இன்றைய நிலையில், பெரும்பாலான மக்களை ஆட்டிப்படைக்கும் நோய்களுள் ஒன்று மூட்டு நோய். இந்த மூட்டுவலி வயதானவர்கள் மட்டுமின்றி இளம் பருவத்தினரும் மூட்டுவலியால் அவதிப்படுகிறார்கள். உடலிலுள்ள எலும்பு மண்டல அமைப்பு பலவீனமாக இருப்பதே மூட்டுவலி பாதிப்புக்கு முக்கிய காரணம். இந்த மூட்டுவலி  பிரச்சினையிலிருந்து தீர்வு பெற ஒருசில உணவுப்பழக்கவழக்கங்களை கடைப்பிடித்தால் போதும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

> ஆப்பிளில் (Apple) இருந்து தயாரிக்கப்படும் வினிகர் மூட்டுவலியை குறைக்க உதவும். அதனுடன் தேங்காய் எண்ணெய் (Coconut Oil) சேர்த்து மூட்டு பகுதிகளில் தடவி மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


> சீஸில் சத்து தரும் பாக்டீரியாவான புரோபையோட்டிக் (Probiotic) உள்ளது. இந்த வகை பாக்டீரியா, மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தையும் வலியையும் குறைக்கக்கூடியது. 


ALSO READ | பாதம் வேறொரு நிறத்தில் உள்ளதா? இதை படிக்கவும்


> எள்ளில் தாமிரம், மாங்கனீஸ், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம் மற்றும் மாலிப்டினம் (Molybdenum) ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. எள், ஆன்டிஆக்ஸிடன்ட்களை உருவாக்கி, முடக்கு வாதத்தையும் அதனால் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கும்.


> எலுமிச்சை சாறை நீரில் கலந்தோ, எலுமிச்சை டீயாகவோ தினமும் பருகிவரலாம். இது உடல் வளர்ச்சிதை மாற்றத்தையும் மேம்படு்த்தி வலிகளை குறைக்கும்.


> பாதாம் பருப்பு போன்ற நட்ஸ் வகைகளில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரதம் நிறைந்துள்ளன. எனவே, சத்தான எலும்புகள் பெற தினமும் நட்ஸ் சாப்பிடுவது சிறந்தது.


ALSO READ | மூன்றே நாட்களில் பாத வெடிப்பு மறைந்து அழகான பாதங்களை பெற ஒரு இரகசிய டிப்ஸ்!!!


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR