பைல்ஸ் பிரச்சனை இருக்கா? இந்த உணவுகளுக்கு 'நோ' சொல்லிடுங்க

Piles Cure: மூலநோய்க்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். பைல்ஸைக் கையாள்வதில் உணவுக் கட்டுப்பாடு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 2, 2022, 04:03 PM IST
  • மலச்சிக்கல், வீக்கம் மற்றும் வாயுத்தொல்லைக்கு வழிவகுக்கும் என்பதால், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பால் நல்லதல்ல.
  • பால், பாலாடைக்கட்டி, தயிர் என உங்கள் தினசரி பால் உட்கொள்ளலைக் கண்காணித்து கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
  • பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உப்பின் அளவு மிக அதிகமாக இருக்கும் என்பதால், இதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
பைல்ஸ் பிரச்சனை இருக்கா? இந்த உணவுகளுக்கு 'நோ' சொல்லிடுங்க title=

மூலநோய் பைல்ஸ் அல்லது ஹெமோர்ஹாய்ட்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் ஆசனவாய் மற்றும் மலப் பாதைகளைச் சுற்றிலும் வீக்கம் ஏற்படுகிறது. பைல்ஸ் பிரச்சனை இருந்தால், மலக்குடலில் இருந்து ரத்தம் வந்து, குடல் இயக்கத்தில் சிரமம் ஏற்படும். மூலநோய் என்பது பெரியவர்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான நிலையாகும். இது சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். பைல்ஸைக் கையாள்வதில் உணவுக் கட்டுப்பாடு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

பைல்ஸ் பிரச்சனை உள்ளதா? தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்

சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள்

நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகள் மலச்சிக்கலை (அதனால் மூலநோய்) மோசமாக்கலாம். ஆகையால் அவற்றை உட்கொள்ளும் அளவில் அதிகபட்ச கட்டுப்பாடு இருப்பது மிக நல்லது. அதிக நார்ச்சத்து கொண்ட தானியங்களை மட்டுமே உட்கொண்டால், பைல்ஸ் நோயாளிகள் நிலைமை மோசமாகாமல் தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம். 

பால் பொருட்கள்

மலச்சிக்கல், வீக்கம் மற்றும் வாயுத்தொல்லைக்கு வழிவகுக்கும் என்பதால், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பால் நல்லதல்ல. பால், பாலாடைக்கட்டி, தயிர் என உங்கள் தினசரி பால் உட்கொள்ளலைக் கண்காணித்து கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். 

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

உங்களுக்கு பைல்ஸ் இருந்தால், உடனடியாக பதப்படுத்தப்பட்ட உணவைத் தவிர்க்கவும். துரித உணவை சாப்பிடுவதற்கான ஆசை அதிகமாக இருக்கலாம், ஆனால் நீங்கள் ஏற்கனவே மலச்சிக்கல் அல்லது மூலநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அதிக உப்பை உட்கொள்வது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உப்பின் அளவு மிக அதிகமாக இருக்கும் என்பதால், இதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 

மேலும் படிக்க | குண்டான பெண்களுக்கு நீண்ட காலம் கோவிட் இருக்கும்! உடல் பருமனை குறைக்க மற்றொரு காரணம் 

இரும்புச்சத்து மாத்திரைகள் மற்றும் பிற மருந்துகள்

இரும்புச்சத்து மலச்சிக்கலை உருவாக்கும் ஒரு அம்சம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆகையால், அதிகப்படியான இரும்புச்சத்து பைல்ஸ் பிரச்சனைகள் உள்ளவர்களின் உபாதையை அதிகரிக்கும். இருமல், சளி என நாம் உட்கொள்ளும் பல அன்றாட மருந்துகளில் பைல்ஸை இன்னும் மோசமாக்கும் கூறுகள் அடங்கும். இவற்றை நீங்கள் அடிக்கடி உட்கொண்டால், உங்கள் மருத்துவரை அணுகி, நீங்கள் தினமும் உட்கொள்ளும் மருந்துகளைப் பற்றி அவரிடம் தெரிவிக்கவும். மூலநோய் பிரச்சனையிலிருந்து முழுமையாக குணமாகும் வரை மாற்று மருந்துகளை பயன்படுத்தலாம். 

பழுக்காத பழங்கள்

பழங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் நன்கு பழுத்த பழங்களை உட்கொள்வதை நீங்கள் உறுதிசெய்ய வேண்டும். பகலில் பழுத்த பழங்களை சாப்பிடுங்கள், ஆனால் பழுக்காத வாழைப்பழங்கள் போன்ற பழுக்காத பழங்களை சாப்பிட வேண்டாம். பைல்ஸ் நோயை மோசமாக்கும் சில மலச்சிக்கல் மற்றும் எரிச்சலூட்டும் கலவைகள் அவற்றில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பைல்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்ற சில உணவுகளின் பட்டியல் இதோ:

- பருப்பு வகைகள்
- ப்ரோக்கோலி மற்றும் பிற க்ரீசிஃபெரஸ் காய்கறிகள்
- கேரட் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற வேர் காய்கறிகள்
- மிளகு 
- கீரை
- வெள்ளரி

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் நெல்லிக்காய் ‘4’ நோயாளிகளுக்கு மட்டும் எதிரி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News