தைராய்டு பிரச்சனை இருக்கா..... நீங்கள் சாப்பிட வேண்டியதும்... சாப்பிடக் கூடாததும்
Thyroid Control Tips: தைராய்டு என்பது நமது கழுத்தில் உள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி. இது ஒரு சிறிய உறுப்பு என்றாலும், நம் உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தைராய்டு என்பது நமது கழுத்தில் உள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி. இது ஒரு சிறிய உறுப்பு என்றாலும், நம் உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த அவசியம். தைராய்டு ஹார்மோன்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படும். தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் தைராய்டு பிரச்சனையை அதிகரிக்கின்றன.
மோசமான உணவுப்பழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை உள்ளிட்ட பல காரணங்களால், தைராய்டு பிரச்சினைகள் மக்களிடையே வேகமாக அதிகரித்து வருகின்றன. தைராய்டு நோய்களில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. அவை ஹைப்போ தைராய்டிசம் என்னும் குறைவான ஹார்மோன்கள் உற்பத்தி நிலை, மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் என்னும் அதிக ஹார்மோன்கள் உற்பத்தி நிலை ஆகும். இந்நிலையில் ஹைப்போ தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகளை (Health Tips) அறிந்து கொள்ளலாம்.
தைராய்டு நோயாளிகள் டயட்டில் சேர்க்க வேண்டியவை
தைராய்டுக்கு நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்த வேண்டும். கடல் உணவுகளை உட்கொள்ள வேண்டும். இது தவிர, செலினியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, வைட்டமின் சி போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்திருக்க, அரிசியை சிறிய அளவில் உட்கொள்ள வேண்டும், பருப்பு வகைகள் அதிகம் சேர்க்க வேண்டும். பாகற்காய், வெங்காயம், பூசணி, குடை மிளகாய், காளான், பருவகால காய்கறிகளை சேர்க்க வேண்டும். வெண்ணெய் பழம், அன்னாசிப்பழம், மாதுளை, ஆரஞ்சு, ஆகியவை நன்மை பயக்கும்.
மேலும் படிக்க | இதயம் முதல் எலும்புகள் வரை... ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் எள்ளு
தைராய்டு நோயாளிகள் டயட்டில் தவிர்க்க வேண்டியவை
தைராய்டு நிலை மோசமடைவதைத் தடுக்க, குடலில் வீக்கத்தை ஏற்படுத்தும் உணவுகளை ஒருவர் தவிர்க்க வேண்டும். வெள்ளைச் சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகளான ஸ்நாக்ஸ் மற்றும் பிஸ்கட் போன்றவை இதில் அடங்கும். பசையம் உள்ள தானியங்களை உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும். சூரியகாந்தி எண்ணெய், கடுகு எண்ணெய்அல்லது கடலை எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவற்றுக்கு பதிலாக வெண்ணெய், நெய் அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம்.
இது தவிர, பால் பொருட்களுக்கு ஒவ்வாமை இருந்தால், அவற்றை உட்கொள்வதைத் தவிர்க்கவும். சோயா உணவுகளையும் அளவோடு உட்கொள்ள வேண்டும். இதில் ஐசோஃப்ளேவோன்கள் உள்ள. இது தைராய்டு ஹார்மோன் உற்பத்தியை பாதிக்கும். சோயா பொருட்களை அதிகமாக உட்கொள்வது தைராய்டு ஹார்மோன் குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.
உடற்பயிற்சி
தைராய்டு பிரச்சனை இருந்தால், தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்வதன் மூலம், உடல் ஆரோக்கியத்துடன், மனநலமும் ஆரோக்கியமாக இருக்கும். உடற்பயிற்சி செய்வதால் தைராய்டு சுரப்பி சிறப்பாக செயல்படுவதோடு, உடல் எடையையும் குறைக்க உதவுகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், நிபுணர்களை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | உடல் பருமனை குறைக்கணுமா... இந்த சிம்பிள் விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ