உணவே மருந்து என்பார்கள். உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை சரியாக இருந்தால், நோய்களின் ஆபத்து தானாகவே 90 சதவீதம் குறைகிறது. சில உணவுப் பொருட்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது என்பதோடு, பல மருத்துவ குணங்களை கொண்டாதாக உள்ளது. கடுமையான நோய்களை அகற்றும் திறன் கொண்டதாக இருக்கும் சில உணவுகள், புற்றுநோய் போன்ற கொடிய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆரோக்கிய கொழுப்பு அமிலங்களான ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சில உணவுகள், பல வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. புற்றுநோய்க்கான சர்வதேச இதழில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றில், ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் ஆகிய ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகள் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என கூறப்பட்டுள்ளது. செறிவூட்டப்பட்ட கொழுப்புகள் அல்லது டிரான்ஸ் கொழுப்புகள் தான்  உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் ஆரோக்கிய கொழுப்புகள் உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை.


ஒமேகா -3 பெருங்குடல், வயிறு மற்றும் நுரையீரல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.  ஒமேகா -6 மூளை, வீரியம் மிக்க மெலனோமா மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய் உட்பட 14 வெவ்வேறு வகையான புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.


ஆய்வில், 2.50 லட்சத்துக்கும் அதிகமானோரின் தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. ஆரோக்கிய கொழுப்பு செல்களை உருவாக்க உதவுவதோடு, உடலில் சேரும் கெட்ட கொழுப்பைக் குறைப்பதன் மூலம் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. உலகளவில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், சராசரி மனிதர்கள் தங்கள் உணவில் இந்த கொழுப்பு அமிலங்களை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.


மேலும் படிக்க | வாரம் ஒருமுறை அவகாடோ ஜூஸ் குடிங்க... உடம்பு முழுக்க ஊட்டச்சேத்து சேரும்!


ஒமேகா-3 ஆரோக்கிய கொழுப்பு


ஆரோக்கியமான கொழுப்புகள் என்றாலும்,  அளவிற்கு அதிகமான ஒமேகா -3  ஆண்களில் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை சற்று அதிகரித்தது என்று ஆய்வு காட்டுகிறது. 


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கண் பார்வை கூர்மைக்கு... டயட்டில் இந்த உணவுகளை கண்டிப்பாக சேருங்க...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ