பற்களில் மஞ்சள் கறையை நீக்குவது எப்படி: பற்கள் மஞ்சள் கறைகள் இல்லாமல் இருப்பது உங்களுடைய வாய் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதற்கான அறிகுறி. அதுமட்டுல்ல, அது உங்களுடைய முகத்துக்கு அழகையும் கூட்டக்கூடியது. வயதாக வயதாக பற்களில் வெண்மை நிறம் மாறி மஞ்சள் நிறம் படிய ஆரம்பிக்கும் தன்மை உண்டு. ஆனால் அதுதவிர பற்கள் மஞ்சள் நிறமாக இருப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. அவை என்ன? அவற்றை எப்படி வீட்டிலுள்ள சில பொருள்களை வைத்து சரிசெய்து முத்துப் போன்ற பளிச்சிடும் பற்களைப் பெறலாம் என்று பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பற்களில் மஞ்சள் கறை வர காரணங்கள்
பற்கள் வெண்மையாக இல்லாமல் மஞ்சள் கறை படிந்து காணப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவையாவன,


மரபணுக்கள், காபி, டீ அருந்தும் பழக்கம், முறையான பற்கள் சுகாதாரமின்மை, புகைப்பிடித்தல், கார்பனேட்டட் பானங்கள்.


மேலும் படிக்க | உடல் எடையை குறைக்கனுமா? அப்போ இந்த நீரை தினமும் குடியுங்கள்


மஞ்சள் பற்களை அகற்றுவது எப்படி?


1. சோடா மற்றும் எலுமிச்சை (Baking Soda and Lemon)
பேக்கிங் சோடா இயற்கையான சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது, மேலும் எலுமிச்சையில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த இரண்டு விஷயங்களின் கலவையானது உங்கள் வாய் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதற்கு நீங்கள் ஒரு கிண்ணத்தில் ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி பேக்கிங் பவுடர் மற்றும் ஒரு எலுமிச்சை சாறு கலக்கவும். இப்போது பல் துலக்குதலைப் பயன்படுத்தி பற்களில் தேய்க்கவும், இது வெண்மையாக்குவது மட்டுமல்லாமல், பாக்டீரியாவின் தடயத்தையும் அகற்றும்.


2. ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை (Orange And Lemon)
ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் பற்களில் இருக்கும் பாக்டீரியாக்களைத் தொந்தரவு செய்வதோடு பற்களை சுத்தம் செய்வதற்கும் பெரிதும் உதவுகின்றன. இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாய் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆரஞ்சு மற்றும் எலுமிச்சைத் தோலைத் தேய்த்து பற்களை சுத்தம் செய்யலாம்.


3. ஆயில் புல்லிங்  (Oil Pulling)
ஆயில் புல்லிங் என்பது ஒரு பழமையான நுட்பமாகும், இது தூத்பேஸ்ட் மற்றும் தூத்பிரஷ் கண்டுபிடிக்கப்படுவதற்கு முனபிலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றது. எண்ணெயை சிறிது நேரம் வாயில் வைத்திருந்து கொப்பளிக்கவும், இது பற்களில் இருக்கும் மஞ்சள் நிறத்தை அகற்ற உதவும்.


4. ஆப்பிள் சைடர் வினிகர்  (Apple Cider Vinegar)
ஆப்பிள் சிடார் வினிகர் உடல் ஆரோக்கியத்துக்கும் தலைமுடிக்கும் மட்டும் நன்மை பயப்பது அல்ல, அது பற்களையும் வெண்மையாக்கும் தன்மை கொண்டது. பற்களுக்கு இது ஒரு நல்ல ப்ளீச்சிங் ஏஜெண்டாகச் செயல்படுகிறது. இதற்கு 200 மில்லி தண்ணீரில் 2 ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரைக் கலந்து அதை மௌத்வாஷாகப் பயன்படுத்தலாம். வாயில் சிறிது இந்த கலவையை ஊற்றி, வாயின் மூலை முடுக்குகளில் நுழையும்படி ஒரு நிமிடம் வரை வாய்க்குள் வைத்திருந்து, வாயைக் கொப்பளிக்க வேண்டும். இது மிக வேகமாகச் செயல்பட்டு பற்களை ப்ளீச் செய்யும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | நோய் எதிர்ப்பு சக்தியை மோசமாக்கும் உணவுகள்! உங்களுக்கு நீங்களே ஆப்பு வைக்கலாமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ