குளிர்காலத்தில் ஒருவர் தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
Drinking Water | குளிர்காலம் குளிர்ந்த தண்ணீர் அல்லது வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்க வேண்டுமா? எவ்வளவு குடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Drinking Water Tips | குளிர்காலத்தில் குளிர்ச்சியான காலநிலை காரணமாக, தாகம் மிகவும் குறைவாகவே இருக்கும். இதனால், ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் தண்ணீர் கூட குடிக்கமாட்டார்கள். ஆனால் குளிர்காலத்தில் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் (Drinking Water). இல்லையென்றால், பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. அதனால், குளிர் காலமாக இருந்தாலும் நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
குளிர்ச்சியான சூழல் காரணமாக ஒருவருக்கு தண்ணீர் தாகம் ஏற்படாது. அதனால், தண்ணீர் குடிக்கத் தேவையில்லை என்று பலர் நினைக்கிறார்கள். உண்மையில், குளிர்காலத்தில் கூட உடலுக்கு போதுமான தண்ணீர் தேவை. உடலில் நீரின் அளவு குறைந்தால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். குளிர்காலத்தில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும், தண்ணீர் குடிக்காததால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
குளிர்காலத்தில் ஒருவர் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்?
குளிர்காலத்தில் காலை முதல் இரவு வரை நாள் முழுவதும் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். குளிர்காலத்தில் தாகம் எடுக்காவிட்டாலும் ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். ஆண்கள் ஒரு நாளைக்கு 10 முதல் 14 கிளாஸ் தண்ணீரும், பெண்கள் 8 முதல் 12 கிளாஸ் தண்ணீரும் குடிக்க வேண்டும். இதுதவிர தண்ணீருக்கு பதிலாக ஜூஸ், பால், டீ, தேங்காய் தண்ணீர் போன்றவற்றையும் குடிக்கலாம். இதனால், உடலில் நீர்ச்சத்து குறையாது. பல வகையான உடல்நலக் கோளாறுகள் தடுக்கப்படும்.
குளிர்காலத்தில் தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன?
குளிர்காலத்தில் தண்ணீர் குறைவாக குடிப்பதால் உடல் பருமன் ஏற்படும் அபாயம் உள்ளது. ஒரு நாளைக்கு நாம் எவ்வளவு உணவு உண்கிறோம் என்பதைப் பொறுத்து, நம் உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குறைவாக குடிக்கும்போது உண்ட உணவு செரிக்கப்படுவதில்லை. இதனால் செரிமானத்தில் பிரச்சனை ஏற்பட்டு உடல் பருமன் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
மேலும் படிக்க | மக்கள் முன்னெச்சரிக்கையாக மழைக் காலங்களில் செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை !
வாய் துர்நாற்றம்
தண்ணீர் குறைவாக குடிப்பதால் வாய் வறட்சி ஏற்படும். இதன் காரணமாக, பாக்டீரியாக்கள் வாயில் குவிகின்றன. மேலும் வாயில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமல்லாமல், உடலில் நீர்ச்சத்து குறைவாக இருக்கும்போது, வியர்வை மற்றும் சிறுநீர் கழிப்பது குறைகிறது. இதனால், உடலில் இருந்து நச்சுப் பொருட்கள் வெளியேறாமல், வாய்நாற்றம் எடுக்கும்.
தலைவலி
தண்ணீர் பற்றாக்குறையால் மூளை செல்கள் தற்காலிகமாக சுருங்குவதால் தலைவலி பிரச்சனை ஏற்படுகிறது. உடலில் போதிய தண்ணீர் இல்லாததால், வயிற்றில் அமிலம் உருவாகும். இதன் காரணமாக, வயிற்றில் வாயு உருவாகத் தொடங்குகிறது. மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் வரலாம்.
சோர்வு மற்றும் வறண்ட தோல்
உடல் சுறுசுறுப்பாக செயல்பட தண்ணீர் அவசியம். உடலில் தண்ணீர் பற்றாக்குறை இருந்தால், சிறிய வேலை செய்தாலும் சோர்வாக இருக்கும். உடலில் நீர்ச்சத்து இல்லாததால் சருமத்தில் வறட்சி, கருமை, அரிப்பு, சுருக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கும்.
தண்ணீர் குடிப்பதில் கவனம்
குளிர்காலத்தில் தண்ணீரை சுத்தமாக குடிக்க வேண்டும். நன்றாக காய்ச்சி பின்னர் ஆற வைத்து கூட குடிக்கலாம். ஆனால், சுகாதாரமில்லாத தண்ணீரை குடிக்கவே கூடாது. வாழ்நாள் பிரச்சனைகளை உங்களுக்கு அது ஏற்படுத்திவிடும். தண்ணீரில் தான் கெட்ட பாக்டீரியாக்கள், வைரஸ்கள் உருவாகின்றன என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | குளிர்காலத்தில் வீட்டை கதகதப்பாக வைத்துக்கொள்வது எப்படி? ஈசி டிப்ஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ