High Purine Rich Foods : யூரிக் அமிலம் ஒரு கழிவுப் பொருளாகும், இவை உடல் பியூரின்களை உடைக்கும்போது உடலில் உருவாகிறது. இந்த பியூரின்கள் உடலில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சில உணவுகள் மற்றும் பானங்களில் காணப்படுகின்றன. மேலும் பல வகையான மீன், கல்லீரல், ஒயின் மற்றும் சிவப்பு இறைச்சி போன்ற உணவுகளில் இது அதிகமாக காணப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் உங்கள் உடலில் உயர் யூரிக் அமிலம் இருந்தால், அவை உங்களது மூட்டுகளில் வீக்கம், வலியை ஏற்படுத்தக் கூடும். மேலும் இவை படிகங்களை (சிறிய கற்கள்) உருவாக்கலாம். அதிக யூரிக் அமிலம் இருப்பது கீல்வாதத்தையும் ஏற்படுத்தும். எனவே இது போன்ற அசௌகரியத்தை தவிர்க்க விரும்பினால், பியூரின்கள் நிறைந்த உணவுகளை உடனடியாக சாப்பிடுவதையும் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். அவை என்ன உணவுகள் என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம்.


பியூரின் நிறைந்த உணவுகள் யூரிக் அமிலத்தை அதிகரிக்கும்:
உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பது என்பது ஒரு தீவிரமான பிரச்சனை ஆகும். இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அதிக அளவு ஹைப்பர்யூரிசிமியா என்று அழைக்கப்படுகிறது. இது கீல்வாதம் மற்றும் சிறுநீரக கற்களை உண்டாகும். யூரிக் அமிலம் பியூரின் என்ற தனிமத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில் நீங்கள் உண்ணும் சில பொருட்களில் பியூரின்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. அந்த வகையில் யூரிக் அமில அளவை அதிகரிக்கக்கூடிய அத்தகைய உணவுகளை பற்றி காண்போம்.


மேலும் படிக்க | சுகர் அளவை தட்டி கழிக்க இந்த உலர் பழங்களை கட்டாயம் சாப்பிடுங்கள்


உறுப்பு இறைச்சிகள்: கல்லீரல், கிட்னி மற்றும் பிற உறுப்பு இறைச்சிகளில் பியூரின்கள் அதிகளவு இருக்கும். அந்த வகையில் யூரிக் ஆசிட் பிரச்சனை உள்ளவர்கள் இது போன்ற உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 


கடல் உணவுகள்: நெத்திலி, மத்தி, ஸ்காலப்ஸ் மற்றும் ஹெர்ரிங் உள்ளிட்ட சில கடல் உணவுகளில் பியூரின்கள் அதிகம் இருக்கும். எனவே இந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.


சிவப்பு இறைச்சி: மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் செம்மறி இறைச்சியில் பியூரின்கள் அதிக அளவில் காணப்படுகின்றன, எனவே இதை உட்கொண்டால் யூரிக் அமில அளவு வேகமாக அதிகரிக்கக் கூடும்.


மதுபானம் மற்றும் பீர்: ஆல்கஹால், குறிப்பாக பீர் அருந்துவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இது அதிக அளவு ப்யூரின்களைக் கொண்டிருப்பதால், யூரிக் அமிலத்தை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.


குளிர் பானங்கள் மற்றும் சர்க்கரை பானங்கள்: அதிக பிரக்டோஸ் கார்ன் சிரப் மற்றும் சர்க்கரை பானங்கள் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கலாம். 


சில பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகள்: இவை தவிர, உலர் பீன்ஸ் மற்றும் பட்டாணி, பருப்பு வகைகள், அஸ்பாரகஸ், கீரைகள், காலிஃபிளவர் மற்றும் காளான் போன்ற காய்கறிகளிலும் பியூரின் அளவு அதிகமாக உள்ளது.


முழு தானியங்கள்: ஓட்ஸ் மற்றும் கோதுமை போன்ற முழு தானியங்களில் பியூரின்கள் அதிகம். இவற்றின் அதிகப்படியான நுகர்வு யூரிக் அமிலத்தை அதிகரிக்கும்.


மேலும் படிக்க | ஹேப்பி ஹார்மோன்களை அதிகரிக்க...காலையில் சாப்பிட வேண்டிய 7 உணவுகள்! 


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ