யூரிக் அமிலத்தைக் குறைக்கும் புளிப்புப் பழங்கள்! அழுக்கை அகற்றும் புளிப்பு சக்தி!
Sour Fruits For Uric Acid Control: யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் புளிப்பு பொருட்கள் எவை என்பதை தெரிந்துக் கொண்டால், வலியில்லாமல் வாழலாம்
Fruits For Uric Acid: இரத்தத்தில் யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த சில புளிப்பு உணவுகளை உட்கொள்வது ஆரோக்கியமாக இருக்கும். இதைப் பற்றி தெரிந்து கொள்வோம். மூட்டுகளில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால் வலி மற்றும் வீக்கம் ஏற்படும்போது, பாதிக்கப்பட்ட பகுதி சிவப்பு நிறமாக மாறும்.
இது யூரிக் அமிலம் அதிகரித்திருப்பதற்கான அறிகுறியாகவே இருக்கும். பொதுவாகவே, நமது உடலில் யூரிக் அமிலம் அளவுக்கு அதிகமாக இருந்தால், அதன் அளவைக் குறைப்பது மிகவும் முக்கியம். யூரிக் அமிலம் நமது இரத்தத்தில் உள்ள ஒரு இரசாயனமாகும், பியூரின் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் உற்பத்தியாகும் இந்த அமிலம் இரத்தத்தில் அதிகரித்தால் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மூட்டுகளில் வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் அதிக அளவு யூரிக் அமிலம் சிறுநீரகங்களையும் பாதித்துவிடும். எனவே யூரிக் அமிலத்தின் அளவைக் குறைப்பது மிகவும் முக்கியமானது. இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்க விரும்பினால், உங்கள் உணவில் கவனம் செலுத்துங்கள்.
யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த சில உணவுகள் உதவினாலும், அதில் புளிப்பு உணவுகள் நன்றாக வேலை செய்யும். யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் புளிப்பு பொருட்கள் எவை என்பதை தெரிந்துக் கொண்டால், வலியில்லாமல் வாழலாம்.
மேலும் படிக்க | vitamin D: தினமும் 30 நிமிடங்கள் சூரிய குளியல் போதும்... நோய்கள் எதுவும் அண்டாது..!!
அன்னாசிப்பழம்
இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிக்கும் பிரச்சனையை குறைக்க அன்னாசிப்பழத்தை சாப்பிடலாம். அன்னாசிப்பழம் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் என பல ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக திகழ்கிறது. தினசரி சில துண்டு அன்னாசிப்பழத்தை சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவு குறையும்.
திராட்சைப்பழங்கள்
பலரால் விரும்பி உண்ணப்படும் பழங்களில் ஒன்றான திராட்சையை உட்கொள்வது இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். பழமாகவும், ஜூஸ், சாலட், ஜாம் என விதம்விதமாகவும் திராட்சையை சாப்பிடலாம்.
எலுமிச்சம்பழம்
எலுமிச்சைம்பழத்தின் ஜூஸ் இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவைக் குறைப்பதில் அதிக அளவில் நன்மை பயக்கும். எலுமிச்சையில் உள்ள தனிமங்கள் யூரிக் அமிலத்தைக் குறைப்பதுடன், மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியையும் குறைக்கிறது. எலுமிச்சையை ஒருபோதும் அப்படியே சாப்பிடக்கூடாது. யூரிக் அமிலத்தைக் குறைக்க வெந்நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து வெறும் வயிற்றில் குடிக்கவும்.
மேலும் படிக்க | உணவில் மாற்றம் இல்லாமலேயே ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் பழங்கள்!
நெல்லிக்காய்
யூரிக் அமில அளவைக் குறைப்பதில் நெல்லிக்காய் நல்ல பலனளிக்கும். நெல்லிக்காயை அப்படியே சாப்பிடலாம். இல்லாவிட்டால், சட்னி, ஜூஸ், ஊறுகாய், உணவுப் பதார்த்தங்க்ள் என பலவிதமாக பயன்படுத்தலாம். தினசரி காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், அது யூரிக் அமிலத்தின் அளவை பெருமளவு குறைக்க உதவும்.
ஆரஞ்சு பழம்
மூட்டுகளில் உள்ள யூரிக் அமில பிரச்சனையை கட்டுப்படுத்த ஆரஞ்சு பழத்தை உட்கொள்வது மிகவும் நல்லது. ஆரஞ்சுப் பழத்தை அப்படியே சபபிடலாம், ஜூஸாகவும் பருகலாம். எப்படி எடுத்துக் கொண்டாலும், ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆரஞ்சு, யூரிக் அமிலத்தையும் குறைக்கும்.
(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | அதிரடியாய் ஏறும் யூரிக் அமில அளவை அசால்டாய் குறைக்கும் புளிப்பு பொருட்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ