பெரும்பாலான நீரிழிவு நோயாளிகளுக்கு கண் சம்மந்தமான பிரச்சனைகள் வரக்கூடும், சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது கண் ஆரோக்கியத்தையும், பார்வையையும் கடுமையாக பாதிக்கும்.  சிலருக்கு மீண்டும் சரிசெய்ய முடியாத வகையில் கூட பார்வையிழப்பு ஏற்பட வாய்ப்பு அதிகமுள்ளது.  நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதைத் தவிர, கண்களை கவனித்துக்கொள்வது மற்றும் கண் மருத்துவரை தவறாமல் சந்திப்பதும் அவசியமானது.  நீரிழிவு நோயாளிகள் கண்களைப் பாதுகாக்க வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, பீட்டா கரோட்டின், லுடீன், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், துத்தநாகம் போன்ற சத்துக்கள் அடங்கிய உணவை உண்ணவேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பைல்ஸ் பிரச்சனை இருக்கா? இந்த உணவுகளுக்கு 'நோ' சொல்லிடுங்க


1) உங்கள் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருந்தால் கண் சம்மந்தமான எந்தவித பிரச்னையும் உங்களுக்கு வராது, சர்க்கரையின் அளவு ஏற்ற இறக்கமில்லாமல் ஒரே சீரான அளவில் இருக்க  அவசியமானதாகும்.


2) வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, பீட்டா கரோட்டின், லுடீன், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், துத்தநாகம் மற்றும் அடங்கிய உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும்.  இந்த அத்தியாவசிய வைட்டமின்கள் அனைத்து பழங்கள் மற்றும் காய்கறிகள், இலை கீரைகள், சால்மன், சூரை அல்லது கானாங்கெளுத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள், அக்ரூட் பருப்புகள் மற்றும் பாதாம் உள்ளிட்ட கொட்டைகள், மேலும் பீன்ஸ், பருப்பு மற்றும் காளான்கள் ஆகியவற்றில் காணப்படுகின்றன.


3) தினமும் உடற்பயிற்சி செய்வது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது, ஜாகிங், வேகமான நடைபயிற்சி, நடனம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற எளிய கார்டியோ பயிற்சிகள் போதுமானது.  தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது இதுபோன்ற உடற்பயிற்சிகளை செய்தால் நீரிழிவு நோயும் கட்டுக்குள் இருக்கும், கண் நோயும் வராது.


4) மன அழுத்தம் இரத்த குளுக்கோஸ் மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும், அதனால் தியானம் செய்வது உங்கள் மனதை எளிதாக்கும் மற்றும் கண் பாதிப்பும் ஏற்படாது.


5) நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், வறட்சி, எரிச்சல் மற்றும் எரியும் உணர்வுகள் போன்ற கண் பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கவும் தொடர்ந்து நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
 
6) புகைபிடிப்பதால் உடலின் நரம்புகள், தமனிகள் மற்றும் நுண்குழாய்களை சேதமடைகிறது, இதனால் நீரிழுவு நோயாளிகளுக்கு கண் சம்மந்தமான பாதிப்புகள் ஏற்படும்.


மேலும் படிக்க | எச்சரிக்கை! உடலில் கொலஸ்ட்ரால் இருப்பதற்கான அறிகுறிகள்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ