High BP டென்ஷன் இனி வேண்டாம்: இந்த 3 பழங்கள் நிவாரணம் அளிக்கும்.. கண்டிப்பா சாப்பிடுங்க

Fruits To Control High Blood Pressure: BP அதிகமாக இருப்பது இந்த காலத்தில் சாதாரணமாகிவிட்டது. உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும் ஒரு எளிய வழியை பற்றி இங்கே காணலாம். 

Fruits To Control High Blood Pressure: அவசர வாழ்க்கை முறையில் நம்மை எளிதாக ஆட்கொள்ளும் நோய்களில் உயர் இரத்த அழுத்தமும் ஒன்று. இதன் காரணமாக இதய நோய், பக்கவாதம், சிறுநீரக நோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளின் அபாயம் அதிகரிக்கின்றது. இதன் காரணமாக இது ஓரு தீவிர நோயாக பார்க்கப்படுகின்றது. உயர் இரத்த அழுத்தத்தை பல இயற்கையான வழிகளிலும் கட்டுக்குள் வைக்கலாம். அதில் பழங்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது. உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வர உதவும் ஆரோக்கியமான பழங்கள் பற்றி இங்கே காணலாம்.  

1 /9

இந்தியாவில் உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்தியர்கள் பொதுபாக அதிக உப்பு நிறைந்த பொருட்களை சாப்பிடுவது இதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகின்றது. உப்பு அதிகம் உள்ள உணவுகளில் அதிக சோடியம் இருப்பதால் இந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன. 

2 /9

இது தவிர, அதிகப்படியான எண்ணெய் அல்லது பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்பவர்களின் தமனிகளில் கொழுப்பு குவியத் தொடங்குகிறது. இதன் காரணமாக அடைப்பு ஏற்பட்டு, இரத்த ஓட்டத்தில் பிரச்னை ஏற்படுகிறது. இந்த நிலையில், இரத்தம் இதயத்தை அடைய கடினமாக உழைக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இது உயர் இரத்த அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது.

3 /9

இரத்த அழுத்தம் அதிகரித்தால் ​​இதய நோய்களும் தொடங்கும். இதில் மாரடைப்பு, இதய செயலிழப்பு, கரோனரி தமனி நோய் மற்றும் மூன்று நாள நோய் ஆகியவை அடங்கும். பொதுவாக, ஒருவர் மன அழுத்தம் அல்லது பதற்றத்தில் இருக்கும்போது, ​​அவரது இரத்த அழுத்தம் அதிகமாகும். 

4 /9

இரத்த அழுத்தம் அதிகமானால், அது உடலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில் கோவம் அதிகமாகும். நம்மால் நிலையாக சிந்திக்க முடியாமல் போகலாம். அழுத்தம் அதிகமாகும். ஊட்டச்சத்து நிபுணரான நிகில் வத்ஸ், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த நாம் சாப்பிடக்கூடிய 3 பழங்கள் பற்றி கூறியுள்ளார். அவற்றை பற்றி இங்கே காணலாம். 

5 /9

உயர் இரத்த அழுத்தத்தை பல இயற்கையான வழிகளிலும் கட்டுக்குள் வைக்கலாம். அதில் பழங்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது. உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வர உதவும் ஆரோக்கியமான பழங்கள் பற்றி இங்கே காணலாம்.  

6 /9

உயர் இரத்த அழுத்த நோயாளிகள் வாழைப்பழத்தை சாப்பிடலாம். வாழைப்பழம் பலருக்கு விருப்பமான ஒரு பழமாக உள்ளது. இந்த பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. இது உயர் இரத்த அழுத்த பிரச்சனையை குறைக்கும். இது தவிர வாழைப்பழம் செரிமானத்தை சீராக்கி வாயுத்தொல்லை, வயிற்று உப்பசம் போன்ற சங்கடங்களை நீக்குகிறது.

7 /9

ஆரஞ்சு பழத்தில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது. இதில் உள்ள சிட்ரஸ் அமிலம் இரத்த அழுத்தம் அதிகரிப்பதைத் தடுக்கிறது. தினமும் காலையில் ஆரஞ்சு சுளைகளை உட்கொள்வதும் ஆரஞ்சு சாறு குடிப்பதும் இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கு நல்லதாக பார்க்க்கபப்டுகின்றது. 

8 /9

ஆப்பிள் மிகவும் ஆரோக்கியமான பழம். இதில் பல வித ஊட்டச்சத்துகள் உள்ளன. 'தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது' என்று ஒரு கூற்று உள்ளது. இதில் அதிக அளவு ஆண்டிஆக்சிடெண்டுகள் உள்ளன. இதன் காரணமாக ஆப்பிள் இரத்த சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்து போல் பயன்படுவதுடன் உடலின் மற்ற பல பிரச்சனைகளுக்கும் நிவாரணம் அளிக்கின்றது. 

9 /9

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.