குண்டான பெண்களுக்கு நீண்ட காலம் கோவிட் இருக்கும்! உடல் பருமனை குறைக்க மற்றொரு காரணம்

Corona In Women: அதிக எடை கொண்ட பெண்களை அதிக சித்திரவதை செய்யும் நீண்ட கால கோவிட்  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 2, 2022, 01:54 PM IST
  • அதிக எடை கொண்ட பெண்களுக்கு கோவிட் ஆபத்து அதிகம்
  • பெண்களை சித்திரவதை செய்யும் நீண்ட கால கோவிட்
  • உடல் பருமனைக் குறைக்க மற்றுமொரு காரணம்
குண்டான பெண்களுக்கு நீண்ட காலம் கோவிட் இருக்கும்! உடல் பருமனை குறைக்க மற்றொரு காரணம் title=

Covid-19 After Effects: ஆண்களை விட அதிக எடை கொண்ட பெண்கள் நீண்ட கால கோவிட் நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று தெரியவந்துள்ளது. இப்படி பாதிக்கப்படும் பெண்களுக்கு, மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, சோர்வு, நினைவாற்றல் பிரச்சினைகள் மற்றும் பதட்டம் போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகம். புதிய ஆய்வு ஒன்றில் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தின் (யுஇஏ) ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, அதிக உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) இருப்பது இந்த நிலையுடன் தொடர்புடையது. அதோடு, ஆண்களை விட அதிக எடையுள்ள பெண்கள் நீண்ட காலத்திற்கு கோவிட் நோயின் தாக்கத்தை அனுபவிக்கும் வாய்ப்பு அதிகம் என தெரியவந்துள்ளது.  

PLOS குளோபல் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி, நீண்ட கால கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக குணமடைபவர்களை விட கூடுதல் மற்றும் அடிக்கடி நிரந்தர பராமரிப்பு தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

யுஇஏவின் நார்விச் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் வாசிலியோஸ் வசிலியோ உடல் பருமனான பெண்களுக்கான கோவிட் பற்றி தெளிவுபடுத்துகிறார். "லாங் கோவிட் என்பது ஒரு கடினமான நிலையாகும், இது கோவிட் நோயின் போது அல்லது அதற்குப் பிறகு உருவாகிறது. இதன் அறிகுறிகள் 12 வாரங்களுக்கு மேல் நீடிக்கும். மூச்சுத் திணறல், இருமல், படபடப்பு, தலைவலி மற்றும் கடுமையான சோர்வு ஆகியவை அறிகுறிகள் நீண்ட காலத்துக்குத் தொடரும்’ என்று பேராசிரீயர் வாசிலியோஸ் வசிலியோ கூறுகிறார்.

இதைத்தவிர, மார்பு வலி அல்லது இறுக்கம், மூளை சோர்வு, தூக்கமின்மை, தலைச்சுற்றல், மூட்டு வலி, மனச்சோர்வு மற்றும் பதட்டம், பசியின்மை, தலைவலி, வாசனை அல்லது சுவை உணர்வில் ஏற்படும் மாற்றங்கள் ஆகிய அறிக்குறிகளும் தோன்றும். 

மேலும் படிக்க | தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படும்! இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா?

2020 இல் நேர்மறையான கோவிட் பிசிஆர் சோதனை முடிவைப் பெற்ற நோர்ஃபோக்கில் உள்ள நோயாளிகளை ஆராய்ச்சி குழு ஆய்வு செய்தது. மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, சோர்வு, நினைவாற்றல் குறைபாடுகள் மற்றும் பதட்டம் போன்ற நீண்டகால அறிகுறிகளை உள்ளடக்கிய ஆன்லைன் கணக்கெடுப்பில் மொத்தம் 1,487 பேர் பங்கேற்றனர்.

பங்கேற்பாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (774) குறைந்தது ஒரு நீடித்த கோவிட் அறிகுறியையாவது அனுபவித்து வருவதை அவர்கள் கண்டறிந்தனர். பிஎம்ஐ, பாலினம், போதைப்பொருள் பயன்பாடு, பிற சுகாதார நிலைமைகள் மற்றும் அவர்கள் பின்தங்கிய பகுதியில் வாழ்ந்தார்களா என்பது உள்ளிட்ட காரணிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

"தொற்றுநோயின் முதல் ஆண்டில் இங்கிலாந்தின் கிழக்குப் பகுதியில் கோவிட்க்கு நேர்மறை சோதனை செய்த கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நீடித்த கோவிட் அறிகுறிகளைப் புகாரளித்தனர் என்பதை இவை காட்டுகின்றன" என்று வசிலியோ கூறினார். "சுவாரஸ்யமாக, ஆண்களை விட அதிகமான பெண்களுக்கு நீண்ட கோவிட் அறிகுறிகள் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். அதிக பிஎம்ஐ என்பது நீண்ட காலம் தொடரும் கோவிட் நோயுடன் தொடர்புடையது என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம்" என்று வசிலியோ கூறுகிறார்.

எனவே, உடல் பருமன் என்பது ஆரோக்கியத்திற்கு பல தீமைகளை ஏற்படுத்தும் என்று இந்த ஆராய்ச்சி கூறுகிறது.

மேலும் படிக்க | Covid New Wave: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! கோவிட் அலையால் சீனாவில் லாக்டவுன் அமல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News