மெட்டபாலிசம் என்றால் என்ன: மெட்டபாலிசம் என்பது, உடலுக்கு தேவையான ஆற்றலை உணவில் இருந்து உறிஞ்சும் வேகத்தை குறிக்கிறது.சுருக்கமாகச் சொன்னால் நம்முடைய உடலின் ஆற்றலுக்கு ஆதாரமாக இருப்பது உணவு. அந்த உணவை உடம்பு கிரகித்துக் கொண்டு அதை ஆற்றலாக மாற்றுவது தான் மெட்டபாலிசம் என்னும் வளர்ச்சியை மாற்றம். ஒருவர் வயது ஏற ஏற நமது மெட்டபாலிசம் திறன் குறைந்து கொண்டே போகும். அதன் காரணமாகவே உடல் எடை அதிகரிக்கிறது. மேலும் தைராய்டு போன்ற சில ஹார்மோன்கள் சுரப்பதாலும் மெட்டபாலிசம் பாதிக்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், மெட்டபாலிசம் (Metabolism) என்னும் வளர்ச்சியை மாற்றம் சிறப்பாக இருந்தால் மட்டுமே, இலக்கை அடைய முடியும். கொழுப்பை விட, தசைகள் தான், அதிக கலோரிகளை உதவுகிறது. எனவே மெட்டபாலிசம் அதிகரிக்க உடலில் வலுவான திசைகள் தேவை. அதிக அளவில் மெட்டபாலிசம் என்னும் வளர்ச்சியை மாற்றம் இருக்கும் போது, உடல் எடையை குறைப்பது மிகவும் (Weight Loss Tips) எளிதாகிறது. ஏனென்றால் நாம் உண்ணும் உணவு, செய்யும் உடற்பயிற்சிகள் மூலம், அதிக கலோரிகளும் கொழுப்பும் எரிக்கப்படுகின்றன.


உடல் பருமனும் மெட்டபாலிசமும்


இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், எவருக்குமே சரியான நேரத்தில் சாப்பிடவோ, சரியான நேரத்தில் தூங்கவோ நேரமே இல்லை. அதோடு ஆரோக்கிய உணவுகளை தவிர்த்து விட்டு கிடைத்த உணவுகளை சாப்பிடுவதால், உடல் பருமன், தொப்பை கொழுப்பு என்பது பொதுவான பிரச்சனை.  இந்நிலையில், உடல் எடையை குறைக்க மெட்டபாலிஸம் அவசியம். இந்நிலையில், மெட்டபாலிசம் குறைவாக இருப்பதற்கான அறிகுறிகள், அதனை அதிகரிக்க செய்ய வேண்டியது என்ன என்பதையும் அறிந்து கொள்ளலாம்.


மெட்டபாலிசம் குறைவாக இருப்பதற்கான அறிகுறிகள்


நீங்கள் நாள் முழுவதும் சோர்வாக, பலவீனமாக, எதிலும் ஆர்வம் இல்லாமல் இருந்தால், அது வளர்ச்சியை மாற்றம் மிகவும் குறைவாக இருக்கிறது என்பதற்கான முக்கிய அறிகுறி. கனவில் இருந்து கலோரிகள் உடைக்கப்பட்டு, அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, ரத்தத்தில் இருக்கும் ஆக்சிடனுடன் கலந்து நமக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது. எனவே வளர்ச்சிதை மாற்றம் மந்தமாக இருந்தால் உடலுக்கு ஆற்றல் கிடைக்காமல், சோம்பல் பலவீனம் ஆகியவை ஏற்படும். என்ன என்ன செய்தாலும் உடல் எடை குறையாமல் இருப்பதும் வளர்ச்சிதை மாற்றம் மந்தமாக இருப்பதற்கான அறிகுறிகள். ஆனால் நீங்கள் சாப்பிடும் உணவில் இருந்து கிடைக்கும் கலோரிகள் சரியாக எரிக்கப்படாமல், அவை கொழுப்பாக உடலில் சேர்ந்து கொண்டே இருக்கும். மேலும் மலச்சிக்கல், வயிறு உப்பிசம், அசிடிட்டி போன்ற செரிமான கோளாறுகள் அடிக்கடி ஏற்பட்டால் அவை வளர்ச்சியை மாற்றம் சரியாக இல்லை என்பதற்கான அறிகுறியாகும்.


மேலும் படிக்க | Alzheimer: அல்சைமர் ஒண்ணும் பெரிய வியாதி இல்ல! சுலபமா சரி செய்யலாமே! ஹெல்த் டிப்ஸ்


மெட்டபாலிசம் அதிகரிக்க செய்ய வேண்டியவை


1. மெட்டபாலிசம் அதிகரிக்க, உடற்பயிற்சி மூலம் தசைகளை வலுவாக்குவது சிறந்த வழி. இதற்கு ப்ரோட்டீன் நிறைந்த உணவு அதிகம் தேவை. இதற்கு சோயா உணவுகள், முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவை டயட்டில் இருக்க வேண்டும்.


2. நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதாலும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கலாம். வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது, சீரகம் கலந்த நீர் குடிப்பது ஆகியவை, மிகச் சிறந்த பலனை கொடுக்கும்.


3. பல வகை சத்துக்கள் நிறைந்த சமச்சீரான உணவு, சிறந்த வளர்ச்சி துறை மாற்றத்திற்கு அவசியம்.


4. நல்ல தூக்கம், வளர்ச்சியை மாற்றத்தை அதிகரிக்கும். தூக்கமின்மையால், மெட்டபாலிசம் மந்தமாகி உடல் எடை கூடும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | எச்சரிக்கை! அளவுக்கு அதிகமான இளநீர் ஆரோக்கியத்தை பாதிக்கும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ