Herbs For Uric Acid: யூரிக் அமிலம் இரத்தத்தில் காணப்படும் ஒரு வேதிப்பொருள். இது உடலில் அதிகரிக்கும் போது, பல பிரச்சனைகள் மற்றும் வலிகளை ஏற்படுத்துகிறது. இந்த இலைகளை உட்கொள்வதன் மூலம் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தலாம்.
இன்றைய காலகட்டத்தில், யூரிக் அமிலத்தின் ஆபத்து பெரும்பாலான மக்களுக்கு அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் மோசமான வாழ்க்கை முறை மற்றும் பியூரின் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதே. இது யூரிக் அமிலத்தை தூண்டுகிறது. யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால், மூட்டு வலி மற்றும் வீக்கம் அதிகரிக்க ஆரம்பிக்கிறது.
புதினா இலைகளில் போதுமான அளவு இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் ஏ, ஃபோலேட் உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு சக்தி கொண்டது. புதினா இலைகள் உடலில் இருந்து பியூரின்களை குறைக்க உதவுகிறது. இதன் காரணமாக உடலில் இருந்து யூரிக் அமிலம் வெளியேற உதவுகிறது.
குடுச்சி என்றும் அழைக்கப்படும் கிலோய், அதன் இம்யூனோமோடூலேட்டரி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்காக ஆயுர்வேதத்தில் மதிக்கப்படும் மூலிகையாகும். எனவே யூரிக் ஆசிட் பிரச்சனை ஏற்பட்டால், கிலாய் இலைகளை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் அரைத்து, பின்னர் வடிகட்டி குடிக்கவும்.
முருங்கை இலைகளில் பல்வேறு வைட்டமின்களும் மினரல்களும் கொட்டிக் கிடக்கின்றன. இதில் ஆற்றல்வாய்ந்த ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. எனவே முருங்கை இலையை மென்று சாப்பிடுவதும் யூரிக் அமிலத்தை பெருமளவு குறைக்க உதவுகிறது.
துளசியின் இலைகள் உடலின் யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்தும் முக்கிய சேர்மங்களைக் கொண்டுள்ளன. எனவே துளசி இலைகளை தொடர்ந்து மென்று சாப்பிடுவதும் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்க உதவுகிறது.
வெந்தயத்தை முறையாக எடுத்துக் கொண்டால், உடலில் அதிகரித்து காணப்படும் யூரிக் அமிலம் நீக்கப்படுகிறது. எனவே வெந்தய இலைகளை மென்று சாப்பிடுவது யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த உதவும்.
யூரிக் அமிலம் அதிகரிப்பதால் மூட்டுவலி மட்டுமின்றி சிறுநீரக கற்கள் மற்றும் பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. வெற்றிலை யூரிக் அமில அளவைக் குறைப்பதில் பயனுள்ளதாக கருதப்படுகிறது. அழற்சி எதிர்ப்பு பண்புகள் வெற்றிலையில் காணப்படுகிறது, எனவே தொடர்ந்து வெற்றிலையை மென்று சாப்பிடுவது யூரிக் அமில வலியிலிருந்து அதிக அளவில் நிவாரணம் அளிக்கும்.
கறிவேப்பிலை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை மற்றும் வலுவான அழற்சி எதிர்ப்பு திறன்களைக் கொண்டுள்ளன. எனவே 10 முதல் 15 கறிவேப்பிலையை 1 கிளாஸ் தண்ணீரில் 1 மணிநேரம் ஊறவைத்து இந்த தண்ணீரை உட்கொள்ளலாம்.
கால்சியம், பொட்டாசியம், தியாமின், பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்டமின் கே போன்ற பல சத்துக்கள் கொத்தமல்லி இலையில் நிறைந்துள்ளது. கொத்தமல்லி இரத்தத்தில் உள்ள கிரியேட்டினின் அளவையும் யூரிக் அமிலத்தையும் குறைக்கிறது. எனவே கொத்தமல்லி இலையை யூரிக் அமிலத்தில் அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்கவும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.