நம்மில் பலர் நம்மையே அறியாமல் தூக்கத்தில் பேசிக்கொண்டிருப்போம். ஆனால், நாம் என்ன பேசுகிறோம் என்பதோ அல்லது பேசினோமா என்பதோ நினைவில் இருக்காது. இதை தூக்கத்தில் உளருவது என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இது ஒரு வகையான வியாதி எனவும் அதிர்ச்சி கொடுக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூக்கத்தில் பேசும் வியாதி: 


ஒருவர், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது அவரையே அறியாமல் ஏதேதோ உளருவதுதான் தூக்கத்தில் பேசும் வியாதி. இது, Somniloquy என ஆங்கிலத்தில் அழைக்க்கப்படுகிறது. இப்படி பேசுபவர்கள், ஒரு முழு சொற்றொடரையும் பேசலாம், படத்தில் வரும் ஒரு வசனத்தை கூறலாம், அல்லது விஜய் ஆண்டனியின் பாடல் வரிகளை போல ஏதேனும் எழுத்துக்களை வைத்து உளரலாம். ஒரு சிலர், எப்போதாவதுதான் இதுபோன்று தூக்கத்தில் பேசுவர். ஆனால், ஒரு சிலருக்கோ இது தொடர்கதையாக இருக்கும். 


மேலும் படிக்க | ஓவர் எடையால் ஒரே டென்ஷனா? காலையில் இதையெல்லாம் செய்தால்... உடனே குறையும்


இது இயல்பான விஷயமா?


ஒரு ஆய்வின் படி, உலகில் உள்ள 66% மக்களுக்கு தூக்கத்தில் பேசும் பழக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 17% பேருக்கு அடிக்கடி தூக்கத்தில் பேசும் வியாதி உள்ளது. இவர்கள், மூன்று மாதங்களில் அதிக முறை தங்களது தூக்கத்தில் பேசியுள்ளார்களாம். இதனால், இது பலருக்கும் உள்ளது என்பது ஆராய்ச்சிகளின் மூலம் தெரிகிறது. 


இதற்கான காரணம்:


பல மருத்துவ நிபுணர்களும் ஆராய்ச்சியாளர்களும் பல மாதங்கள் முயற்சி எடுத்தும், தூக்கத்தில் உளரும் வியாதிக்கு பின்னால் என்ன இருக்கிறது என கண்டறிய முடியாமல் திணறியுள்ளனர். ஆனால், இது எதனால் வரலாம் என்பதற்கான சில அனுமானங்கள் மட்டும் நிபுணர்களிடம் உள்ளது. தூக்கத்தில் பேசுவது, குடும்பத்திலிருந்து வழிவழியாக வந்த ஒன்றாக இருக்கலாம். ஒருவர், மனம் தொடர்பான பிரச்சனைகளை ஒருவர் சந்தித்து வருகிறார் என்றால் அவருக்கும் தூக்கத்தில் பேசும் பழக்கம் உண்டாகலாம். ஒருசிலர், கெட்ட கனவுகள் வரும் போது தூக்கத்தில் உளருவர். உடல் நிலை பிரச்சனையால் சிலர் எடுத்துக்கொள்ளும் மருந்தின் பக்க விளைவு கூட தூக்கத்தில் பேசும் வியாதி வடிவில் வரலாம் எனக்கூறப்படுகிறது. சில நேரங்களில் நமக்கு மிகவும் உடல் நிலைசரியில்லாத நேரத்தில் கூட நாம் தூக்கத்தில் பேசலாம். 


இதை தடுப்பது எப்படி?


தூக்கத்தில் பேசும் வியாதியினால், பேசுபவருக்கு ஒன்றும் ஆபத்து இல்லை. அவருடன் உறங்கும் பார்ட்னருக்குதான் ஆபத்து. இது எப்போதாவது நிகழ்வதாக இருந்தால், பயமில்லை. ஆனால் அடிக்கடி இவ்வாறு தூக்கத்தில் பேசும் பழக்கம் இருந்தால் அதை கவனத்தில் கொண்டு மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கல். இங்கே கொடுக்கப்படும் டிப்ஸை பின் தொடருங்கள்:


-நன்றாக உறங்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள். இரவில் சீக்கிரம் தூங்கி காலையில் தாமதமாக எழும் பழக்கமோ இரவில் லேட்டாக தூங்கி காலையில் சீக்கிரமாக எழும் பழக்கமோ வேண்டாம். 


-இவ்வாறு நன்றாக தூங்குவதால் நீங்கள் தூக்கத்தில் உளருவதை கட்டுப்படுத்த முடியும். 


-சிலர் ஏதேனும் கவலை அல்லது மன அழுத்தம் இருக்கும் சமயங்களில் தூக்கத்தில் பேசுவர். இதைப்போக்க, தூங்குவதற்கு முன்னால் உங்கள் மனதை சுத்தப்படுத்துவது மிகவும் முக்கியம். கவலை அல்லது மனசோர்வான உணர்வோடு படுக்கைக்கு செல்ல வேண்டாம். தூங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் மூச்சு பயிற்சி செய்வது அல்லது தியானம் செய்வது மனதை அமைதிப்படுத்த உதவும். இதனால், நாம் தூக்கத்தில் உளருவதில் இருந்தும் தப்பிக்கலாம். 


மேலும் படிக்க | International Yoga Day: ஆளுமை பண்பை வளர்த்துக் கொள்ள தினமும் யோக செய்யுங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ