Kidney Health: சில நேரங்களில் தவறான உணவு, மருந்துகள் மற்றும் சுற்றுச்சூழலில் உள்ள நச்சு கூறுகள் சிறுநீரகத்தை மோசமாக பாதிக்கின்றன என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதிலிருந்து, சிறுநீரக புற்றுநோய் உள்ளிட்ட நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது. நோயின் தீவிரம் அதிகரித்தால் சில நேரங்களில் சிறுநீரக செயலிழப்பும் ஏற்படலாம். இந்தப் பிரச்சனைகளைத் தவிர்க்க நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்கு குறிப்பாக உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறுநீரகத்தின் வேலை என்ன?


சிறுநீரகம் உடலில் உள்ள கழிவுகளை சிறுநீர் மூலம் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. சிறுநீரகப் பிரச்சனை ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால், பாதிக்கப்பட்டவர்கள் உணவில் மாற்றம் செய்தால், பிரச்சனையை தீர்க்கலாம். ஆனால் பிரச்சனைகள் குற்றூம் போது, டயாலிசிஸ் போன்ற நேர விரயம், பண விரயம் நிறைந்த வலி மிகுந்த சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.


சிறுநீரக செயலிழப்பின் ஆரம்ப அறிகுறிகள்


உடல் வீக்கம்
சருமத்தில் வெடிப்பு
சிறுநீர் கழிப்பதில் சிக்கல்
எரிச்சல் உணர்வு
அதிக குளிர் உணர்வு
பசியின்மை
சிறுநீரகத்தை பாதிக்கு உணவுகள் மற்றும் பழக்கங்கள்


1. மது


அளவுக்கு அதிகமாக மது அருந்தினால் சிறுநீரகம் பாதிக்கப்படும் என பிரபல ஆயுர்வேத மருத்துவர் அப்ரார் முல்தானி தெரிவித்துள்ளார். அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வது சிறுநீரகத்தின் செயல்பாட்டில் சிக்கல்களை ஏற்படுத்தும்,. உங்கள் மூளையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். 


2. காபி


காபியில் அதிக அளவு காஃபின் உள்ளது. ஒரு ஆராய்ச்சியில், அதிக காஃபின் நிறைந்த பொருட்களை உட்கொள்வது நாள்பட்ட சிறுநீரக நோயில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதே போல காபி அதிகம் குடிப்பவர்களுக்கு சிறுநீரகத்தில் கல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.


ALSO READ | Benefits of banana: வாழைப்பழம் சாப்பிட ஏற்ற நேரம் எது..!!!


3. உப்பு


உப்பில் சோடியம் உள்ளது, பொட்டாசியத்துடன் சேர்ந்து, உடலில் சரியான அளவு திரவத்தை பராமரிக்கிறது, ஆனால் உப்பை உணவில் அதிக அளவில் சேர்த்தால், இது சிறுநீரகங்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மேலும் அவர்களுக்கு தீங்கு செய்யலாம்.


4. சிவப்பு இறைச்சி


சிவப்பு இறைச்சியில் அதிக அளவு புரதம் உள்ளது, புரதம் தசைகளின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது, ஆனால் அதன் வளர்சிதை மாற்ற செயல்முறை மிகவும் கடினம். இது சிறுநீரகங்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இறைச்சியில் உள்ள புரதம் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.


ALSO READ | Viagra: ஆண்மை குறைவு பிரச்சனையை தீர்க்கும் வயாகரா, அல்சைமர் நோயை தடுக்கிறது


5. செயற்கை இனிப்பு
சந்தையில் கிடைக்கும் இனிப்புகள், குக்கீகள் மற்றும் பானங்கள் ஆகியவற்றில் செயற்கை இனிப்பு அதிகம் பயன்படுத்தப்படுகிறது, இது சிறுநீரக ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். நீரிழிவு நோயாளிகள் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அப்படிப்பட்டவர்கள்  இதை சாப்பிடவே கூடாது.


இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. இதுபொதுவான விழிப்புணர்வு மட்டுமே வழங்கப்படுகிறது.


ALSO READ | Brain Health: இந்த ‘5’ உணவுகள் மூளையை டேமேஜ் செய்யும்..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR