Home Remedies For Acidity: அசிடிட்டி, நெஞ்செரிச்சல் எனப்படும் அமிலத்தன்மை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் தீவிரமான பிரச்னை.செரிமானம் தொடர்பான பிரச்சனையில் ஒன்றான இது, வாந்தி மற்றும் வயிற்றுபோக்கை ஏற்படுத்தி, கடுமையான உடல் நலக்குறைவை ஏற்படுத்தலாம். வயிற்றுப் பகுதியில் இருக்கும் இரைப்பையில், சுரப்பிகள் அளவுக்கு அதிகமாக சுரப்பதால் அசிடிட்டி ஏற்படும்.அசிடிட்டி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1. செரிமானம் சரியாக இல்லை என்றால் ஏற்படும் அமிலத்தன்மை காரணமாக, நெஞ்செரிச்சல் மட்டுமல்ல சில சமயங்களில் தலைவலி மற்றும்  மார்பு வலியை கூடஏற்படுத்துகிறது.  


2. காரம், உப்பு, புளிப்பு அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதும் ஆசிடிட்டியை ஏற்படுத்தும்.


3. மனஉளைச்சல், அதிகம் கோபப்படுவது, அதிகம் கவலை மற்றும் பயம் கொள்வது போன்ற எதிர்மறை எண்ணங்களும், ஆசிடிட்டியை ஏற்படுத்தும்.


ஆசிடிட்டியை போக்கும் உணவுகள் (Acidity Home Remedies)


தனியா என்னும் கொத்தமல்லி விதைகள்


பித்த தோஷத்தை சமநிலைப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. ஒரு கப் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதைகளை சேர்த்து கொதிக்கவைத்து, பின் வடிகட்டி  குடிப்பதன் மூலம் அமிலத்தன்மை என்னும் ஆசிடிட்டிக்கு தீர்வு காணலாம். மேலும் கொத்தமல்லி விதைகள் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும் பண்புகளைக் கொண்டிருப்பதால், வயிற்று அமிலத்தை நடுநிலையாக்குவதுடன், செரிமான அமைப்பில் ஏற்பட்டுள்ள வீக்கத்தைப் போக்க உதவுகிறது.


சீரகம் (Cumin Seeds)


சீரகம் அசிடிட்டியைக் குறைக்க உதவும் அற்புத மசாலா. சிறிது சீரகத்தை எடுத்து நன்றாக மென்று சாப்பிட்டாலே ஆசிடிட்டி பிரச்சனை தீரும்.முடியவில்லை என்றால், தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் குடிக்கலாம். தயிரில் சிறிதளவு வறுத்து பொடி செய்த சீரக பொடி சேர்த்து அருந்தலாம் இவ்வாறு செய்வதன் மூலம் ஆசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.


புதினா இலைகள் (Mint Leaves)


ஆயுர்வேதத்தில் புதினா இலைகள் ஆசிடிட்டிடக்கு அருமருந்தாக கருதப்படுகின்றன. அஜீரணம் மற்றும் அமிலத்தன்மையைப் போக்கக் கூடிய குளிர்ச்சியான பண்புகள் இதில் நிறைந்துள்ளனது. புதிய புதினா இலைகளை மென்று சாப்பிடலாம் அல்லது  புதினாவைக் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம். புதினா இலைகள் உடலில் செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டி, செரிமானம் மேம்பட உதவுகிறது. 


பெருஞ்சீரகம் (Saunf)


அசிடிட்டி  பிரச்சனைக்கு சிறிதளவு பெருஞ்சீரகம் எனப்படும் சோம்பு உட்கொள்வது பலனளிக்கும். பெருஞ்சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து  அருந்தலாம். சாப்பிட்ட சோம்பை மென்று சாப்பிடுவதும் ஆசிடிட்டி ஏற்படாமல் தடுக்கும். 


மேலும் படிக்க | 100 வயதை கடந்து வாழ ஜப்பானியர்கள் செய்யும் 6 விஷயங்கள்! என்னென்ன தெரியுமா?


நெல்லிக்காய் (Indian Gooseberry)


ஆயுர்வேதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நெல்லிக்காய் 100 வித நோய்களை தீர்க்க உதவுகிறது. செரிமான பிரச்சனைகளை தீர்க்கும் அருமருந்தாக இருக்கும், நெல்லிக்காயை கருப்பு உப்பை தடவி சாப்பிடுவது ஆசிடிட்டி பிரச்சனையை தீர்க்க உதவும். நெல்லிக்காய் ஜூஸ் அருந்துவதும், நல்ல பலன் கொடுக்கும்.


வாழைப்பழம் (Banana)


பதற்றம் அல்லது அமைதியின்மை காரணமாக ஏற்படும் ஆசிடிட்டி பிரச்சனைக்கு, பழுத்த வாழைப்பழத்தை சாப்பிடுவது நன்மை பயக்கும். வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ள நிலையில், உங்கள் அமைதியின்மையை குறைத்து ஆசிடிட்டிக்கும் தீர்வை அளிக்கிறது.


பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | மிருகங்களிடமிருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஹெல்தியான பழக்கங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ