உடலுறவு வைத்துக்கொண்டால் உடல் எடையை குறைக்கலாமா? அது எப்படி சாத்தியம்?
உடல் எடையை குறைக்க, யார் யாரோ என்னென்னவோ செய்து கொண்டிருக்கும் போது, ஒரு மருத்துவ அறிக்கைகளில் உடலுறவு கொண்டால் விரைவில் உடல் எடையை குறைக்கலாம் என குறிப்பிட்டிருக்கிறது.
உடல் பருமனுடன் இருப்பது, உடல் எடை அதிகமாக இருப்பது, தொப்பையுடன் இருப்பது போன்ற காரணங்களால் பலர், தங்களது எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பர். உடல் எடை அதிகரிக்க அதிகம் சாப்பிடுவது மட்டும் பெரிய காரணமாகிவிட முடியாது. நன்றாக, நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பதும், சரியான உணவு முறை பழக்கங்களை பின்பற்றாமல் இருப்பதும், காலை உணவை ஸ்கிப் செய்வதும் கூட உடல் எடை அதிகரிக்க காரணமாக இருக்கலாம். இவையன்றி, பெண்களுக்கு பிசிஓடி, தைராய்டு உள்பட சில உடல்நலக்காேளாறுகள் இருப்பதால் உடல் எடை அதிகரிக்கலாம். எதுவாய் இருப்பினும், நாம் நமது வாழ்வியல் முறைகளில் சிறிது மாற்றங்களை செய்தால், கண்டிப்பாக உடல் எடையை குறைக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உடல் எடையை குறைக்க..உடலுறவு..
உடல் எடையை குறைக்க ஹை இன்டன்ஸிடி உடற்பயிற்சிகள், கார்டியோ உடற்பயிற்சிகள், லோ இன்டன்ஸிடி உடற்பயிற்சிகள், ஸ்ட்ரெந்த் டிரெயினிங் என எவ்வளவோ உடற்பயிற்சிகள் இருக்கின்றன. இவையின்றி கலோரி டெஃபிசிட் டயட், சுகர் அற்ற டயட் என பல டயட் வகைகளும் உள்ளன. ஆனால், இவையுடன் சேர்த்து சிறந்த உடலுறவும் கூட உடல் எடை குறைக்க உதவும் என்கின்றனர் மருத்துவர்கள். அது எப்படி சாத்தியம்?
இது குறித்து பேசும் சில ஊட்டச்சத்து நிபுணர்கள், தம்பதிகள் நெருக்கமாக இருக்கும் போது இதயத்துடிப்பு அதிகரிக்கும் எனவும், இதனால் கலோரிகளை எரிக்கும் கார்டியோ உடற்பயிற்சியின் அளவிற்கு பயன் தரும் எனவும் கூறப்படுகிறது.
உடலுறவின் போது, இருக்கும் தீவிரம், வேகம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றை வைத்துதான், அந்த கலோரி எரிப்புகளும் அமையும் என்கின்றனர் மருத்துவர்கள். இது குறித்து 11 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மருத்துவ ஆய்வு நடத்தப்பட்டது. அதில், ஆன்களுக்கு தீவிர உடலுறவின் மூலமாக சுமார் 101 கலோரிகள் வரை குறையும் என்றும், பெண்களுக்கு 24 நிமிட உடலுறவு செயல்பாட்டி, சுமார் 69 கலோரிகள் வரை குறைக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும், உடல் எடையை குறைக்க உடலுறவை மட்டுமே நம்பி இருக்க வேண்டாம் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தீவிர உடலுறவு செயல்பாட்டை எப்படி ஊக்குவிப்பது?
உடலுறவுக்கான மனநிலை:
தீவிர உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்னர் உங்கள் மனநிலையை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும். சிற்றின்ப செயல்பாடுகள், தொடுதல், முத்தம் கொடுத்தல் போன்றவை இதை ஊக்குவிக்கும்.
மசாஜ் செய்தல்:
உடலுறவு கொள்வதற்கு முன்னர், சிற்றின்ப மசாஜ்களில் ஈடுபடுவதும் முக்கியமாகும். இது, உங்களின் பார்ட்னருடன் சீண்டலில் ஈடுபடுவதற்கும், அவருக்கும் உணர்ச்சியை தூண்டுவதற்கும் உதவும். இதனால், இருக்கமாக இருக்கும் உங்கள் அந்தரங்க தசைகள் தளர்ந்து, நல்ல-ஆரோக்கியமான உடலுறவுக்கு வழிவகுக்கும்.
உடற்பயிற்சி:
படுக்கையறையில் வியர்வை வரும் அளவிற்கு உடற்பயிற்சி செய்ய வேண்டாம். ஆனால், ஒரு சில உடற்பயிற்சிகளை செய்தாலே நாம் உடல் உறவை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு உடற்பயிற்சிதான் ஸ்குவாட்ஸ். இது, உடலுறவு கொள்பவர்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்தி, அவர்களுக்கு தனித்துவமான அனுபவத்தையும் வழங்குகிறது.
மேலும் படிக்க | படுக்கையறை வாழ்க்கை சலித்து விட்டதா? அதை புதுப்பிப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க!
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ