செரிமானம் சரியாக இருந்தாலே ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஏனெனில், செரிமான கோளாறு தான் பல்வேறு உடல் நல பிரச்சனைகளுக்கு காரணமாகிறது. அதிலும், மழை காலம் என்றாலே செரிமானக் கோளாறுகள், எல்லா வகையில் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அசுத்தமான தண்ணீர் மூலம் முதலில் பாதிக்கப்படுவது குடல் தான். எனவே மழை காலத்தில் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துவது மிக முக்கியம். அதிலும் வயிற்றுப்போக்கு, வாந்தி, வாயு போன்ற பல கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செரிமான பிரச்சனைகளுக்கு குட்பை சொல்ல உதவும் சில கை வைத்தியங்கள்


செரிமானம் தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்க்க சில கை வைத்தியங்களை முயற்சிப்பது மிகவும் பலன் கொடுக்கும். மழைக்காலத்தில், உங்கள் நோய் எதிர்ப்பு சகதியை அதிகரித்து குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் சில ஆரோக்கியமான பானங்களைப் (Health Tips) பற்றி அறிந்து கொள்ளலாம்.


சீரக நீர்: அகத்தை சீர் செய்யும் சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து டீ போல குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகள் நீங்கும். அதோடு, மெட்டபாலிஸம் என்னும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் ஆற்றல் சீரகத்திற்கு உண்டு. உடல் எடையும் கொலஸ்ட்ராலும் குறையும். ஜீரண சக்தி அதிகரிக்கும். இதன் காரணமாக உணவு மிக விரைவாக செரிமானம் ஆகும்.


துளசி டீ: ஆயுர்வேதத்தில் துளசிக்கு முகுந்த முக்கியத்துவம் உண்டு. துளசி டீ அருந்துவதால், ஜீரண சக்தி அதிகரிப்பதோடு மட்டுமல்ல, நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் கொண்ட துளவி மழைக்காலத்தில் ஏற்படும் தொற்றுகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ள உதவுகிறது. தினமும் துளசி டீ குடித்து வந்தால் வயிற்று உப்புசம் மற்றும் வாயு தொல்லை போன்ற அனைத்து செரிமான பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். நமது ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.


மேலும் படிக்க | உடல் எடையை ஈசியா குறைக்க தினமும் இளநீரை இப்படி குடிங்க போதும்


இஞ்சி டீ: மழைக்காலம் , குளிர்காலம் என எதுவாக இருந்தாலும் ஒரு கப் இஞ்சி டீ குடித்தால் அது கொடுக்கும் கதகதப்பு, நம்மை வேறு உலகுக்கு அழைத்துச் சென்று விடும். இஞ்சி டீ வீக்கம் மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது உணவு எளிதில் செரிக்கப்படுகிறது. இஞ்சியில் அதிக அளவு வைட்டமின் சி, மெக்னீசியம் மற்றும் பிற தாதுக்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இஞ்சியில் உள்ள நோய் அழற்சி எதிர்ப்பு பண்புகள், உடலை நோய் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது.


சோம்பு டீ: உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது என்பதால் தான் நார்ச்சத்து நிறைந்த பெருஞ்சீரகத்தை அல்லது சோம்பை சாப்பிட்ட பிறகு வாய் ப்ரெஷ்னராகப் பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாக வாயு, ஆசிடிட்டி அல்லது மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கப்படும். நரம்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் கொண்ட சோம்பு மழைக்காலத்தில் ஏற்படும் தொற்று நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.


புதினா டீ: புத்துணர்ச்சியூட்டும் நறுமணமுள்ள மூலிகைகளில் ஒன்றான புதினா வாய் துர்நாற்றம், செரிமான பிரச்சானிகள், போன்றவற்றைப் போக்கி, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் பஅற்புத பானம். புதினா டீ ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது, அதன் நுகர்வு வயிற்றுப் பிடிப்பில் இருந்து நிவாரணம் அளிக்கிறது மற்றும் வீக்கம் பிரச்சனையை நீக்குகிறது. தவிர, இது நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது, ஏனெனில் இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக காணப்படுகின்றன.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | High BP டென்ஷன் இனி வேண்டாம்: இந்த 3 பழங்கள் நிவாரணம் அளிக்கும்.. கண்டிப்பா சாப்பிடுங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ