாக புத்துணர்ச்சியூட்டும் எலுமிச்சை தண்ணீர் ஒரு கிளாஸ் குடித்தால், நாள் முழுவதும் உடல் உற்சாகமாக இருக்கும். அத்துடன் எலுமிச்சை ஜூஸ், சிறுநீரக பாதிப்புக்கு எதிராக ஒரு சக்திவாய்ந்த கருவியாகவும் செயல்படுகிறது. தினசரி காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் குடித்துவந்தால் என்னென்ன பலன்கள் என்பதையும், அதிலும் குறிப்பாக சிறுநீரக பிரச்சனைகளை அது எப்படி தடுக்கிறது என்பதையும் தெரிந்துக் கொள்வோம்.
மேலும் படிக்க | கொளுத்தும் வெயில் ஏற்படுத்தும் கோரமான பிரச்சனைகள்! வெப்ப அலையில் சன் ஸ்ட்ரோக்!
சிறுநீரகக் கற்களுக்கு மருந்தாகும் எலுமிச்சை நீர்
எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் சிட்ரேட் அளவு உடலில் சீராக இருக்கும். சிறுநீரகத்தை பாதிக்கும் உடலில் நீரிழப்பு என்ற பிரச்சனையை எலுமிச்சை ஜூஸ் தடுக்கிறது.
செரிமானத்தை மேம்படுத்தும் எலுமிச்சை
பொதுவாக, நமது வயிற்றில் உள்ள அமிலம் செரிமானத்திற்கு உதவுகிறது, ஆனால் வயது அதிகரிக்கும் போது நமது வயிறு செரிமான அமிலத்தை உற்பத்தி செய்ய போதுமானதாக இருக்காது. அந்த நிலையில், எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் செரிமானப் பிரச்சனைகள் குறையும். ஏனென்றால், செரிமானத்திற்கு உதவும் கூடுதல் பொருட்களை எலுமிச்சை வழங்குகிறது.
வைட்டமின் சி
எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, ஆக்ஸிஜனேற்ற அம்சங்களுக்கு காரணமான வைட்டமின் சி மிகவும் வலுவான நோயெதிர்ப்பு அமைப்பை உருவாக்குகிறது, வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதுடன், சிறுநீரகங்களை பாதுகாக்கிறது.
எடை இழப்பு
எலுமிச்சம்பழ நீரில் கலோரிகள் இல்லை என்பதும், அதன் செரிமானத்தை ஆதரிக்கும் தன்மையும் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது. எனவே உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய முக்கியமான பழங்களில் எலுமிச்சைக்கு முதலிடம் உண்டு. குறைந்த கலோரிகள் இருந்தாலும், நீண்ட நேரத்திற்கு பசிக்காமல் இருக்கும் தன்மை கொண்டது எலுமிச்சம்பழம்.
இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் எலுமிச்சை நீர்
உயர் இரத்த அழுத்தம் என்பது, சிறுநீரக பாதிப்பு மற்றும் இருதய பிரச்சனைகளுக்கு ஒரு ஆபத்தான காரணியாக உள்ளது. உண்மையில் இந்த பிரச்சனையை, எலுமிச்சை சீர்செய்கிறது. எலுமிச்சையில் உள்ள அதிக பொட்டாசியம் உள்ளடக்கம் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதிலும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது.
(பொறுப்புத் துறப்பு: இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கழிவறை காட்டிக் கொடுக்கும் கல்லீரல் பாதிப்புகள்! மலம் காட்டும் அறிகுறிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ