கொலஸ்ட்ரால் அதிகமானால் ஆபத்து: இந்த அறிகுறிகள் தோன்றும், ஜாக்கிரதை!!
High Cholesterol Symptoms: அதிக கொலஸ்ட்ரால் சரியான நேரத்தில் குறைக்கப்படாவிட்டால், அது உடலுக்கு அதிகப்படியான தீங்கு விளைவிக்கும்.
அதிக கொலஸ்ட்ரால் அறிகுறிகள்: அதிக கொலஸ்ட்ரால் ஆரோக்கியத்திற்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் பெரும்பாலும் தெரிவதில்லை என்பதால், இதனால் ஏற்படும் ஆபத்து பெரும்பாலான மக்களுக்கு எளிதில் தெரிவதில்லை. எனினும், அதிக கொலஸ்ட்ரால் சரியான நேரத்தில் குறைக்கப்படாவிட்டால், அது உடலுக்கு அதிகப்படியான தீங்கு விளைவிக்கும்.
பொதுவாக, நமது அன்றாட வாழ்க்கை முறையிலும், உணவுப் பழக்க வழக்கங்களிலும் பலர் மிகவும் கவனக்குறைவாக இருக்கின்றனர். இதனால் இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் சேரத் தொடங்குகிறது. உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் உடலுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான அறிகுறிகள்:
1. உயர் இரத்த அழுத்தம்:
அதிக கொழுப்பு உங்கள் தமனிகளில் இரத்த ஓட்டத்தை கடினமாக்குகிறது. இதன் காரணமாக நீங்கள் உயர் இரத்த அழுத்தத்திற்கு பலியாகலாம். இரத்தம் உங்கள் தமனிகள் மூலம் உடலின் அனைத்து பாகங்களையும் சென்றடைகிறது. ஆனால் அடைப்பு ஏற்படும் போது, இரத்தம் அதன் இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டி வருகிறது. இதனால் உயர் இரத்த அழுத்தம் உருவாக வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா? அதற்கு கண்டிப்பாக இந்த டயட்டை கடைபிடியுங்கள்
2. இதய நோய்
அதிக கொலஸ்ட்ரால் காரணமாக, கரோனரி தமனிகளில் பிளேக் உருவாக்கம் தொடங்குகிறது, இது இதய தசைகளுக்கு இரத்த ஓட்டத்தை குறைக்கிறது, மேலும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதன் காரணமாக நெஞ்சுவலி, மூச்சுத் திணறல், மாரடைப்பு, இதயக் கோளாறு, கரோனரி தமனி நோய், மும்முனை நோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
3. சிறுநீரக பாதிப்பு
அதிக கொலஸ்ட்ரால் காரணமாக, சிறுநீரகத்தின் தமனிகளிலும் பிளேக் கட்டிகள் ஏற்படுகின்றன, இதன் காரணமாக சிறுநீரகங்களுக்கு இரத்த ஓட்டம் வருவதில் அதிக சிரமம் ஏற்படுகின்றது. இதன் காரணமாக சிறுநீரக செயலிழப்பு ஏற்படக்கூடும். சிறுநீரகம் நம் உடலின் வடிகட்டி போல் செயல்படுகின்றது. ஆகையால் இதை பாதுகாப்பது மிகவும் முக்கியமாகும்.
4. நரம்புகளில் அடைப்பு:
இரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது, அது நாளங்களில் குவிந்து, பின்னர் இரத்த ஓட்டத்தில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இது தமனிகள் குறைந்த நெகிழ்வுத்தன்மையை உருவாக்குகிறது. குறுகிய தமனிகள் காரணமாக, உடலின் பல பகுதிகளுக்கு இரத்தம் சரியாகச் செல்வதில்லை, இதன் காரணமாக நரம்புகளில் கண்டிப்பாக சேதம் ஏற்படுகின்றது.
இந்த காய்கறிகளை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருக்கும்:
வெங்காயம்
வெங்காயம் பல காய்கறிகளை சமைக்கும்போது பயன்படுகிறது. ஆனால் அது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதில் நார்ச்சத்து இருப்பதால் கொலஸ்ட்ராலை குறைக்கும். உங்களுக்கும் கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால் கண்டிப்பாக வெங்காயத்தை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
வெண்டைக்காய்
வெண்டைக்காய் அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு காயாகும். இதில் நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த இது உதவுகிறது. ஆகையால் அடிக்கடி வெண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பூண்டு
பூண்டில் ஆன்டி ஹைப்பர்லிபிடெமியா உள்ளது, இது கெட்ட கொழுப்பைக் குறைக்கும். எனவே, கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால் கண்டிப்பாக பூண்டை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ரத்த சர்க்கரையை 24 மணி நேரத்தில் கட்டுப்படுத்த... கடைபிடிக்க வேண்டிய ‘சில’ விஷயங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ