Homeopathy is best in these diseases: ஹோமியோபதி பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? இந்த மருத்துவத்தின் அதிசயத்தைப் பற்றி பெரும்பாலான மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனியில் உருவாக்கப்பட்ட ஹோமியோபதி மருத்துவ முறையின் அற்புதம் அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஒன்று.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எந்த நோய்களுக்கு 'ஹோமியோபதி' சிறந்த சிகிச்சை, எந்தெந்த நோய்களில் 'அலோபதி' சிறந்தது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்


ஹோமியோபதியில், இயற்கையான பொருட்களின் குறைந்தபட்ச பயன்பாடு, உங்கள் உடல் தன்னைத்தானே குணப்படுத்த உதவுகிறது என்று நம்பப்படுகிறது. 


இந்த இயற்கைப் பொருட்களின் பெரிய அளவு ஆரோக்கியமான மக்களில் அறிகுறிகளை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது, ஆனால் சிறிய அளவில் பயன்படுத்துவது அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.   


மேலும் படிக்க | தினமும் இப்படி தூங்கினால் உங்கள் உடல் எடையை சுலபமாக குறைக்கலாம்


ஆட்டோ இம்யூன் நோய் என்பது உங்கள் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பின் ஆரோக்கியமான செல்களைத் தாக்கும் ஒரு நோயாகும்.முடக்கு வாதம், செலியாக் நோய், ஷ்ரோஜென்ஸ் நோய்க்குறி கண்கள் மற்றும் வாய் உலர்ந்ததுபோவது, முதுகெலும்பு மற்றும் பெரிய மூட்டுகளை பாதிக்கும் நோய், முடி உதிர்தல் ஆகியவற்றிற்கு ஹோமியோபதி சிறந்தது.
 
பாதிக்கப்பட்ட திசுக்கள் அல்லது உங்கள் உடலின் உறுப்புகளின் அமைப்பு மற்றும் செயல்பாடு காலப்போக்கில் குறைகிறது அல்லது அவற்றின் நிலை மோசமாகிறது. இந்த வகை நோயில், பாதிக்கப்பட்ட நபர் கீல்வாதம், புற்றுநோய், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்படுகிறார், இது காலப்போக்கில் மோசமடைகிறது. இதுபோன்ற விசயங்களில் ஹோமியோபதி சிறந்து செயலாற்றுகிறது.


 
மாதவிடாய் கோளாறு
மனநல கோளாறு என்பது பெண்களின் இயல்பான மாதவிடாய் சுழற்சியை நேரடியாக பாதிக்கும் ஒரு பிரச்சனை. ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள், பெண்களை பாதிக்கின்றன.


இது தவிர, மாதவிடாய் தொடர்பான பிற கோளாறுகளான டிஸ்மெனோரியா (அதிக ரத்தப்போக்கு, ரத்தம் உறைதல், வலி), மெனோராஜியா (ஒவ்வொரு மணிநேரமும் சானிடரி நேப்கின்களை மாற்ற வேண்டிய அவசியம் இருக்கும் அளவு தீவிர இரத்தப்போக்கு), முறைதவறி வரும் மாதவிடாய் ஆகியவற்றுக்கு ஹோமியோபதி சிறந்தது.


மேலும் படிக்க | Health Alert! கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க காரணமாகும் ‘5’ பழக்கங்கள்


மனநோய்
மனநோய் என்பது ஒரு நபரின் எண்ணங்கள், உணர்வுகள், நடத்தை மற்றும் மனநிலையை பாதிக்கும். வாழ்க்கையில் அமைதியின்மையை ஏற்படுத்தி பல சிக்கல்களை ஏற்படுத்தும். மன இறுக்கம், இருமுனை கோளாறு, மனச்சோர்வு போன்ற பிரச்சினைகள் அடங்கும். இதற்கும் ஹோமியோபதி சிறப்பாக தீர்வளிக்கிறது.



 
கடுமையான மற்றும் பருவகால நோய்கள்
பருவகால நோய்கள் பெரும்பாலும் வெவ்வேறு பருவங்களில் காலநிலை மாற்றங்களால் ஏற்படுகின்றன. இத்தகைய நோய்களில் அனைத்து வகையான காய்ச்சல், சளி, தொண்டை புண், தொற்று, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், ஒவ்வாமை ஆகியவை அடங்கும்.


மேலும் படிக்க | இதய துடிப்பை சீராக்கும் ‘பொட்டாஷியம்’; இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR