Hemochromatosis: அளவிற்கு அதிகமான இரும்பு சத்து உயிருக்கு எமனாகலாம்; எச்சரிக்கும் நிபுணர்கள்!

நமது உடலில், தேவைக்கும் மிக அதிகமான இரும்பு சத்து உறிஞ்சப்படும் நிலை அல்லது தேங்கும் நிலை ஹீமோக்ரோமாடோசிஸ் எனப்படுகிறது.
Hemochromatosis: இரும்பு சத்து மனிதர்களுக்கு மிகவும் முக்கியமானது. அதன் குறைபாட்டால், ரத்த சோகை உட்பட பல விதமான பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால் அளவிற்கு மிஞ்சிய இரும்புச்சத்தும் உடலில் பல்வேறு வகையான கோளாறுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நமது உடலில், தேவைக்கும் மிக அதிகமான இரும்புச் சத்து சேமிக்கப்படும் போது, அது உடல் உறுப்புகளை சேதப்படுத்தத் தொடங்குகிறது. இரும்பு சத்தை உடலில் அளவிற்கு அதிகமாக தேங்கும் நிலை ஹீமோக்ரோமாடோசிஸ் எனப்படுகிறது.
இரும்புச்சத்து அதிகமாக உட்கொள்வது நம் உடலுக்கு ஆபத்தானது, ஏனெனில் இது இதய செயலிழப்பு, கல்லீரல் நோய்கள், நீரிழிவு நோய் போன்ற அபாயத்தை அதிகரிக்கிறது. குடல் மூளை நரம்பு ஒருங்கிணைப்பில் பிரச்சனை, அல்சைமர் மற்றும் கால், கை வலிப்பு போன்ற நரம்பியக்கடத்தல் நோய்கள் வருவதற்கு நமது உடலில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பது முக்கிய காரணமாகும். ஹீமோக்ரோமாடோசிஸ் நிலையில், இரும்பு உப்புகள் திசுக்களில் படிந்து, கல்லீரல் பாதிப்பு, நீரிழிவு நோய் மற்றும் தோலின் பழுப்பு நிறமாற்றம் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும்.
மேலும் படிக்க | Health Alert: சிறுநீரக கல் இருந்தால் ‘இந்த’ உணவுகளுக்கு NO சொல்லுங்க!
நம் உடலில் இரும்புச்சத்தின் அளவு அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. மரபணு கோளாறுகள், அதிக இரும்புச்சத்து ஊசி போட்டுக்கொள்ளுதல் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளல் ஆகியவற்றால் உடலில் இரும்புச் சத்து தேவைக்கும் அதிகமாக சேமிக்கப்படுகிறது. மரபணு கோளாறு காரணமாக வரும் பரம்பரை ஹீமோக்ரோமாடோசிஸ் உள்ள சிலருக்கு அறிகுறிகள் இருக்காது. சிலருக்கு கீழ்கண்ட அறிகுறிகள் இருக்கலாம்:
மூட்டு வலி
வயிற்று வலி
சோர்வு
பலவீனம்
நீரிழிவு நோய்
பாலியல் உறவில் ஆர்வமின்மை
ஆண்மைக்குறைவு
இதய செயலிழப்பு
கல்லீரல் செயலிழப்பு
வெண்கலம் அல்லது சாம்பல் தோல் நிறம்
நினைவுவாற்றல் இழப்பு
மேலும் படிக்க | Anemia: மாதுளை - பீட்ரூட் மட்டுல்ல; இதுவும் ரத்த சோகையை குணப்படுத்தும்
ஒவ்வொரு நபரின் உடலையும் பொறுத்து இரும்புத் தேவை வேறுபட்டது. இரும்பு சத்து எந்த அளவிற்கு வேண்டும் என்பது, வயது மற்றும் உடல் செயல்பாடுகளின் அளவில் அட்ப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. அதே நேரத்தில், மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு 20 முதல் 25 கிராம் இரும்புச்சத்து தேவைப்படுகிறது. கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு மற்ற பெண்களை விட தினமும் 5 மில்லிகிராம் இரும்புச்சத்து அதிகம் தேவைப்படுகிறது.
(துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ