மிருகங்களிடமிருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஹெல்தியான பழக்கங்கள்!
மனிதர்களாகிய நாம், மிருகங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய சில சூப்பரான ஹெல்தி பழக்கங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
மிருகங்களின் வாழ்க்கை மனிதர்களை காட்டிலும் மிகவும் சுவாரஸ்யமானது என்பது மறுக்க முடியாத உண்மை. மிருகங்களுக்கு 5 அறிவுதான் இருக்கிறது என்றாலும், இவை தனக்கென தனி வாழ்வை வகுத்து அதில் ராஜா போல வாழ்ந்து வருகின்றன. இதை கொஞ்சம் மனிதர்களும் பின்பற்றினால், நாமும் ஹெல்தியாக வாழலாம். எந்த மிருகத்திடம் இருந்து, எந்த பழக்கத்தை கற்றுக்கொள்ளலாம்? இதோ விவரம்.
தன் சோற்றை தானே எடுத்துக்கொள்ளுதல்:
மிருகங்கள், தனக்கு தேவையான உணவை தானே வேட்டையாடி அல்லது எடுத்து சாப்பிடும். இது, ஒரு இயற்கையான உடற்பயிற்சியாகவும் பார்க்கப்படுகிறது. இப்படி, நமக்கு தேவையான உணவை நாமே செய்து அல்லது எடுத்து சாப்பிடும் போது, தினசரி உடற்பயிற்சி செய்தது போல இருக்கும். கடைக்கு போய் காய்கறி வாங்குவதில் இருந்து, காய்களை அறிந்து சமைப்பது வரை, அனைத்தும் நமது வேலையாக இருக்க வேண்டும்.
பசிக்கும் போது சாப்பிடுதல்:
மிருகங்கள், பசிக்கும் போது மட்டுமே உணவு உண்ணும். போர் அடித்தால், வேலையே இல்லாமல் வெட்டியாக இருக்கும் போது நமக்கு சாப்பிட தோன்றுவது போல இவைகளுக்கு தோன்றாது. இவை, பசிக்கும் போது மட்டும்தான் வேட்டையாடும். இதை மனிதர்களும் பின்பற்றினால் கண்டிப்பாக அதிகம் சாப்பிடுவதை தவிர்த்து, உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்ளலாம்.
ஓய்வு:
காட்டிற்கே ராஜா என்று கூறப்படும் சிங்கம் கூட, மதிய வேளையில் “தூங்குடா கைப்புள்ள” என்பது போல மல்லாக்க படுத்து உறங்குவதை பார்த்திருக்கிறீர்களா? இப்படி சிங்கம் மட்டுமல்ல, பல்வேறு விலங்குகள் தன் உடலுக்கு தேவையான நேரத்தில், எங்கு இடம் கிடைக்கிறதோ அங்கு சென்று படுத்து உறங்கி விடும். அப்படி ஓய்வு எடுத்துக்கொண்டால் மட்டுமே உடலும் மூளையும் சரியாக செயல்படும். எனவே, மனிதர்களும் இரவில் அதிக நேரம் ஃபோன் பார்ப்பதை அல்லது வேலை பார்ப்பதை விடுத்து, சரியான நேரத்திற்கு உறங்க வேண்டும்.
குழந்தை பராமரிப்பு:
பறவைகள் உள்பட பல்வேறு மிருகங்கள், தாங்கள் செய்யும் வேலைகளில் தங்களின் குழந்தைகளையும் ஈடுபடுத்திக்கொள்ளும். இதனால், தனது குட்டிகளுடன் அவற்றிற்கு உணர்வு ரீதியான நெருக்கம் ஏற்படுவதுடன் (Emotional Bonding) ஆபத்து வரும் வேலையில் தங்களை தாங்களே அவற்றிற்கு தற்காத்துக்கொள்ளவும் தெரியும். எனவே, மனிதர்களும் தங்கள் குழந்தைகளை பொத்தி பொத்தி வளர்க்காமல், அவர்களுடன் சேர்ந்து ஓடி-ஆடி விளையாடி மகிழலாம்.
மேலும் படிக்க | திடீரென தாக்கிய இறந்த முதலை, அரண்டு ஓடிய மக்கள்: வைரல் வீடியோ
இயற்கையை போற்றுதல்:
பல்வேறு மிருகங்கள் காடுகளில்தான் வாழ்கின்றன. இயற்கை அன்னையின் செல்ல பிள்ளைகளான இவை, தங்களின் மனம் உடலில் ஏற்படும் வலிகள் அனைத்தையும் இயற்கைதான் தீர்த்து வைப்பதாக நம்புகின்றன. அவை நம்புவது போல,இயற்கைதான் இவற்றின் பதற்றம் மற்றும் மன சோர்வை குறைக்கின்றன. எனவே, மனிதர்களாகிய நாமும் மலை ஏறுதல், பார்க்கில் சுற்றி பார்த்தல், கடற்கறையின் முன் அமர்ந்து உங்கள் மன கவலைகலை கூறுதல் உள்ளிட்டவற்றை செய்யலாம்.
உணவு பழக்கம்:
மிருகங்கள், அனைத்தையும் பச்சையாக அப்படியே சாப்பிடும் என்பது யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லைந். இவை, பதப்படுத்தப்படாத உணவுகளையும், தன் உடல் ஏற்றுக்கொள்ளும் உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்வதால் தன் ஆயுளை பெரிதாக எந்த நோயும் இல்லாமல் இன்றி, வாழ்ந்து முடிகிகின்றன.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ