நீரழிவு நோய் என்பது, இன்றைய காலகட்டத்தில் ஒரு பொதுவான உடல்நல பிரச்சனையாக மாறிவிட்டது. முன்பெல்லாம், அரிதாகவே இரத்த சர்க்கரை நோய் இருக்கும் நபர்கள் காணப்படுவார்கள். ஆனால் இன்றைய தேதியில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது பாரபட்சம் ஏதும் இன்றி, அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீரழிவு நோய் வந்துவிட்டால், நம் வாழ்நாள் முழுவதும் உணவு விஷயத்தில் மிகவும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். இல்லை என்றால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு (Diabetes Contrtol TIps) கட்டுக்கடங்காமல் இருந்தால், அதனால் சிறுநீரக பாதிப்பு, கண் பார்வை பாதிப்பு, இதய நோய்கள் என பலவிதமான பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்க்கும்.


இன்சுலின் என்றால் என்ன


கணையத்தில் சுரக்கும் இன்சுலின் என்ற ஹார்மோன் குறைவாக சுரக்கும் போது, நம் உடலில், உணவு ஆற்றலாக மாறாமல், ரத்தத்தில் சர்க்கரையாக சேர்கிறது. செரிமான சுரப்பிகளில் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க, சில மூலிகைகள் கை கொடுக்கும்.


இன்சுலின் செடி


இன்சுலின் செடி என்னும் பெயர் கொண்ட  இந்த செடியில் இன்சுலின் இல்லை என்றாலும், நம் உடலில் இன்சுலின் போல் செயல்பட்டு சர்க்கரையை கட்டுப்படுத்தும். மேலும் இது இன்சுலின் ஹார்மோன் உற்பத்தியை தூண்டுவதால், இது இன்சுலின் செடி என்று அழைக்கப்படுகிறது. தினமும் ஒன்று அல்லது இரண்டு இன்சுலின் செடி இலைகளை மென்று சாப்பிடுவதால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். சர்க்கரையை கிளைக்கோஜனாக மாற்றும் சக்தி கொண்ட சில நொதிகள் இதில் காணப்படுவதே இதற்கு காரணம். 


இன்சுலின் செடியின் இலைகளை சர்க்கரை நோய்க்கு மருந்தாக பயன்படுத்தும் முறை


இன்சுலின் செடியின் இலைகளை நிழலில் உலர்த்தி, பொடி செய்து, வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் சிறிதளவு சாப்பிடுவதும் நல்ல பலன் கொடுக்கும்.


மேலும் படிக்க | சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வேண்டுமா? ‘இந்த’ யோகாசனங்களை செய்து பாருங்கள்..


நித்திய கல்யாணி


கணையத்தில் இன்சுலினை இயற்கையாக சுரக்க வைக்கும் ஆற்றலை கொண்ட, நித்யகல்யாணியின் அருமை தெரியாமல், நாம் அதை அழகுச் செடி என்று வளர்த்து வருகிறோம். பாரம்பரிய மருத்துவத்தில், நித்திய கல்யாணி சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும், மிகச்சிறந்த மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆயுர்வேதத்தில் இதன் மருத்துவ பலன்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கணையத்தில் இன்சுலின் உற்பத்தியை தூண்டும் ரசாயனங்களான, வின்கமைண், அல்கோலைட்ஸ், விண்பிளாஸ்டின் போன்றவை இதில் உள்ளது. இதனால் நித்திய கல்யாணி இலை மற்றும் பூவை, தினமும் சாப்பிடுவதால், ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதோடு கணையத்தின் பீட்டா செல்களும் வலுப்பெறும்.


நித்திய கல்யாணி மருந்தாக பயன்படுத்தும் முறை


நித்திய கல்யாணி பூவின் சாறு, நீரழிவு நோய்க்கு அருமருந்தாகும். இதன் மூலம் கணைய செல்களில் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும். நித்திய கல்யாணி பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, மூலிகை தேநீராக காலையில் உட்கொள்வது, ரத்த சர்க்கரைக்கு அருமருந்து. பூக்களுக்கு பதிலாக இலைகளையும் போட்டு தேனீர் அருந்தி குடிக்கலாம். இந்த செடியின் பூக்கள் மற்றும் இலைகளை பறித்து மென்று சாப்பிடுவதும் பலனளிக்கும். இலை மற்றும் பூக்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து தயாரித்து, அதனை வெதுவெதுப்பான நீரில் கலந்து பயன்படுத்தலாம்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | டின்னர் டிப்ஸ்... செரிமான பிரச்சனைகளுக்கு குட் பை சொல்ல நீங்கள் செய்ய வேண்டியவை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ