எச்சரிக்கை... மாரடைப்பிற்கு பலியான 8 வயது சிறுமி... காரணங்களும் தீர்வுகளும்
மாரடைப்பு என்பது நடுத்தர மற்றும் முதியோருக்கு வரும் பிரச்சனையாக இருந்தது. ஆனால், தற்போது இந்த நோய் சிறு குழந்தைகளை கூட விட்டு வைக்கவில்லை. இளைஞர்கள் கூட மாரடைப்பினால் இறக்கும் சம்பவங்கள் அடிக்கடி நேரிடுகின்றன
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் 8 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 3ம் வகுப்பு படிக்கும் மாணவி, வகுப்பில் இருந்தபோது திடீரென உடல்நிலை மோசமடைந்த நிலையில், பள்ளி நிர்வாகம் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில், இதே போன்று உத்திர பிரதேச மாநிலம் அலிகாரில் 14 வயது சிறுவனும், 8 வயது சிறுமியும் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதிலுமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாரடைப்பு என்பது நடுத்தர மற்றும் முதியோருக்கு வரும் பிரச்சனையாக இருந்தது. ஆனால், தற்போது இந்த நோய் சிறு குழந்தைகளை கூட விட்டு வைக்கவில்லை. இளைஞர்கள் கூட மாரடைப்பினால் இறக்கும் சம்பவங்கள் அடிக்கடி நேரிடுகின்றன.
சிறுமி மாரடைப்பால் இறந்த இச்சம்பவத்தால் பள்ளி நிர்வாகம் மற்றும் சிறுமியின் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அறியாத வயதில் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், மாரடைப்பிற்கான காரணம் சில பிறவி இதய நோயாக இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இருப்பினும், சரியான காரணத்தை அறிய பிரேத பரிசோதனை அறிக்கைக்காக மருத்துவர்கள் காத்திருக்கின்றனர்
குழந்தைகளுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சில காரணங்கள்
பொதுவாக பெரியவர்களுக்குத் தான் மாரடைப்பு ஏற்படும். ஆனால் இது அரிதான நிகழ்வுகளில் குழந்தைகளிலும் ஏற்படலாம். குழந்தைகளில் இந்த பிரச்சனையை ஏற்படக்கூடிய சில முக்கிய காரணங்கள் (Health Tips) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
1. எலக்ட்ரோலைட் சமநிலையின்மை: உடலில் சோடியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் சமநிலையின்மை இதயத் துடிப்பிலும் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
2. அதிக உடல் உழைப்பு அல்லது மன அழுத்தம்: படிப்பு அல்லது பிற உடல் செயல்பாடுகள் காரணமாக குழந்தைகளுக்கு அதிக அழுத்தம் அவர்களின் இதய ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
3. பிறவி இதய நோய்: சில குழந்தைகளுக்கு பிறப்பிலிருந்தே இதயப் பிரச்சனைகள் இருக்கும், சரியான நேரத்தில் கண்டறியப்படாவிட்டால் அது தீவிரமான நிலையாக மாறும்.
4. ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி: இது ஒரு மரபணு நிலை, இதில் இதயத் தசைகள் தடிமனாக இருக்கும். இது இரத்த ஓட்டத்தை பாதித்து மாரடைப்பை ஏற்படுத்துகின்றன.
5. கண்டறியப்படாத மருத்துவ நிலைமைகள்: சில நேரங்களில் குழந்தைகளுக்கு ஏற்கனவே உடல்நலப் பிரச்சினைகள் இருந்து, அவை சரியான நேரத்தில் கண்டறியப்படாமல் இருக்கும் போது, நிலைமை தீவிரமாகி மாரடைப்பு ஏற்படலாம்.
குழந்தைகளுக்கு மாரடைப்பு வராமல் பாதுகாக்கும் வழிமுறைகள்
1. வழக்கமான உடல்நலப் பரிசோதனை: குழந்தைகளின் இதய ஆரோக்கியத்தை அவ்வப்போது பரிசோதிப்பது அவசியம்.
2. உடல் செயல்பாடுகளில் கவனம் செலுத்துதல்: குழந்தைகளுக்கு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளுக்கு நேரம் கொடுக்க வேண்டும். இருப்பினும், அவர்களால் எந்த அளவிற்கு செய்ய முடியும் என்பதை புரிந்துகொள்வது சமமாக முக்கியம். அளவிற்கு மீறும் போது அது தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
3. சரிவிகித உணவு: குழந்தைகளுக்கு அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைத சரிவிகித உணவைக் கொடுக்க வேண்டும். நொறுக்குத் தீனிகளைத் தவிர்க்கவும்.
4. ஆபத்து அறிகுறிகளை அடையாளம் காணுதல்: குழந்தை அடிக்கடி சோர்வடைந்தால், மார்பு வலி அல்லது சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ