கேரளாவில் தாலி கட்டும் போது தடுத்த போலீஸ்..சினிமா பாணியில் நடந்த சம்பவம்! முழு விவரம்!

கேரளாவில் காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொள்ள இருந்த போது போலீஸார் வந்து தடுத்துள்ளனர். பின்னர் என்ன நடந்தது?  

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Jun 21, 2023, 12:44 PM IST
  • கேரளாவில் காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொள்ள இருந்த போது போலீஸார் வந்து தடுத்துள்ளனர்.
  • திருமணத்திற்காக, மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்ட தயாராக இருந்தார்.
  • அப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
கேரளாவில் தாலி கட்டும் போது தடுத்த போலீஸ்..சினிமா பாணியில் நடந்த சம்பவம்! முழு விவரம்!  title=

கேரளாவில் காதல் திருமணத்தை சினிமா பாணியில் கடைசி நிமிடத்தில் போலீஸார் தடுத்தி நிறுத்தியுள்ளனர். அதோடு மணமகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர். 

காதல் ஜோடி:

கேரள மாநிலம் கோவலம் பகுதியைச் சேர்ந்த அகில், அல்பியா என்ற இஸ்லாமிய பெண்ணை காதலித்து வருகிறார். இவர்கள் காதலுக்கு அகில் வீட்டில் ஓகே சொல்ல, அல்பியா வீட்டில் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய அல்பியா முடிவெடுத்துள்ளார். அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவலம் பகுதியில் உள்ள இந்து கோவிலில் இவர்கள் திருமணம் செய்ய அகில் வீட்டில் திட்டமிட்டனர். 

மேலும் படிக்க | தப்பிக்க ஓடும் நபர்... துரத்தும் சினம் கொண்ட யானை: பகீர் வைரல் வீடியோ

தூக்கிச்சென்ற போலீஸார்..

திருமணத்திற்காக, மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்ட தயாராக இருந்தார். அந்த சமயத்தில் சினிமாவில் வருவது போல இரண்டு காரில் வந்த போலீசார் அல்பியாவை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றனர். அதனை தடுக்க அகில் கடுமையாக முயற்சி செய்தார். அதோடு அல்பியாவும் கதறியுள்ளார். ஆனாலு அவரை காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். 

நீதிமன்றத்தில் ஆஜர்..

அதன் பிறகு கோவலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனமகன் ஆஜர்  படுத்தப்பட்டார். அங்கு அல்பியா நீதிபதியிடம் தான் அகிலை காதலிப்பதாகவும், அவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து அல்பியா அகிலை திருமணம் செய்து கொள்ளலாம் என நீதிபதி கூறினார். 

இந்த சூழலில், கோவலம் போலீசார் ஊடகத்தாரிடம் பேசுகையில், அல்பியா காணவில்லை என அவரது பெற்றோர் புகார் அளித்ததாகவும், அதனால் தான் அவரை போலீசார் அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் இதற்கு அல்பியா மறுப்பு தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பே அகிலை திருமணம் செய்து கொள்ள வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என காவல்நிலையத்தில் கடிதம் அளித்ததாக அல்பியா கூறியுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள அகில், அல்பியாவிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட போலீசார் மீது புகார் அளிக்க முடிவெடுத்துள்ளதாகவும், அல்பியாவை பார்க்க தான் சென்ற போது மோசமாக போலீசார் தன்னிடம் நடந்து கொண்டதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். அதோடு போலீசார் அல்பியாவை தூக்கிச் செல்லும் வீடியோவும் வெளியாகி வைரலானது. 

இப்போது இவர்கள் இன்று திருமணம் செய்துகொண்டுள்ளனர். இஸ்லாமிய பெண் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளார். இதற்கு அல்பியா வீட்டில் கடும் எதிர்ப்பும் இருந்து வருகிறது. இதற்கு நடுவே இந்த ஜோடிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் தான் நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது.

மேலும் படிக்க | Manslaughter: மகளை முதலைக்கு உணவாக்கிய அப்பா! ஜாதிவெறியில் ஆணவக்கொலை செய்த தந்தை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News