உலகில் பலர் சமீப காலமாக உடல் பருமன் பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர். பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு அடிப்படை காரணமாக இருப்பது உடல் பருமன்தான் என கூறப்படுகிறது. தற்போது மக்கள் எளிய ஆரோக்கிய வழிமுறைகளை பின்பற்ற ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் எடுக்கும் முயற்சிக்கு அடித்தளமாக அமைவது, தினமும் காலையில் நாம் செய்யும் நடை பயிற்சிதான். இது மிகவும் எளிமையான மற்றும் அதிகம் பயன் தரும் உடற்பயிற்சிகளும் ஒன்றாகும். இதனுடன் பல மருத்துவ நன்மைகளும் தொடர்புடையனவாக இருக்கின்றன. இதை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் இருந்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள உதவுவது வரை இதில் பல்வேறு மருத்துவ நன்மைகளும் இருக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு கிலோமீட்டர் நடப்பதால் எவ்வளவு கலோரிகள் குறையும் தெரியுமா? 


நாம் நடக்கும் வேகம் வைத்தும் எவ்வளவு தூரம் நடக்கிறோம் என்பது வைத்தும் நமது கலோரிகள் குறையும். ஒருவருக்கு எவ்வளவு கலோரி குறையும் என்பதை அவரது உடல் எடையும் தீர்மானிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். உதாரணத்திற்கு அதிக உடல் எடையுடன் இருப்பவர்கள் அதிகமாக கல்லூரிகளை குறைப்பர். காரணம், அவர்கள் நகர்வதற்கு அதிக ஆற்றல் தேவைப்படும். அப்போது நிறைய கல்லோரிகள் குறையும். 


உதாரணத்திற்கு 70 கிலோ எடை கொண்டவர் ஒரு கிலோமீட்டர் நடக்கும்போது கல்லூரிகள் குறைவதை விட 90 கிலோ எடை கொண்டவர்கள் நடக்கும் போது அதிகமாக கருவிகள் குறையும். 


நடையின் வேகம்: 


நாம் நடக்கும் வேகமும் கல்லூரிகளை குறைப்பதில் பெரும் பங்கு வகுக்கின்றன. ஐந்து முதல் ஆறு கிலோமீட்டர் வேகத்தில் ஒரு கிலோ மீட்டர் நடந்தால் குறையும் கலோரிகளை விட மூன்று முதல் நான்கு கிலோமீட்டர் வேகத்தில் நடந்தால் கலோரிகள் குறைவாகவே குறையும். 


விதவிதமான இடங்களில் நடப்பதும் கூட நமது கலோரி குறைப்பை தீர்மானிக்கும். சாதாரணமாக ரோட்டில் நடப்பதற்கும் உடற்பயிற்சி கூடத்தில் அல்லது வீட்டில் இருக்கும் திரெட் மிலில் நடப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இது உங்களுக்கு ஏதுவாக இருக்கிறதோ அதை தேர்வு செய்யலாம். 


உடலில் உள்ள மெட்டபாலிச அளவு வயது ஏற ஏற குறைய ஆரம்பிக்கும். இளமையாக இருப்பவர்கள் அதிக கலோரிகளை குறைக்கும் அதே சமயத்தில், வயதானவர்கள் குறைவான கலோரிகளை குறைக்கலாம். 


ஒரு கிலோ மீட்டரில்எவ்வளவு கலோரிகள் குறைக்க முடியும்


பொதுவான அளவுகோல்:


55 கிலோ இருக்கும் நபர், 5 கிலோ மீட்டர் வேக நடையுடன் ஒரு கிலோ மீட்டர் நடந்தால், 50 முதல் 60 கலோரிகள் வரை குறைக்கலாம். 


70 கிலோ எடை கொண்ட நபர், ஒரு கிலோ மீட்டருக்கு 60 முதல் 70 கலோரிகள் வரை குறைக்கலாம். மிதமான வேக நடையில் அவர்கள் பயிற்சி மேற்கொண்டால் எடை, இது போல குறையலாம். நாம் இதைவிட அதிகமாக நடந்தால், அதிகமாக கலோரிகள் குறையலாம். 


90 கிலோ வரை இருப்பவர்கள் ஒரு கிலோ மீட்டருக்கு 80 முதல் 100 கலோரிகள் வரை குறைக்கலாம். இவர்களும், வேகமாக நடந்தால், கலோரிகள் குறைக்கலாம். 


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ