முன்பெல்லாம் முதுமையானவர்கள் நோய் என கருதப்பட்ட மாரடைப்பு, தற்போது அனைவருக்கும் பொதுவான நோய் என கருதப்படுகிறது. காரணம் இளைஞர்கள் பெரும்பாளானோர் இறப்பு மாரடைப்பால் அமைவதால் தான்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

42-50 அல்லது 40-க்கும் குறைவான மனிதர்களுக்கே தற்போது அதிக அளவில் மாரடைப்பு வருகிறது என ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 40 வயதிற்குட்பட்டவர்களில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளோர் விகிதம் ஒவ்வொரு ஆண்டும் 2% அதிகரித்து வருகிறது எனவும் இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.


இதுகுறித்தி ஹார்ட்வேர்ட் பல்கலை கழக இணை பேராசிரியர் ரான் பிளாங்க்ஸ்டீன் தெரிவிக்கையில்... தற்போதைய காலகட்டத்தில் 40 வயதிற்குட்பட்டவர்களில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளோர் விகிதத்தை காட்டிலும் 20-லிருந்து 30 வயதுக்குட்பட்டவர்களில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளோர் விகிதம் பெருமளவில் அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.


குறிப்பாக மிக இளைய வயதிதல் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்கள், பெரும்பாலும் மற்றொரு மற்றொரு மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற பாதிப்புக்களுக்கு ஆளாக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.


மாரடைப்பிற்கு பாரம்பரிய ஆபத்து காரணிகளாக கருதப்படும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், புகைத்தல், மரிஜுவானா மற்றும் கோகோயின், உயர் கொழுப்பு, குடும்ப வரலாறு உள்ளிட்டவைகளே இந்த இளைய நோயாளிகளுக்கும் மாரடைப்பு காரணமாக அமைகின்றது.


அந்த ஆய்வின் குறித்து அறிக்கைகள் நியூ ஆர்லியன்ஸ் அமெரிக்கன் கார்டியாலஜி 68-வது ஆண்டு அறிவியல் அமர்வுவில் சமர்பிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆய்விற்காக ஆராய்ச்சியாளர்கள் மொத்தம் 2,097 இளம் நோயாளிகளை பரிசித்து ஆய்வின் முடிவுகளை கண்டறிந்துள்ளனர்.


அந்த ஆய்வில், 40 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு அதிக அளிவில் மாரடைப்பு ஏற்படுவதாகும், அதிலும் பெரும்பாண்மை எண்ணிக்கை பெண்களே பாதிக்கின்றனர் எனவும் தெரிவிக்கின்றது. குறிப்பாக பெண்களின் கர்ப காலத்திலேயே பெரும்பாலும் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர் எனவும் தெரிவிக்கின்றது.


போதை பழக்கத்தை கைவிடுதல், தொடர் உடற்பயிற்ச்சி,  இதயத்திற்கு ஆரோக்கியமான உணவு, எடை குறைப்பு போன்ற நல்ல பழக்கங்களின் உதவியால் இளம் வயது மாரடைப்பினை குறைக்கலாம் எனவும் இந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.