கொலஸ்ட்ரால் இரத்தத்தில் இருக்கும் மெழுகு போன்ற பொருள். கொழுப்பில் இரண்டு வகைகள் உள்ளன. அவை, நல்ல கொழுப்பு என்று அழைக்கப்படும் உயர் அடர்த்தி கொழுப்பு புரதம். மற்றொன்று கெட்ட கொழுப்பு என்று அழைக்கப்படும் குறைந்த அடர்த்தி கொழுப்பு புரதம் ஆகும்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நம் உடலுக்குத் தேவையான ஹார்மோன்கள், செல்கள் மற்றும் வைட்டமின் டி போன்றவை உருவாவதற்கு நல்ல கொலஸ்ட்ரால் மிகவும் அவசியம். 


அதே சமயம் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பது மிகவும் ஆபத்தானது. இரத்தத்தின் நரம்புகளில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்கிறது, இதன் காரணமாக அவர்களின் தமனிகளில் இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருக்கும் அல்லது ரத்தம் ஓட்டத்திற்கு தடையாகவோ மாறும்.  ரத்த ஓட்டம் தடை படும் போது மாரடைப்பு ஏற்படலாம். நமது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை 2 நாட்களுக்குள் இரத்த நாளங்களில் இருந்து வெளியேற்ற நமது வீட்டிலேயே தீர்வு உள்ளது.


உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு 


20 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் LDL அதாவது கெட்ட கொலஸ்ட்ரால் அளவு 100 mg/dL க்கும் குறைவாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் 100 mg / dL க்கும் குறைவாக இருக்க வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


மேலும் படிக்க | Health Alert! மறதி, குழப்பம் அதிகமாக இருக்கிறதா; Vitamin B குறைபாடு இருக்கலாம்!


கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் உணவுகள்


1. ஆம்லா  எனப்படும் நெல்லிக்காய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவு சீராகும். தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட முயற்சி செய்யுங்கள்.


2. இது தவிர சீரகம், கொத்தமல்லி, பெருஞ்சீரகம் போன்றவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உங்கள் கொலஸ்ட்ரால் அளவும் இதன் மூலம் கட்டுப்படுத்தப்படும்.


3. பூண்டும் மிக சிறந்த வகையில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும். 


4. இது தவிர தினமும் உணவில் எலுமிச்சையை சேர்த்துக் கொள்ளுங்கள். அதிலும் கெட்ட கொலஸ்ட்ரால் வெளியேறும்.


5. தினமும் உங்கள் உணவில் இஞ்சியை சேர்த்துக்கொள்ளலாம். இது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றும். 


பொதுவாக,  மேலே கூறப்பட்டுள்ள பொருட்களை அதிகம் சேர்த்துக் கொண்டால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். 


(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த வித மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.)


மேலும் படிக்க | Kidney Health: சிறுநீரகத்தை டேமேஜ் செய்யும் இந்த '5' உணவுகளை தவிர்க்கலாமே..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR