சருமத்தில் தேங்கியுள்ள அழுக்குகளை நீக்க வீட்டிலேயே எளிதாக பிளீச்சிங் செய்யலாம்.பொதுவாக இத்தகைய பிளீச்சிங்கை குறைந்த செலவில் வீட்டிலேயே செய்து கொள்ளலாம். சருமத்திற்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ப்ளீச்சிங் செய்வதால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், அழுக்குகள் போன்றவை முற்றிலும் வெளிவந்து, முகம் பொலிவோடு பளிச்சென்று இருக்கும். பிளீச்சிங் செய்வதன் மூலம் உடனடியாக நல்ல நிறத்தைப் பெற முடியும். ஏனெனில் சருமம் பொலிவிழந்து கருமையாக காணப்படுவதற்கு காரணம் சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள்தான்.  ஆனால் அத்தகைய அழுக்குகளையும், இறந்த செல்களையும் பிளீச்சிங் செய்வதால் உடனே போக்கலாம்.எவ்வாறு எளிய முறையில் பிளீச்சிங் வீட்டிலேயே செய்யலாம்..???என்பதை பார்ப்போம்…


1 டேபிள் ஸ்பூன் தேனில், 1 1/2 டேபிள் ஸ்பூன் க்ரீம் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.  1 சிட்டிகை மஞ்சள் தூளில், சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து, முகத்தில் தடவி நன்கு காய வைத்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவலாம்.  2 டேபிள் ஸ்பூன் பாலில், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் போல் வரும் வரை நன்கு கலந்து, முகத்தில் தடவி காயவைத்து, பின் நீரில் கழுவ வேண்டும்.


ALSO READ Baking Soda: நன்மைகள் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்


ஒரு பவுலில் 2 டேபிள் ஸ்பூன் சந்தன பொடி, 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ் சேர்த்து கலந்து,பேஸ்ட் பதத்திற்கு வந்ததும் முகத்தில் தடவி நன்கு உலர வைத்து, பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் பளிச்சென்ற முகத்தைப் பெறலாம்.  இதை கண்டிப்பா வீட்டில ட்ரை பண்ணி பாருங்க...அப்புறம் சும்மா தகதகவென மின்னுவீங்க!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR