கொழுகொழு தொப்பையை கடகடவென குறைக்க..‘இதை’ பண்ணுங்க!

Exercises For Belly Fat Reduction : உடல் எடையை குறைக்க, சில உடற்பயிற்சிகள் உதவுகின்றன. அவற்றை செய்வதால் என்ன நலன்கள் ஏற்படும் தெரியுமா? 

Exercises For Belly Fat Reduction : உலகில் உள்ள பலர் சந்திக்கும் பிரச்சனைகளுள் ஒன்று, உடல் எடை அதிகரிப்பு. இதனால் பலர் தங்களின் உடல் குறித்து பாதுகாப்பின்மையுடன் உணர்வதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. உடல் எடை அதிகரிப்பால், தொப்பை அதிகரிப்பு, தொடை சதை அதிகரிப்பு, கைகளின் தசை அதிகரிப்பு உள்ளிட்டவை ஏற்படலாம். இதனால் உடல் நலனிலும் தேவையற்ற பிரச்சனை உருவாகலாம். இதை தவிர்க்க, அனைவரும் சில உடற்பயிற்சிகளை செய்வது அவசியம். அவை என்னென்ன தெரியுமா?

1 /7

உடல் எடை இழப்பிற்கு சரியான டயட்டுடன் சேர்த்து, சரியான உடற்பயிற்சிகளை செய்வதும் அவசியம் ஆகும். குறிப்பாக, உடல் கொழுப்பை கரைப்பதற்கும் ab வர்க் அவுட் செய்வது அவசியம் ஆகும். அந்த உடற்பயிற்சிகள் என்ன தெரியுமா?

2 /7

Kneeling Ab Wheel: உருளும் வீல் ஒன்றை வைத்துக்கொண்டு அதை இரு கைகளாலும் தேய்த்து சேய்யும் வர்க்-அவுட்டிற்கு பெயர், Kneeling Ab. இது, மேல் உடலுக்கு நல்ல  உழைப்பு கொடுக்கும் உடற்பயிற்சியாகவும் விளங்குகிறது. 

3 /7

Side Plank:  சைட் ப்ளாங் உடற்பயிற்சி, உடலை கச்சிதமாக வைத்துக்கொள்ள உதவும். இந்த வர்க் அவுட்டை செய்வதால் அடி வயிற்றில் இருக்கும் தசைகள் குறைய வாய்ப்புள்ளது. 

4 /7

Leg Raises: கால்களை காற்றில் தூக்கி இறக்கும் இந்த உடற்பயிற்சிகளை செய்தால் தொப்பை சில நாட்களிலேயே குறைந்து விடுமாம். இதனை ஒரு முறை உடற்பயிற்சியின் போது 10 முறை செய்யலாம். 

5 /7

Russian Twists:  ஒரு இடத்தில் அமர்ந்து, கால்களை முன்னாள் நீட்டி தரையில் படாமல் வைத்திருக்க வேண்டும். இதே நிலையில் கைகளை, இடுப்பின் இரு புறங்களிலும் வைத்து திருப்ப வேண்டும். இதற்கு பெயர்தான் ரஷ்ஷியன் ட்விஸ்ட்ஸ். இந்த உடற்பயிற்சி செய்வதால் இடுப்பின் சைடில் உள்ள தசைகள் குறையும். 

6 /7

Plank: இந்த உடற்பயிற்சியால் தோல்பட்டைகள், கைகள் மற்றும் கணுக்கால்கள் வலுபெறும். இது, சிறந்த மூச்சுப்பயிற்சியாகவும் கருதப்படுகிறது. இதை செய்வதனால் தொப்பை கரைவதுடன் கொழுப்பும் சேர்ந்து கரையும். 

7 /7

Curl Up: இது, பிற உடற்பயிற்சிகளுடன் ஒப்பிடுகையில் கொஞ்சம் சிம்பிளான உடற்பயிற்சியாகும். இதை செய்வதால் மேல் வயிறு, கீழ் வயிற்றில் இருக்கும் தேவையற்ற தசைகளை கரைக்கலாம்.  (பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)