அடிவயிற்று கொழுப்பை அடியோட போக்கணுமா? இந்த நீர் தாங்க சரியான சாய்ஸ்
Weight Loss Drink: உடல் எடையை குறைக்க எலுமிச்சை கலந்த தண்ணீர் தவறாமல் உட்கொள்ள வேண்டும் என்று நாம் அடிக்கடி கேள்விபட்டிருக்கிறோம், ஆனால் அது உண்மையில் தொப்பையை குறைக்கிறதா? வாருங்கள் உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
எலுமிச்சம்பழ தண்ணீரால் தொப்பை கொழுப்பை கரைப்பது எப்படி: கோடை காலம் ஆரம்பமாகிவிட்டது, கொளுத்தும் கோடை வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் உடல் வெப்ப பிரச்னையில் இருந்து விடுபட எலுமிச்சை சாறு மிகவும் பயன்தரும். நம்மில் பெரும்பாலோர் இந்த பயணத்தை மிகவும் விரும்பி அருந்துவோம். இந்த கோடைகால சுவையான பானத்தை வீட்டிலேயே எளிதாக தயார் செய்து குடிக்கலாம், மேலும் இது வண்டிகளில் சந்தைகளில் மலிவாக கிடைக்கக்கூடும் ஒரு பானமாகும். அத்துடன் எலுமிச்சை சாறு உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற கல்லீரலுக்கு உதவுகிறது. இது உடலில் பித்தத்தை அதிகரிக்கிறதுய. இது கொழுப்பு மற்றும் கொழுப்புக் கட்டிகளை உடைக்க உதவுகிறது.
எலுமிச்சை சாறு உடல் எடையை குறைக்குமா?
எலுமிச்சை தொடர்ந்து குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும் என்று நாம் தொடர்ந்து கேள்விப்பட்டிருப்போம். அதிகாலையில் ஒரு டம்ளர் எலுமிச்சைப் பழத்தை குடிப்பது தொப்பையைக் குறைக்க உதவும் என்று சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர், மேலும் பலர் இந்த பானத்தில் தேனைச் சேர்த்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும் என்கிறனர், ஆனால் எலுமிச்சைப் பழம் உண்மையில் எடையைக் குறைக்கிறதா? வாருங்கள் இதன் உண்மை என்ன என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
மேலும் படிக்க | அசத்தும் ஆயுர்வேதம்: 5 பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு!!
எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி-6, பெக்டின் மற்றும் நார்ச்சத்துகள் ஏராளமாக உள்ளன. இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது. அதேபோல் எலுமிச்சையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன, இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களின் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது. எலுமிச்சை நீரை உட்கொள்வதன் மூலம், வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி தேங்கியிருக்கும் கொழுப்பு குறையத் தொடங்குகிறது, அதாவது உங்கள் எடை வேகமாக குறைகிறது.
பசியை கட்டுப்படுத்த உதவுகிறது
எலுமிச்சையில் பெக்டின் என்ற பொருள் உள்ளது, இது பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது, மேலும் இதைக் குடிக்க ஆரம்பித்தப் பிறகு எண்ணெய் உணவின் மீது இருக்கும் நாட்டம் குறையத் தொடங்குகிறது. இதில் உள்ள ஃபிளாவனாய்டுகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கின்றன, அதே நேரத்தில் உடலை நச்சுத்தன்மையாக்குகின்றன. எலுமிச்சையில் உள்ள பொட்டாசியம் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதோடு இரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது.
எலுமிச்சைப்பழம் பானத்தை தயாரிப்பது எப்படி?
உங்கள் தொப்பை கொழுப்பில் எலுமிச்சையின் தாக்கம் அதிகமாக இருக்க வேண்டுமெனில், இதற்கு முதலில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை எடுத்து அதில் ஒரு சிறிய எலுமிச்சையை பிழியவும். இப்போது அதில் உப்பு மற்றும் சீரக தூள் கலந்து குடிக்கவும். காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை வேகமாக குறையும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஜாக்கிரதை! Vitamin C குறைபாடு இருந்தால் உடலில் இந்த பிரச்னைகள் வரும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ