உச்சி முதல் பாதம் வரை... வியக்க வைக்கும் தனியா என்னும் கொத்துமல்லி விதை..!!

தனியா என்னும் கொத்தமல்லி விதை நம் உடலுக்கு அள்ளிக் கொடுக்கும் ஆரோக்கிய நன்மைகள் பல. பல்வேறு வைட்டமின்கள், தாதுக்களோடு, ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ள தனியா என்னும் மல்லி விதை, உடலுக்கு பாதுகாப்பு கவசமாக அமைகிறது என்றால் மிகை இல்லை.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 22, 2024, 04:40 PM IST
  • உணவிற்கு சுவையையும் மனத்தையும் கொடுக்கும் மசாலா வகையைச் சேர்ந்த தனியா.
  • கொலாஜன் உற்பத்தியில் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது.
  • கொத்தமல்லி விதை என்னும் தனியாவை பயன்படுத்தும் முறை.
உச்சி முதல் பாதம் வரை... வியக்க வைக்கும் தனியா என்னும் கொத்துமல்லி விதை..!! title=

தனியா என்னும் கொத்தமல்லி விதை நம் உடலுக்கு அள்ளிக் கொடுக்கும் ஆரோக்கிய நன்மைகள் பல. பல்வேறு வைட்டமின்கள், தாதுக்களோடு, ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ள தனியா என்னும் மல்லி விதை, உடலுக்கு பாதுகாப்பு கவசமாக அமைகிறது என்றால் மிகை இல்லை.

உணவிற்கு சுவையையும் மனத்தையும் கொடுக்கும் மசாலா வகையைச் சேர்ந்த தனியா என்னும் கொத்தமல்லி விதை, செரிமான சக்தியை அதிகரிப்பதோடு, சிறுநீரக நோய்களை தடுக்கும் ஆற்றலையும் கொண்டது.வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் கே, கால்சியம், பாஸ்பரஸ் புரதச்சத்து நார்ச்சத்து இரும்புச்சத்து ஆகியவை நிறைந்த இதை தவறாமல் எடுத்துக் கொண்டால், சர்க்கரை நோய் கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனை அண்டாது என்று உணவில் நிபுணர்கள் கூறுகின்றனர்.

எலும்புகளுக்கு வலுவூட்டும் தனியா

கொத்தமல்லி விதை என்று அழைக்கப்படும் தனியாவில் வைட்டமின் கே நிறைந்துள்ளதால் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. இதனால் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு முறிதல் நோய் வராமல் தடுக்கப்படுவதோடு, எலும்பு முறிவு ஏற்படும் ஆபத்தையும் தடுக்கிறது.

கடுமையான நோய்களை தடுக்கும் ஆற்றல் கொண்ட தனியா

உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அவசியம். கொத்தமல்லியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள நிலையில், புற்றுநோய், இதய நோய் மற்றும் பலவற்றிற்கு வழிவகுக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. இதனால் சில புற்றுநோய்களின் அபாயம் பெருமளவு குறைவதோடு, இளமையாக (Health Tips) இருக்கவும் உதவுகிறது.

இதய நோய்கள் வராமல் தடுக்கும் தனியா

கொத்தமல்லி இதய ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் ஆற்றல் கொண்டது. தனியா ஒரு டையூரிடிக் ஆக செயல்படுவதால், உடலில் உள்ள அதிகப்படியான சோடியத்தை வெளியேற்றி இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். அதோடு கொத்தமல்லி, உடலில் தேங்கியுள்ள எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ராலை எரித்து பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சி என்னும் இதய நோய்அபாயத்தைக் குறைக்கிறது.

மேலும் படிக்க | நரம்பு மண்டலத்தை பாதிக்கும் வைட்டமின் B12 குறைபாடு... அறிகுறிகளும்... உணவுகளும்..!!

உடலில் வீக்கத்தை குறைக்கும் ஆற்றல் கொண்ட தனியா

கொத்தமல்லி உடலில் ஏற்படும் அழற்சியையும் வீக்கத்தையும் குறைக்க உதவுகிறது. அழற்சி சம்பந்தமான புற்றுநோய் முதல் பல நோய்களின் ஆபத்து குறையும் கொத்தமல்லியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தை குறைத்து புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.

சுகர் லெவலை குறைக்கும் ஆற்றல் கொண்ட தனியா

தனியா என்னும் கொத்தமல்லி விதைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்து. கொத்தமல்லி, இரத்த சர்க்கரையை அளவை சிறப்பாக நிர்வகிக்க உதவும் என்சைம்களை செயல்படுத்த உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்கள் கொத்தமல்லியை உணவில் சேர்த்துக் கொள்வதால் பலன் கிடைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொத்தமல்லி விதைகள்

கொத்தமல்லியில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படும். வைட்டமின் சி உட்கொள்வதான்ல், நோய்களை எதிர்த்து போராடும் வெள்ளை இரத்த அணுக்கள் நல்ல முறையில் வேலை செய்யும் . மேலும் இரும்பு சத்து உடலில் சேருவதற்கு உதவுகிறது. உடலில் ஏற்படும் காயத்தை குணப்படுத்துதல் மற்றும் கொலாஜன் உற்பத்தியில் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே முதமையை தடுக்கவும் தனியா உதவும்.

கண் பார்வையை வலுப்படுத்தும் தனியா

கொத்தமல்லி விதைகளில் வைட்டமின் ஏ நிறைந்திருப்பதால் விழித்திரைகளுக்கு ஊட்டமளிப்பதற்கும், கண்கள் உலர்வைதை தடுக்கவும் உதவுகிறது.

கொத்தமல்லி விதை என்னும் தனியாவை பயன்படுத்தும் முறை

தனியாவை பொடி செய்து வைத்துக் கொண்டு, காலையில் வெதுவெதுப்பான நீரில் சிறிது கலந்து குடிக்கலாம். இது தவிர, சமைக்கும் போது தவறாமல கொத்தமல்லி தூளை பயன்படுத்தவும். இதன் விதைகளை தண்ணீரில் போட்டு குடிப்பதும் பலன் தரும். இதற்கு, 2 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகளை 1 கப் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு அடுத்த நாள் அதனை லேசாக சுட வைத்து, பின்னர் வடிகட்டி இளஞ்சூடாக குடிக்கவும் அல்லது வடிகட்டிய பின் குடிக்கவும். உங்கள் காய்கறிகள் மற்றும் சாலட்களில் முடிந்தவரை பச்சை கொத்தமல்லியைச் சேர்ப்பதும் பலன் தரும். 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | கொழுப்பு கல்லீரல் ஏற்படாமல் இருக்க... செய்ய வேண்டியதும்.. செய்யக் கூடாததும்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News