எச்சரிக்கை! செம்பு பாத்திரத்தில் வைத்த தண்ணீரை குடிக்கும் வழக்கம் உள்ளதா!

செம்பு பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீர் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமே இல்லை என்றாலும், அதை சரியாக முறையாக உட்கொள்ளவில்லை என்றால்,  ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 6, 2022, 10:54 AM IST
  • தாமிர நீரைக் குடிக்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.
  • காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது சிறப்பு.
  • தாமிர பாத்திரத்தில் வைத்த நீருக்கு வாதம் மற்றும் பித்தத்தை சமநிலைப்படுத்தும் தன்மை உள்ளது.
எச்சரிக்கை!  செம்பு பாத்திரத்தில் வைத்த தண்ணீரை குடிக்கும் வழக்கம் உள்ளதா! title=

தாமிரம்  எனப்படும் செம்பு பாத்திரத்தில் அல்லது பாட்டிலில் வைத்த தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். தண்ணீரை சுத்திகரிக்கும் ஆற்றல்செம்பு அல்லது தாமிரத்திற்கு  உண்டு. பலர் தண்ணீர் சுத்திகரிப்பதற்கு பதிலாக, அதனை இயற்கையாக சுத்திகரிக்க செம்பு பாத்திரத்தில் தண்ணீரை வைத்து குடிக்க விரும்புகிறார்கள். இரவில் செம்பு பாத்திரம் அல்லது பாட்டிலில் நீரை நிரப்பி வைத்து, அது காலை வரை அந்த நீரானது செம்புப் பாத்திரத்தில் இருக்கும்போது, அதில் உள்ள காப்பர் அயான்ஸ் எனப்படும் ஒருவகையான திரவம் சிறிய அளவில் நீரில் கலக்கிறது. இது, நீரில் உள்ள பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண் கிருமிகளை அழித்து நீரைச் சுத்திகரிக்கின்றது. ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ள இந்த செம்பு நீர், உடலில் புதிய மற்றும் ஆரோக்கியமான அணுக்களை உருவாக்குவதற்கு துணை புரிகிறது. 

தாமிர பாத்திரத்தில் வைத்த நீருக்கு வாதம் மற்றும் பித்தத்தை சமநிலைப்படுத்தும் தன்மை உள்ளது. செம்பு பாத்திரத்தில் வைத்த தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் அதை குடிக்கும் முன் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம், இல்லையெனில் அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். தாமிர நீரைக் குடிக்கும் முன் என்னென்ன விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பார்ப்போம்.

முறையாக சுத்தப்படுத்தாத பாத்திரங்கள்

செம்பு பாத்திரங்களை அடிக்கடி கழுவாமல் பயன்படுத்தி வந்தால், அதில் பச்சை நிறத்தில் பாசி போல் படர்வதை காணலாம். அது வெறும் கரையோ அழுக்கோ கிடையாது. அந்த பச்சை நிறம் ஒரு வகையான ரசாயனம். காப்பர் பாத்திரமானது தண்ணீர் மற்றும் காற்றுடன் கலந்து காப்பர் கார்பனேட் (CuCO3) என்ற ரசாயனத்தை உருவாக்குகிறது, அதனால் தான் செம்பு பாத்திரத்தில் பச்சை நிற படலம் உருவாகிறது. இந்த காப்பர் கார்பனேட் கெமிக்கல் நீருடன் கலந்து நம் வயிற்றுக்குள் செல்லும் போது, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை தர வாய்ப்புள்ளது.

தரையில் வைக்கக் கூடாது

பலர் தூங்குவதற்கு முன் ஒரு செப்பு பாத்திரத்தை தரையில் வைத்து, காலையில் எழுந்தவுடன் அதன் தண்ணீரைக் குடிப்பார்கள், ஆனால் அவ்வாறு செய்வது தீங்கு விளைவிக்கும். தாமிர நீரை தரையில் வைக்கக்கூடாது. இது ஒரு மர மேசையில் வைக்கப்பட வேண்டும். இல்லையெனில் அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

அசிடிட்டி நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்

செப்பு நீர் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் அமிலத்தன்மை கொண்ட நோயாளிகள் தாமிர நீரைக் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நீரின் தாக்கம் அசிடிட்டி நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க | Heart Attack: மாரடைப்பு அபாயத்தை குறைக்க கவனத்தில் கொள்ள வேண்டிய ‘முக்கிய’ விஷயங்கள்!

காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது சிறப்பு

செம்பு நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். சாப்பிட்ட பிறகு தாமிரத்தில் வைத்திருக்கும் தண்ணீரைக் குடிப்பது தீங்கு விளைவிக்கும். வெறும் வயிற்றில் செம்புத் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் செரிமானம் நன்மை பயக்கும். உணவுக்குப் பிறகு அதை குடிப்பது செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

தாமிர பாதித்திரத்தில் நீரை சேமித்து வைக்கும் நேரம் 

இந்த நீரைக் குடிப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் மேம்பட வேண்டுமானால், அந்தத் தண்ணீரை ஒரு செப்புப் பாத்திரத்தில் குறைந்தது 8 மணிநேரம் வைத்திருக்க வேண்டும். செப்பு பாத்திரத்தில் 48 மணி நேரம் தண்ணீரை சேமித்து வைக்கலாம். எனினும், மேலே கூறியது போல் பாத்திரத்தை அவ்வப்போது முறையாக சுத்தம் செய்ய வேண்டும். 

மேலும் படிக்க | நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் நெல்லிக்காய் ‘4’ நோயாளிகளுக்கு மட்டும் எதிரி 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சர்க்கரை வியாதி இருக்கா? கண்களுக்கு இந்த பாதிப்புகள் வரலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News