Fridge-ஐ சுத்தம் செய்ய சில எளிய டிப்ஸ்!
அனைத்து வீடுகளிலும் தற்போது ஃப்ரிட்ஜ் (fridge) உள்ளது. இத்தகைய ஃப்ரிட்ஜ்ஜை (fridge) ஒவ்வொருவரின் வீட்டில் அழுக்குகள் சூழ்ந்து படிந்திருக்கும்.
அனைத்து வீடுகளிலும் தற்போது ஃப்ரிட்ஜ் இருக்கின்றது. ஃப்ரிட்ஜ் (fridge) உள்ளது. இத்தகைய ஃப்ரிட்ஜ்ஜை (fridge) ஒவ்வொருவரின் வீட்டில் அழுக்குகள் சூழ்ந்து படிந்திருக்கும்.
நீண்ட நாட்கள் அப்படியே இருப்பதால், அவற்றைத் துடைத்தாலும் அந்த அழுக்குகள் செல்லாமல் இருக்கும். இந்த பிரச்சனைக்கு தீர்ப்பு தரும் வகையில் உங்களுக்கான சில எளிய வகை டிப்ஸ்.
> வெதுவெதுப்பான நீரில் டிஷ்வாஷ் சேர்த்து கொண்டு ஃப்ரிட்ஜ்ஜை தேய்த்துக் கழுவலாம். இதை இரண்டு முறை தேய்த்துக் கழுவுங்கள். உங்கள் ஃப்ரிட்ஜ் (fridge) புதிது போன்று மின்னும்.
> கறைப் படிந்த இடத்தில் சிறிது வினிகரை தெளித்து சிறிது நேரம் ஊற வைத்து, பின் சுத்தமான துணியால் தேய்த்தால், கறைகளானது காணமல் போய்விடும்.
> கறைகள் மிகவும் கடினமாக இருந்தால், பேக்கிங் சோடாவை கறைப் படிந்த இடத்தில் தூவி, பின் வினிகரை தெளித்து சிறிது நேரம் ஊற வைத்து பின் தேய்த்தால், கறைகள் நீங்கிவிடும்.
> எலுமிச்சைக் கொண்டு ஃப்ரிட்ஜ்ஜை (fridge) சுத்தம் செய்தால், ஃப்ரிட்ஜ் (fridge) நன்கு நறுமணத்துடன் இருக்கும் அத்துடன் அதில் படிந்திருக்கும் கறைகள் நீங்கிவிடும்.