அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட எளிய வீட்டு வைத்தியம்
Acidity Treatment: நெஞ்சு மற்றும் தொண்டையில் எரிச்சலுக்கு அசிடிட்டியும் ஒரு முக்கிய காரணமாகும். எனவே, இந்த சிக்கலில் இருந்து விடுப்பட இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றுங்கள்.
நெஞ்சு மற்றும் தொண்டையில் எரிச்சலுக்கு அசிடிட்டியும் ஒரு முக்கிய காரணமாகும். அசிடிட்டி பிரச்சனையால், நாம் பல உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். மறுபுறம், உங்களுக்கு இந்த பிரச்சனை அதிகமாக இருந்தால், உங்களுக்கு ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனையும் இருக்கலாம். எனவே, இந்த சிக்கலை புறக்கணிப்பது உங்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், இந்த சிக்கலில் இருந்து விடுப்பட இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றுங்கள்.
அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட டிப்ஸ்:
உணவுப் பழக்கத்தில் மாற்றம்
வைட்டமின் நிறைந்த உணவை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பொரித்த மற்றும் வறுத்த பொருட்களை உட்கொள்வதை நிறுத்தவும். இது தவிர, சரியான நேரத்தில் உணவை உண்ணுங்கள், வயிற்றில் மூன்றில் ஒரு பகுதியை காலியாக வைத்திருங்கள். இருப்பினும், நிவாரணம் பெறவில்லை என்றால், சரியான மருத்துவ ஆலோசனையைப் பெறவும்.
மேலும் படிக்க | Arthritis: மூட்டு வலியை அதிகரிக்கும் ‘இந்த’ உணவுகள் வேண்டாமே!
கார்பனேற்றப்பட்ட பானங்கள் அருந்துவதை தவிர்க்கவும்
நீங்கள் அசிடிட்டியால் பாதிக்கப்பட்டிருந்தால், கார்பனேற்றப்பட்ட பானங்களை அருந்துவதை தவிர்க்கவும். கார்பனேற்றப்பட்ட பானங்களை குடிப்பதால் காஸ் மற்றும் வயிற்றில் வீக்கத்தை ஏற்படும்.
தூங்கும் முறை
தூங்கும் போது, உங்கள் மேல் உடலை உயரமாகவும், உங்கள் கால்களை சற்று கீழே வைக்கவும். இதனால் வயிறு சம்பந்தமான நோய்களும் குறையும்.
உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும்
நீங்கள் அதிக எடையுடன் இருந்தால், ஆசிட் ரிஃப்ளக்ஸ் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, அசிடிட்டி பிரச்சனையால் நீங்கள் சிரமப்பட்டால், முதலில் உங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும்.
ஆசிடிட்டியை போக்க உதவும் உணவுகள்
கற்றாழை சாறு- பிரச்சனை அதிகமாக இருந்தால், உணவு உண்பதற்கு முன்பும் பின்பும் நான்கு ஸ்பூன் கற்றாழை சாறு குடிக்கவும்.
நெல்லிக்காய்- வைட்டமின்-சி இதில் அதிக அளவில் உள்ளது. புளிப்பாக இருந்தாலும், அமிலத்தன்மையைக் கட்டுப்படுத்துகிறது. 5-10 கிராம் நெல்லிக்காய் தூளை தினமும் இரண்டு முறை எடுத்துக் கொண்டால் அமிலத்தன்மையை நீங்கும்.
கிராம்பு மற்றும் துளசி இலைகள் - மெதுவாக மென்று சாப்பிடுவது குமட்டல், வாந்தி, அமிலத்தன்மை ஆகியவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Grapefruit: சாத்துக்குடி + ஆரஞ்சு கலவையின் அற்புதமான கனி! நோய் எதிர்ப்புப் பழம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ