மனித உடலின் ஆரோக்கியத்தில் கல்லீரலுக்கு முக்கிய பங்கு உண்டு. உடலில் வளர்சிதை மாற்றம் நடைபெறுவதற்கு கல்லீரல் முக்கிய ஒரு வேலையை செய்கிறது. உணவு உட்கொள்ளும்போது செரிமானத்தின் மூலம் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு  உடலுக்கு சக்தி கொடுக்கின்றன. அவ்வாறு உணவை உடைத்து சக்தியை உறிஞ்சிய பின் மீதம் உள்ள கழிவுகள் வெளியேற்றப்பட வேண்டியது அவசியம். இதனை செய்வதில் கல்லீரல் முக்கிய பங்கு ஆற்றுகிறது. ஆனால் அளவுக்கு மீறி மது அருந்துவது, புகை பிடிப்பது, ஆரோக்கியத்தில் எந்த அக்கறையும் செலுத்தாது என பலருக்கு கல்லீரல் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அப்படி கல்லீரல் பாதிக்கப்பட்டால் என்னென்ன அறிகுறிகள் மூலம் தெரிந்துகொள்ளலாம் என்பது குறித்து பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மஞ்சள் காமாலை மற்றும் தோல் அரிப்பு:


கல்லீரல் குறைபாடு வெளிப்படுத்தும் மிக முக்கியமான அறிகுறிகளில் மஞ்சள் காமாலையும் ஒன்று. மஞ்சள் காமாலை உள்ள ஒருவருக்கு சிறுநீர் மஞ்சள் நிறமாகவும் அவரின் கண்கள் மஞ்சளாகவும் மாறும். மஞ்சள் காமாலை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் கல்லீரலில் உள்ள செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிவதே ஆகும். இதனை சில சிறப்பு ரத்தப் பரிசோதனையின் மூலம் அறிந்துகொள்ள முடியும். இது மட்டுமல்லாமல் உடல் முழுதும் ஒருவித அரிப்பு மற்றும் எப்போதும் சோர்வாகவே காணப்பட்டாலும் கல்லீரல் பாதிப்பு இருக்கிறது என்று அர்த்தம்.


பாதங்களில் வீக்கம்:


கல்லீரல் குறைபாடு உள்ள ஒருவருக்கு அடிக்கடி பாதங்களில் வீக்கம் ஏற்படும். இவ்வாறு உங்களுக்கு அடிக்கடி பாதத்தில் வீக்கம் ஏற்படுவதை உணர்ந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்வது நல்லது.


மேலும் படிக்க | Liver Health: கல்லீரலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும் ‘சூப்பர்’ பழங்கள்!


அடி வயிற்றில் வீக்கம்:


கல்லீரல் குறைபாடு உள்ள நோயாளிகளில் பலருக்கு அடி வயிறு வீங்கி காணப்படும் கல்லீரலில் இருக்கும் குறைபாட்டினால் அதிலிருந்து வெளியேற்றப்படும் திரவங்கள் அடி வயிற்றில் தேங்கி வீங்கியது போன்ற தோற்றத்தை கொடுக்கிறது. இது லிவர் சிரோசிஸ் அல்லது ஆல்கஹாலிக் ஹெபாடிடிஸ் என்ற கல்லீரல் சம்பந்தப்பட்ட நோயை உண்டாக்குகிறது. அளவுக்கு அதிகமாக மது அருந்துவதும் இதற்கு காரணம்.


உள்ளங்கை:


சிவந்த எரிச்சல் ஊட்டும் மற்றும் அரிப்பு தன்மையுடைய உள்ளங்கைகள் அதிகமாக மது அருந்தும் பழக்கம் உடையோருக்கு ஏற்படுகிறது. கல்லீரலில் ஏற்பட்ட பாதிப்பினால் ரத்தத்தில் ஹார்மோன்களின் அளவு மாறுபடுவதால் இந்த குறைபாடு ஏற்படுகிறது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ