யூரிக் அமிலத்தால் மூட்டுகள் மட்டுமல்ல... இதயம், சிறுநீரகமும் பாதிக்கும்... எச்சரிக்கையா இருங்க
மாறிவரும் இன்றைய தவறான வாழ்க்கைமுறையில், பலர் வாழ்க்கை முறை சார்ந்த நோய்களுக்கு பலியாகி வருகின்றனர். அதில் ஒன்று யூரிக் அமிலம் பிரச்சனை.
மாறிவரும் இன்றைய தவறான வாழ்க்கைமுறையில், பலர் வாழ்க்கை முறை சார்ந்த நோய்களுக்கு பலியாகி வருகின்றனர். அதில் ஒன்று யூரிக் அமிலம் பிரச்சனை. யூரிக் அமில பிரச்சனை தீவிரமடையும் போது, சில சமயங்களில் பாதிக்கப்பட்ட நபரால், நடக்க கூட முடியாமல், போகலாம்.
யூரிக் அமிலம் என்பது அனைவரின் உடலிலும் உள்ளது. சிறுநீரகங்கள் அதை வடிகட்டுகின்றன. சிறுநீரகங்கள் பியூரின்களை உடைக்கும் போது யூரிக் அமிலம் என்னும் கழிவு உருவாகிறது. இதன் அளவு உடலில் அதிகரிக்கும் போது, இவை மூட்டுகளில் படிவங்களாக சேந்து வலியை உண்டாக்கின்றன.
யூரிக் அமிலம் அதிகரிக்கும் போது, மூட்டு வலி மட்டுமல்லாது, சர்க்கரை நோய், இதயம் நோய்கள் மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதிக யூரிக் அமிலம் மூட்டுகள், முழங்கால்கள், குதிகால்கள் ஆகியவற்றில் வலியை ஏற்படுத்துகிறது. இது தவிர, யூரிக் அமில அளவு அதிகரிப்பதால் உண்டாகும் 4 நோய்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்..
அதிக யூரிக் அமிலத்தால் ஏற்படும் உடல் நல பிரச்சனைகள் (Side Effects of HIgh Uric Acid Level)
சிறுநீரக கல்
சிறுநீரகம் யூரிக் அமிலத்தை வடிகட்டவில்லை என்றால், அது சிறுநீரக கற்கள் பிரச்சனைக்கு வழிவகுக்கும். பல நேரங்களில் இந்த படிகங்கள் சிறுநீர் பாதையில் படிந்து பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. யூரிக் அமில படிகங்கள் சிறுநீரக கற்களை உண்டாக்குகின்றன.
இதய நோய்கள்
யூரிக் அமில அளவு அதிகரிக்கும் போது, இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால், இதயத்திற்கு செல்லும் நரம்புகள் மற்றும் தமனிகள் சேதமடைகிறது. இது இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. இதன் காரணமாக இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தும் அதிகரிக்கிறது.
கீல்வாதம்
அதிக யூரிக் அமிலம் காரணமாக மூட்டுகளில் வலி, வீக்கம், சிவத்தல் போன்ற பிரச்சனைகள் காணப்படுகின்றன. இதனால் கீல்வாதம் வருவதற்கான வாய்ப்பு கணிசமாக அதிகரிக்கிறது. யூரிக் அமில அளவு கடுமையாக அதிகரிக்கும் போது மூட்டுகளில் ஏற்படும் வலி காரணமாக, நடப்பது, எழுந்திருப்பது மற்றும் உட்காருவது ஆகிய செயல்பாடுகளில் கூட வலியை ஏற்படுத்துகிறது.
நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்
யூரிக் அமிலம் அதிகரித்தால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வழிவகுக்கும். இன்சுலின் சுரப்பு பாதிக்கப்படுவதே இதற்கு காரணம்.
யூரிக் அமிலத்தைக் குறைப்பதற்கான வழிகள் (Tips To Control Uric Acid Level)
1. யூரிக் அமில அளவை குறைப்பதற்கான எளிதான வழி, அதிகமாக தண்ணீர் குடிப்பதாகும். இதன் காரணமாக, யூரிக் அமிலம் சிறுநீர் மூலம் வெளியேறி விடும்.
2. உடலில் பியூரின்கள் உடைக்கும்போது யூரிக் அமிலம் உருவாகிறது. இதனை தவிர்க்க, பியூரின் நிறைந்த உணவுகளை தவிர்ப்பது முக்கியம்.
3. புரதம், நார்ச்சத்து வைட்டமின் சி, நிறைந்த உணவு பொருட்களை அதிகம் உட்கொள்ளுங்கள்.
4. வழக்கமான உடற்பயிற்சி மூலம் உடலை டீடாக்ஸ் செய்து ஆரோக்கியமாக வாழலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ