Lungs Detox: நுரையீரலை சுத்தம் செய்ய கடைபிடிக்க வேண்டியவை!
Healthy Lungs: சுவாசத்தின் ஆதாரமான நுரையீரலை ஆரோக்கியமாக பராமரிப்பது அவசியம். இந்நிலையில், நுரையீரலில் சேரும் நச்சுக்களையும் அழுக்குகளையும் நீக்க கடைபிடிக்க வேண்டிய சில பழக்கங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
இன்றைய காலகட்டத்தில், அதிகரித்து வரும் காற்று மாசுபாடு, தவறான உணவுப் பழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை ஆகியவை நமது நுரையீரலில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. அதே சமயம் புகைபிடித்தல் போன்ற பழக்கவழக்கங்களால் நுரையீரல் (Lungs Health) பலவீனமடைகிறது. ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியா போன்ற நோய்களின் ஆபத்து தற்போது, கணிசமாக அதிகரித்திருப்பதற்கு இதுவே காரணம். அசுத்தமான காற்றை சுவாசிப்பதால், நுரையீரலில் அழுக்கு படிகிறது. இதன் காரணமாக நெஞ்சு இறுக்கம், மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்செரிச்சல், தலைவலி போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே, நுரையீரலில் சேரும் அழுக்குகளை சுத்தம் செய்வது (Detoxing Lungs) மிகவும் அவசியம்.
இப்போதெல்லாம், நுரையீரலை சுத்தம் செய்வதாகக் கூறும் பல பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் அவை மருத்துவ ரீதியாக சரிபார்க்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இத்தகைய சூழ்நிலையில், நுரையீரலுல் உள்ள நச்சுக்களையும், அழுக்குகளையும் நீக்க சில இயற்கை முறைகளை நீங்கள் பின்பற்றலாம். நுரையீரலை சுத்தம் செய்வதற்கான சில எளிய வழிகளைப் பற்றி இன்று அறிந்து கொள்ளலாம்.
நீராவி எடுத்தல்
நீராவி சிகிச்சை அல்லது நீராவி எடுத்துக்கொள்வது நுரையீரலை இயற்கையான முறையில் சுத்தம் செய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது சுவாசப்பாதைகளைத் திறந்து நுரையீரலில் உள்ள சளியை வெளியேற்ற உதவுகிறது. உங்கள் நுரையீரலை சுத்தம் செய்ய, நீராவி சிகிச்சையை ஒரு நாளைக்கு 1-2 முறை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினால், நீராவி எடுக்கும் போது தண்ணீரில் கற்பூரம், எலுமிச்சை தோல் அல்லது யூகலிப்டஸ் எண்ணெய் சேர்க்கலாம். இதன் மூலம் நீங்கள் பெரிதும் பயனடைவீர்கள்.
உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொள்ளுங்கள்
நுரையீரலை சுத்தம் செய்ய, வழக்கமான சுவாசப் பயிற்சிகள் அல்லது பிராணயாமம் செய்யுங்கள். இது நச்சுக்களையும் அழுக்குகளையும் வெளியேற்றி நுரையீரல் திறனை அதிகரிக்க உதவுகிறது. உங்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் நுரையீரலுக்கான சில சிறப்புப் பயிற்சிகளைச் செய்யலாம். இது நுரையீரலை வலுப்படுத்தும்.
மஞ்சள் நீர் கொண்டு வாய் கொப்பளிக்கவும்
நுரையீரலில் படிந்துள்ள அழுக்குகளை அகற்ற மஞ்சள் பயனுள்ளதாக இருக்கும். தினமும் இரவில் தூங்கும் முன், ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து வாய் கொப்பளிக்கவும். இது நுரையீரலில் சேரும் நச்சுக்களை அகற்ற உதவுகிறது. கூடுதலாக, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மஞ்சளில் காணப்படுகின்றன, இது சளி, இருமல் மற்றும் சளி பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.
ஆரோக்கியமான உணவு பழக்கம்
உங்கள் நுரையீரலை சுத்தம் செய்ய உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றவும். சந்தையில் இருந்து வரும் நொறுக்குத் தீனிகளை உண்பதை நிறுத்தி விட்டு, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நுரையீரலை சுத்தம் செய்ய பீட்ரூட், ஆப்பிள், பூசணி விதைகள், மஞ்சள், தக்காளி, புளூபெர்ரி, க்ரீன் டீ, சிவப்பு முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
கிரீன் டீ குடிக்கவும்
கிரீன் டீ நுரையீரலை சுத்தம் செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நுரையீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். க்ரீன் டீயை தொடர்ந்து உட்கொள்வது நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளை நீக்க உதவும். இதையும் படியுங்கள் - குழந்தைகளில் டெங்கு வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, இந்த நோயின் அறிகுறிகள் என்ன, அதை எவ்வாறு தடுப்பது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ