இரவில் கார்போஹைட்ரேட் அல்லது எந்தவித உணவுகளையும் சாப்பிடாமல் இருந்து காலையில் எழுந்திரிக்கும்பொழுது நீரிழிவு நோயாளிகளின் உடலில் க்ளுக்கோஸ் அளவு அதிகமாக இருக்கிறது.  நீரிழிவு நோயாளிகளுக்கு காலை எழுந்ததும் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது.  அதிகாலையில் கல்லீரலிடம் க்ளுகோஸை உற்பத்தி செய்யக்கோரி உடல் கூறுகிறது, இது நாம் காலை நேரத்தில் எழுந்திரிப்பதற்கான ஆற்றலை வழங்குகிறது.  இது கணையத்தில் உள்ள செல்களை இன்சுலினை வெளியிட தூண்டுகிறது, இதன் காரணமாக நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.  இவ்வாறு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது அன்றைய நாளுக்கு நமது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது, ஆனால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதல்ல.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படும்! இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா?


இதுமட்டுமின்றி சரியான  மருந்துகளை எடுத்துக்கொள்ளாமை, தூங்குவதற்கு முன்னர் ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வது போன்ற சில காரணங்களால் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கலாம்.  இருப்பினும் ரத்த சர்க்கரையின் அளவு உயர்வது நபருக்கு நபர் மாறுபடும், இரவு தூங்குவதற்கு முன்னர் உங்கள் உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் மறுநாள் காலையில் எழுந்திருக்கும்போதும் உங்கள் உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும்.  அவ்வாறு சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்க உணவு முறையை மாற்ற வேண்டும் மற்றும் தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி அல்லது ஏதேனும் சில உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.



காலை நேரத்தில் உயர் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உடற்பயிற்சி உதவிகரமாக இருக்கும், இரவு உணவு உண்ட பின்னர் நடைபயிற்சியோ அல்லது உடற்பயிற்சியோ செய்தால் ஒரே இரவில் ரத்த சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கும்.  அதேசமயம் இரவில் உடற்பயிற்சி செய்வதில் கவனமாக இருக்க வேண்டும் ஏனெனில் இரவில் கடுமையான உடற்பயிற்சிகளை செய்தால் ஒரே இரவில் உங்கள் உடலிலுள்ள ரத்த சர்க்கரை அளவு குறைந்து பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் அதனால் போதுமானவரை காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருங்கள்.


மேலும் படிக்க | குண்டான பெண்களுக்கு நீண்ட காலம் கோவிட் இருக்கும்! உடல் பருமனை குறைக்க மற்றொரு காரணம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ