குடல் ஆரோக்கியம், செரிமானம் சிறப்பாக இருக்க... உதவும் சில சூப்பர் உணவுகள்..!!
Colon Health Tips: `குடல் ஆரோக்கியமாக இருந்தாலே, உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்` என்பார்கள் பெரியவர்கள். ஆயுர்வேதமும் இதையே கூறுகிறது. உடலில் ஏற்படும் பெரும்பாலான நோய்கள் குடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையவை தான்.
Colon Health Tips: 'குடல் ஆரோக்கியமாக இருந்தாலே, உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்' என்பார்கள் பெரியவர்கள். ஆயுர்வேதமும் இதையே கூறுகிறது. உடலில் ஏற்படும் பெரும்பாலான நோய்கள் குடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையவை தான். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் குடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். இது உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது. சமீபத்தில், ஆயுர்வேத நிபுணர் டாக்டர் தீக்ஷா பவ்சர் சவாலியா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள பானங்களைப் பற்றி கூறியுள்ளார். இந்த மூலிகை பானங்கள் பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.
1. சுக்கு
சுக்கு, அதாவது உலர் இஞ்சி ஆயுர்வேதத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. 'சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை' என்று கூறப்படுவதன் மூலம் அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம். சக்திவாய்ந்த மூலிகையான, இது கிட்டத்தட்ட அனைத்து செரிமான பிரச்சனைகளையும் போக்குகிறது. நீங்கள் அதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். சுக்கு டீ, கஷாயம் மற்றும் உணவில் சேர்ப்பதன் மூலம் என பல வகையில் சேர்த்துக் கொள்ளவது அனைத்துமே நன்மை பயக்கும். சுக்கு குமட்டல், அஜீரணம், தசை வலி, கொழுப்பை எரித்தல், வீக்கம், இருமல் மற்றும் சளி, தொண்டை புண் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. இது மட்டுமின்றி, LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த சர்க்கரை இரண்டின் அளவையும் குறைக்கிறது.
2. மோர்
கோடை காலத்தில் சுவையுடன் ஆரோக்கியமும் வேண்டும் என்றால், மோர் உங்களுக்கான சிறந்த பானம். குறிப்பாக கோடைக்காலத்தில் இது அமிர்தத்தைப் போன்றது. இது உங்கள் செரிமான அமைப்பை வலுப்படுத்துவதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது கபம் மற்றும் வாதம் இரண்டையும் சமன் செய்கிறது. அனைவரும் மதிய உணவில் மோர் சேர்க்க வேண்டும். அஜீரணத்தை போக்குவது மட்டுமின்றி, வீக்கம், இரைப்பை குடல் பிரச்சனைகள், இரத்த சோகை, பசியின்மை போன்ற பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது.
3. பசு நெய்
நெய் பற்றி பலருக்கு பல விதமான கருத்துக்கள் உள்ளன. சிலர் நெய்யில் கொழுப்பு மிக அதிகம் என்கிறார்கள். இருப்பினும், ஆயுர்வேதத்தில், சுத்தமான பசுவின் நெய் அமிர்தத்திற்கு சமமாக கருதப்படுகிறது. இது உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதன் இனிமையான மணம், சுவை மற்றும் குளிர்ச்சியான தன்மை வாதம் மற்றும் பித்தத்தின் சமநிலையை பராமரிக்கிறது. இதனால், உங்கள் செரிமான அமைப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது உடல் திசுக்களுக்கு முழுமையான ஊட்டச்சத்தை வழங்குகிறது. கூடுதலாக, பசு நெய் தசைகளை வலுப்படுத்துகிறது. உங்கள் ஞாபக சக்தியை வலுப்படுத்தி மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் கருவுறுதல் தொடர்பான பிரச்சனைகளை போக்கி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
மேலும் படிக்க | சம்மரில் எடை குறைக்க இந்த சூப்பர் பானங்கள் உதவும்: குடிச்சு பாருங்க!!
4. கற்கண்டு
இன்றும் கற்கண்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதற்கான காரணம், இது எந்த ரசாயனமும் இல்லாத சர்க்கரையின் தூய்மையான வடிவமாகும். இது ஆயுர்வேதத்திலும் பயன்படுத்தப்படுகிறது. சாதாரண சர்க்கரைக்கு பதிலாக கற்கண்டை சாப்பிட்டால், பல நன்மைகளைப் பெறலாம். குடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, எடை இழப்பு, PCOD, ஆட்டோ இம்யூன் கோளாறுகள் போன்ற பிரச்சனைகளையும் போக்குகிறது.
5. மூலிகை தேநீர்
CCF தேநீர் அதாவது சீரகம், தனியா மற்றும் சோம்பு கலந்த தேநீர் உங்கள் வயிற்றுக்கும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. இந்த தேநீர் மாதவிடாய் வலி போன்ற பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது. இந்த மூலிகை தேநீர் இரத்த சர்க்கரையையும் கட்டுப்படுத்துகிறது. இதனை தொடர்ந்து உட்கொள்வதால் வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகள் நீங்கும். இந்த சுவையான தேநீர் மன ஆரோக்கியத்திற்கும் நல்லது. இதை எளிதாக தயாரிக்கலாம். இதற்கு சீரகம், தனியா, சோம்பு தலா 1 டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். இப்போது அவற்றை ஒரு கிளாஸ் தண்ணீரில் 3 முதல் 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியாகக் குறைந்தவுடன் வடிகட்டி, வெதுவெதுப்பாகப் பருகவும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | பிபி முதல் செரிமானம் வரை... ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் துவரம் பருப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ