கொலஸ்ட்ரால் உடலுக்கு தேவை என்றாலும் அதிகளவு கொலஸ்ட்ரால் மரணத்தை கூட ஏற்படுத்தும் அளவிற்கு கொடுமையானது. கொழுப்பு நிறைந்த உணவுகள், போதுமான உடல் உழைப்பின்மை, புகைபிடித்தல் மற்றும் அதிகமாகமது அருந்துதல் போன்றவற்றின் மூலம் நமது உடலில் கெட்ட கொழுப்புகள் உருவாக்குகின்றது.  இது இதய ஆரோக்கியத்தை மோசமாக்கிவிடும், ஆனால் சில சமயங்களில் அதிக கொலஸ்ட்ரால் உடலில் எவ்வித அறிகுறிகளையும் நமக்கு காட்டாது.  எவ்வித அறிகுறிகளையும் காமிக்காமல் கொழுப்புகள் நமது ரத்த நாளங்களில் படிந்து ரத்த ஓட்டத்தை குறைக்கக்கூடும், இதனால் நெஞ்சு வலி, இதய நோய், பக்கவாதம் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும்.  அதிக அளவு கெட்ட கொலஸ்ட்ரால் உங்கள் தமனிகளை சுருக்கி, ரத்த ஓட்டத்தை குறைக்கும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உயர் கொலஸ்ட்ரால் இருப்பது சில சமயம் கால்களின் மூலம் தெரியும், கால்கள் அல்லது கீழ் முனைகளில் புற தமனி நோய் ஏற்படலாம்.  இது உங்கள் கால்களில் வலியை ஏற்படுத்தும், அதிலும் குறிப்பாக நடக்கும்போது லேசானது முதல் கடுமையானது வரை வலி ஏற்படலாம்.  சிலருக்கு திடீரென நிற்கும் போதும், நடக்கும்போதும் வலி வரும், ஆனால் கொஞ்சம் கால்களுக்கு ஓய்வு கொடுத்த பின்னர் அந்த வலி கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும்.  சிலருக்கு இரண்டு கால்களும் பாதிக்கப்படலாம், சிலருக்கு ஒரு காலில் மட்டும் மோசமான வலி ஏற்படலாம்.  மேலும் கால்களில் இருந்து முடி உதிர்தல், கால்களில் உணர்வின்மை அல்லது பலவீனம், நகங்கள் அடிக்கடி உடைவது, கால்களில் புண்கள் குணமாகாமல் இருப்பது, கால்களின் நிறம் வெளிர் அல்லது நீலமாக மாறுதல் போன்றவையும் ஏற்படுகிறது.  மேலும் சிலருக்கு உயர் கொலஸ்ட்ராலால் நீரிழிவு நோயும் ஏற்பட்டு பாதங்களில் உணர்வுகள் எதுவும் இருக்காது, அதனால் கால்களில் ஏற்படும் சில காயங்களை நாம் கவனிக்காமல் புண்கள் ஏற்பட்டுவிடும். 



மேலும் படிக்க | மனிதனிடம் இருந்து விலங்குகளுக்கு பரவும் குரங்கம்மை நோய்


தூக்கமின்மையும் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்க காரணமாகும், அதேசமயம் இதன் பாதிப்பு  ஆண்களுக்கும் பெண்களுக்கும் மாறுபடும்.  உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்ததற்கான அறிகுறிகள் தென்படாவிட்டாலும் நீங்கள் அடிக்கடி கொலஸ்ட்ரால் அளவை பரிசோதித்து கொள்வது அவசியமானது. நாள்பட்ட சிறுநீரக நோய், நீரிழிவு, எச்.ஐ.வி/எய்ட்ஸ், ஹைப்போ தைராய்டிசம் மற்றும் லூபஸ் ஆகியவை கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளை அதிகரிக்கும்.  முகப்பரு, புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை போன்ற பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு எடுத்துக் கொள்ளும் சில மருந்துகளாலும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்.  கொலஸ்ட்ராலை குறைக்க பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுக்கு மாறலாம்.  மேலும் தினமும் உடற்பயிற்சி செய்வது, புகைபிடிப்பதை நிறுத்துவது மற்றும் குறைந்த அளவு மது அருந்துவது அருந்துவது போன்றவற்றை செய்யலாம்.


மேலும் படிக்க | கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 27 சதவீதம் பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ