Health Tips: குளிர்காலத்தில் குளிர் மற்றும் ஈரமான பருவநிலை காரணமாக அடிக்கடி சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்த பருவத்தில் சளி, இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சனைகளால் மக்கள் அவ்வப்போது பாதிக்கப்படுவார்கள். சளி மற்றும் இருமலை தவிர்க்க, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது முக்கியமாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனித்துவமான சில பச்சை இலை வகைகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகின்றன. இந்த இலைகள் உடலில் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. சளி மற்றும் இருமலில் இருந்து பாதுகாக்க உதவும் சில உணவுகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த பச்சை இலைகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சணவுகள்


கறிவேப்பிலை


இது முதன்மையாக அதன் சுவைக்காக அறியப்படுகிறது. கறிவேப்பிலை (Curry Leaves) அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது குளிர்காலத்தில் ஏற்படும் மூச்சுத் திணறலைப் போக்க உதவுகிறது. குளிர் மாதங்களில் சுவாசிப்பதை இது எளிதாக்குகிறது. கூடுதலாக, இந்த இலைகள் செரிமானத்திற்கு உதவுகின்றன. மேலும் இவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் கறிவேப்பிலை பயனுள்ளதாக இருக்கும். இதில் சர்க்கரை அளவை குறைக்கும் குணங்கள் உள்ளன. இது நீரிழிவு நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.


கீரை


கீரையில் (Spinach) வைட்டமின் ஏ, சி, கே, இரும்புச்சத்து மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. கீரை வகைகள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதுகாக்கவும், பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகின்றன. இதன் ஆண்டிஆக்சிடெண்டுகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கின்றன, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன மற்றும் பல தீவிர நோய்களின் அபாயத்தையும் குறைக்கின்றன. கீரையில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.


மேலும் படிக்க | Volumetric Diet Plan: டயட் வேண்டாம், நன்றாக சாப்பிட்டே எடையை குறைக்க அட்டகாசமான வழி


வெந்தய கீரை


வெந்தய கீரை (Fenugreek Leaves) மிகவும் சத்தானது. இதில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. வெந்தய கீரை செரிமானத்திற்கு உதவுகின்றது, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகின்றது. மேலும் இது வலிகள் மற்றும் காயங்களை எதிர்த்துப் போராட உதவுகின்றது. வெந்தய கீரையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் (குறிப்பாக இரும்புச்சத்து) சீரான உணவுக்கு அவசியம். ஏனெனில் அவை உங்கள் ஆரோக்கியத்திற்கு பங்களிக்க உதவுகின்றன.


கொத்தமல்லி


கொத்தமல்லியில் (Coriander) வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், சளி மற்றும் இருமலில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. கொத்தமல்லி காய்கறிகள், தால், சாம்பார், ரசம், புலாவ் என அனைத்து உணவு வகைகளிலும் பயன்படுத்தபப்டுகின்றன. 


கடுகு கீரை


சர்சோங் கா சாக் எனப்படும் கடுகு கீரை பஞ்சாபில் மிகவும் பிரபலமானது. இது நமது உணவில் பல வித ஆரோக்கிய நன்மைகளை சேர்க்கிறது. வைட்டமின் ஏ, சி மற்றும் கே நிறைந்த இந்த பச்சை இலைகள், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த இவை ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி செரிமானத்தை மேம்படுத்துகின்றன.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | வாழைப்பழத்தை பாலுடன் சாப்பிடலாமா... நிபுணர்கள் கூறுவது என்ன..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ