மது அருந்துவதால் நம் உடலுக்கு ஏற்படும் தீங்குகள் பற்றி நாம் அனைவரும் அறிவோம், ஆனால் அது நம் மூளையையும் தீவிரமாக பாதிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?. ஆல்கஹால் மூளையின் பல்வேறு பகுதிகளை பாதிக்கிறது. இது அறிவாற்றல் குறைபாடு, டிமென்ஷியா மற்றும் பலவீனமான நடத்தைக்கு வழிவகுக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

BLK மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நியூராலஜி மற்றும் ஹெட் நியூரோ இன்டர்வென்ஷன் இணை இயக்குநர் டாக்டர் வினித் பங்கா, மூளையின் முக்கியமான ஐந்து பகுதிகள் மதுவினால் பாதிக்கப்படுகின்றன என்பதை விரிவாக விளக்கியுள்ளார். 


மேலும் படிக்க | அடடே! இதெல்லாம் சைவ உணவைப் பத்தின கட்டுக்கதைகள் தானா? சைவம் தான் பெஸ்ட்!


1. நரம்பியக்கடத்தி செயல்பாடு


நரம்பியக்கடத்திகள் எனப்படும் இரசாயனங்கள் மூளையில் நரம்பு செய்திகளை பரிமாறிக்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நரம்பியக்கடத்திகளின் செயல்பாட்டை ஆல்கஹால் மாற்றுகிறது. இது 'GABA' எனப்படும் தடுப்பு நரம்பியக்கடத்தியின் விளைவை அதிகரிக்கிறது, இது தளர்வு மற்றும் தூக்கத்தை ஏற்படுத்துகிறது. மாறாக, இது உற்சாகமூட்டும் நரம்பியக்கடத்தியான 'குளுட்டமேட்டின்' செயல்பாட்டைத் தடுக்கிறது, இது சிந்தனை மற்றும் உற்பத்தித்திறன் குறைவதற்கு வழிவகுக்கும்.


2. மூளையின் அமைப்பு


அதிகப்படியான மது அருந்துதல் மூளையின் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும். இது மூளை திசுக்களின் அளவைக் குறைத்து, திரவம் நிறைந்த மூளை வென்ட்ரிக்கிள்களின் அளவை அதிகரிக்கலாம். இதன் விளைவாக, ஒரு நபரின் சிந்தனை திறன் பலவீனமடைகிறது, நினைவாற்றல், கவனம் செலுத்துதல் மற்றும் முடிவெடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது.


3. நரம்பியல் வேதியியல் சமநிலையின்மை


நீண்ட நேரம் மது அருந்துவது நரம்பியக்கடத்திகளின் நுட்பமான சமநிலையை சீர்குலைக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வு மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற மனநிலை தொடர்பான நோய்களுக்கு வழிவகுக்கிறது. மேலும், இது சுய கட்டுப்பாட்டை குறைக்கிறது.


4. மீசோலிம்பிக் பாதை


ஆல்கஹால் டோபமைன் அளவை அதிகரிப்பதன் மூலம் மூளையின் மீசோலிம்பிக் அமைப்பை செயல்படுத்துகிறது, இது மகிழ்ச்சி மற்றும் தூண்டுதலின் உணர்வுகளை ஏற்படுத்துகிறது. காலப்போக்கில், இந்த பாதைகள் மீண்டும் மீண்டும் மது அருந்துவதால் குறைவான உணர்திறன் அடைகிறது, இது ஆல்கஹால் சகிப்புத்தன்மைக்கு வழிவகுக்கிறது.


5. மூளை வேலை


முடிவெடுப்பதைக் கட்டுப்படுத்துவதற்கும் சிக்கலைத் தீர்ப்பதற்கும் பொறுப்பான மூளையின் பகுதிகளை ஆல்கஹால் பாதிக்கிறது. இது பிரச்சினைகளை நியாயப்படுத்தும் மற்றும் தீர்க்கும் திறனைக் குறைக்கிறது மற்றும் ஆபத்து சார்ந்து எடுக்கும் மோசமான நடத்தைகளை அதிகரிக்கிறது. அதாவது எதிர்மறை சிந்தனைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். அதனால், நல்லது எது, கெட்டது எது என பிரித்து பார்க்க முடியாத நிலை ஒருவருக்கு உண்டாகும். யார் எதை சொன்னாலும் அது அவருக்கு எதிராக இருப்பதுபோலவே தோன்றும்.


மேலும் படிக்க | வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் கண்களில் இந்த அறிகுறிகள் தோன்றும், ஜாக்கிரதை!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ