Unhygienic Cake Making Video Viral News in Tamil :உணவு பதார்த்தங்களில் அனைவருக்கும் பிடித்தது கேக். சைவ கேக்கும் உண்டு, முட்டை போட்ட கேக், ஒயின் சேர்த்து தயாரிக்கும் கேக் என கேக்கில் சைவ, அசைவ, ஆல்கஹால் என விதவிதமான கேக்குகள் தயாரிக்கப்படுகின்றன. அதிலும் பல்வேறு சுவைகளில் உள்ள கேக்குகள், அழகாக அலங்கரிப்பட்டு இருக்கும்போது அவற்றை பார்த்தாலே பசி ஆறும் என்று சொல்லலாம். ஆனா, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, கேக் விரும்பிகள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ, கேக் தயாரிக்கும் தொழிற்சாலையின் சுகாதாரமற்ற நிலையைக் காட்டுகிறது. கேக் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் கையுறைகள் எதுவும் அணியாமல் வெறும் கைகளுடன் வேலை செய்வதை வீடியோ காட்டுகிறது.


கேக்குகள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதை விளக்கும் வைரலான வீடியோவைப் பார்க்கும் அனைவருக்கும், இப்படி சுகாதாரமற்ற இடத்தில் தயாரிக்கப்படும் கேக்கையா நாம் வாங்கி சாப்பிடுகிறோம் என்ற கேள்வி எழாமல் இருக்காது.


மேலும் படிக்க | தினமும் கடலை மிட்டாய் சாப்பிடும் பழக்கம் இருக்கா? அப்போ உடனே வீடியோவை பாருங்கள்


வைரலான அதிர்ச்சியூட்டும் வீடியோ 
இந்த வீடியோவை (Viral Video) எக்ஸ் சமூக பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பயனர்,  “இப்படித்தான் கேக்குகள் தயாரிக்கப்படுகின்றன என்று எனக்குத் தெரியாது” என்று கருத்து தெரிவித்துள்ளார். சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதைக் காட்டும் இந்த வீடியோவுக்கு பல்வேறு தரப்பினரும் கோபத்துடனும், வருத்தத்துடனும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.



நீங்கள் வெளியில் சாப்பிட முடிவு செய்தால், சமையலறைக்குள் எட்டிப்பார்க்காதீர்கள் என்றும் பலர் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளனர். அதிலும், சாதாரண கடைகள் அல்ல, பிரீமியம் நட்சத்திர ஹோட்டல் அல்லது பேக்கரி அல்லது உணவகத்தின் சமையலறையைப் பார்த்தாலும் அது நமக்கு வருத்தத்தைத் தரலாம் என்று மர்றொருவர் குறிப்பிடுகிறார்.  


இந்த வீடியோ, வெளியில் சாப்பிடும் உணவுகளின் தரம் பற்றிய பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. பணம் செலவு செய்து கடைகளில் வாங்கி உண்ணும் பழக்கம் அதிகரித்திருக்கும் நிலையில், முடிந்தால் ஏன் வீட்டு சமையலையே தொடரக்கூடாது என்ற எண்ணத்தையும் இந்த வீடியோ ஏற்படுத்துகிறது.


மேலும் படிக்க | ரயிலில் தூங்க தூளி கட்டி பல்பு வாங்கிய தில்லாலங்கடி: வீடியோ வைரல்


சுகாதாரமான முறையில் வீட்டிலேயே சுலபமாக கேக் செய்துவிடலாம். செய்வதும் எளிது, ஆரோக்கியத்திற்கும் நல்லது.


கேக் செய்ய தேவையான பொருட்கள்


மைதா - 150 கிராம்


கோகோ பவுடர் - 10 கிராம்


பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி


உப்பு - ஒரு சிட்டிகை


உப்பு இல்லாத வெண்ணெய் - 50 கிராம்


சர்க்கரை - 150 கிராம்


முட்டை - ஒன்று


சூரியகாந்தி எண்ணெய் - 100 கிராம்


வினிகர் - 5 மில்லி


வெனிலா எசென்ஸ் - ஒரு தேக்கரண்டி


ஃபுட் கலர் - ஒரு தேக்கரண்டி


க்ரீம் சீஸ் செய்ய தேவையான பொருட்கள்


க்ரீம் சீஸ் - 250 கிராம்


விப்பிங் க்ரீம் - 150 கிராம்


வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்


ஐசிங் சுகர் - 75 கிராம்


மேலும் படிக்க | Boycott: தீவிரமாகும் மாலத்தீவு சர்ச்சை! வைரலாகும் Chalo Lakshadweep ஹேஷ்டேக் வைரல்


கேக் செய்முறை


வெண்ணெயை நன்றாக அடித்து சர்க்கரை சேர்த்து நுரைபொங்க அடித்து கலந்துக் கொள்ளவும். அதில் முட்டையைச் சேர்த்து க்ரீமாக வரும்படி அடித்துக் கொண்டு, அதில் சூரியகாந்தி எண்ணெய், வினிகர் சேர்த்து நன்றாக அடித்து கலக்கவும். வெனிலா எசென்ஸையும் சேர்த்துக் கொள்ளவும்.


மைதா, பேக்கிங் பவுடர், ஃபுட் கலர், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து மூன்று முறை சலித்து வைக்கவும். அடித்துவைத்த கலவையுடன் மாவுக் கலவையை பதமாக சேர்த்துக் கலக்கவும். இந்த மாவுக் கலவையை வெண்ணெய் தடவிய கேக் தட்டில் ஊற்றவும்.


குக்கரில் கேக் செய்யும் முறை


குக்கரின் அடியில் 2 இன்ச் அளவுக்கு உப்பு போடவும். 10 நிமிடங்கள் அதிக தீயில் இருக்க வேண்டும் பின்னர் உப்பின் மேல் ஒரு ஸ்டாண்டு வைத்து அதில் கேக் தட்டை வைத்து மிதமான தீயில் 25 முதல் 30 நிமிடங்கள் சமைக்கவும். குக்கரில் கேஸ்கட் மற்றும் விசில் போட வேண்டாம். கேக் தயாரான உடன் சிறிது நேரம் ஆறவிடவும். 


அவனில் கேக் செய்யும் முறை


ஓவனை (oven) 180 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் சூடு செய்யவும். அதற்கு 10 நிமிடங்கள் கழித்து கேக் தட்டை வைத்து 25 முதல் 30 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். கேக் தயாரித்தவுடன் சிறிது நேரம் ஆறவிடவும்.


க்ரீம் சீஸ் செய்யும் முறை


க்ரீம் சீஸை நன்றாக அடித்து அதனுடன் கெட்டியாக அடித்த விப்பிங் க்ரீமை சேர்க்கவும். அதனுடன் வெனிலா எசென்ஸ், ஐசிங் சுகர் சேர்த்து கெட்டியாக வரும்வரை அடித்து கேக் லேயரில் தடவவும். எல்லா பக்கமும் தடவிய பின் ஸ்டார் நாசில் (nozzle) பயன்படுத்தி டிசைன் செய்யவும். உங்களுக்கு பிடித்தது போல அலங்கரித்துக் கொள்ளவும்.


ஆரோக்கியமான சுவையான கேக் வீட்டிலேயே தயார்... 


மேலும் படிக்க | காதலுக்காக என்ன செய்யலாம்? 2000 கோடி ரூபாயை வேண்டாம் என்று சொன்ன காதலி!


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.) 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ