அடாவடி யூரிக் அமிலத்தை அடக்கி வைக்கும் சுரைக்காய்: இப்படி சாப்பிடுங்க போதும்
Uric Acid Control: யூரிக் அமிலம் அனைவரின் உடலிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் சிலரது உடலில் இதன் அளவு அதிகமாகின்றது.
Uric Acid Control: சமீப காலங்களில் பலருக்கு யூரிக் அமில அளவு அதிகரிக்கும் பிரச்சனை ஏற்படுகின்றது. இது பலரிடம் பரவலாக காணப்படுகின்றது. உடலில் பியூரினின் அளவு அதிகரிப்பதால், இரத்தத்தில் யூரிக் அமிலம் என்று அழைக்கப்படும் ஒரு வகையான ரசாயனம் உருவாகிறது. யூரிக் அமிலம் அனைவரின் உடலிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் சிலரது உடலில் இதன் அளவு அதிகமாகின்றது. அப்படி இதன் அளவு அதிகமானால், அது உடலில் பல வித சிக்கல்களை ஏற்படுத்துகின்றது.
உடலில் யூரிக் அமிலம் அதிகரித்தால், மூட்டு வலி, நடப்பதில் சிரமம், சிறிநீரக கல் போன்ற பல பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ள வேண்டி வரும். ஆகையால் யூரிக் அமிலத்தை எப்போதும் கட்டுக்குள் வைக்க வேண்டியது மிக அவசியம். பல இயற்கையான வழிகளில் யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்கலாம். இதற்கு உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். இதனுடன் இதை சரி செய்ய சில வீட்டு வைத்தியங்களும் உள்ளன. அப்படிபட்ட ஒரு வீட்டு வைத்தியம் பற்றி இந்த பதிவில் காணலாம்.
யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கான காரணம் என்ன?
உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்புக்கு முக்கியமான காரணம் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற மோசமான உணவுப் பழக்கம். இவற்றின் காரணமாக உடலில் யூரிக் அமிலத்தின் அளவு வேகமாக அதிகரிக்கத் தொடங்குகிறது. உடலில் யூரிக் அமிலம் அதிகரித்தால், யூரிக் அமில படிகங்கள் மூட்டுகளைச் சுற்றி குவியத் தொடங்குகின்றன. இதன் காரணமாக மெதுவாக கால்களில் வலி, வீக்கம், அசவுகரியம், இயலாமை ஆகியவை ஏற்பட ஆரம்பிக்கும்.
சுரைக்காய் கொண்டு அதிக யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துவது எப்படி?
உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருப்பவர்கள், தங்கள் உணவில் சுரைக்காய் (Bottle Gourd) சேர்த்துக்கொள்ள வேண்டும். சுரைக்காயில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். யூரிக் அமிலத்தை குறைப்பதிலும் இது பயன்படுகிறது. உடலில் யூரிக் அமிலம் அதிகரித்தால், அதை விரைவாக குறைக்க சுரைக்காய் உட்கொள்ளலாம். சில நாட்களில் இதனால் நிலைமை சரியாகத் தொடங்கும்.
மேலும் படிக்க | கெட்ட கொழுப்பை இயற்கையான வழியில் கட்டுக்குள் கொண்டு வர இந்த எளிய பானங்கள் உதவும்
சுரைக்காயில் உள்ள ஊட்டச்சத்துகள்
சுரைக்காயில் வைட்டமின் பி, வைட்டமின் சி, இரும்புச்சத்து, ஃபோலேட், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற கூறுகள் அதிகமாக உள்ளன. இதுமட்டுமின்றி, இதில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்தும் உள்ளது. இது உடலில் சேரும் அழுக்குகளை உடனே அகற்றி பியூரின்கள் படிகங்களாக உருவாவதை தடுக்கிறது.
சுரைக்காய் சாறு
யூரிக் அமிலம் (Uric Acid) அதிகமாக உள்ளவர்கள் தினமும் சுரைக்காய் சாறு குடிக்கலாம். இது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சுரைக்காய் சாறு தயாரிக்க, முதலில் சுரையாயை நன்றாக கழுவி, சுத்தம் செய்து, தோலுரித்து, நறுக்கிக்கொள்ளவும். பின்னர் சுரைக்காய் துண்டுகளை மிக்ஸியில் அரைக்கவும். இப்போது அதை வடிகட்டி அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குடிக்கலாம். காலையில் வெறும் வயிற்றில் இதை தினமும் குடிக்க வேண்டும். எனினும், இதை உட்கொள்ளத் தொடங்கும் முன், உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
சுரைக்காய் சாறு குடிப்பதால், யூரிக் அமில அளவு குறைவதோடு, கலோரிகளும் வேகமாக குறையும், எடை இழப்பிலும் இது உதவியாக இருக்கின்றது.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
மேலும் படிக்க | சுகர் லெவல் சொன்னபடி கேட்க இரவில் இதை குடிங்க போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ